Friday, 29 May 2015

மோடி ஆட்சியின் லட்சணம் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கப்படவில்லை கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிர்ச்சித் தகவல்.

பிரதமர் நரேந்திர மோடியின்ஓராண்டு ஆட்சியில் எந்த வேலை வாய்ப்பும் ஏற்படுத்தப்படவில்லை; உற்பத்தி அதிகரிக்கவில்லை; எந்த ஏற்றுமதி ஆர்டர்களும் கிடைக்கவில்லை என கார்ப்பரேட் நிறுவனங்களே ஒப்புக் கொண்டிருப்பதாக பிசினஸ் லைன் மற்றும் பிசினஸ் டுடே உள்ளிட்ட வணிகப் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.இது தொடர்பாகபிசினஸ் டுடே மற்றும் பிசினஸ் லைன் இதழ்கள் வெளியிட்ட செய்திகளில் கூறியுள்ளதாவது:மோடியின் திட்டங்களான `மேக் இன் இந்தியாஎன்றழைக்கப்படும் இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் திட்டம் மற்றும் இந்தியத் திறமை( ஸ்கில் இந்தியா ஆகியவை எந்த முதலீட்டையும் கொண்டு வரவில்லை என்பதோடு, வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதிலும் அது தோல்விக்கான அறிகுறிகளையே காட்டுகிறது.சமீபத்திய தொழிலாளர் அமைப் பின் ஆய்வு, “வேலைகளை உருவாக்கு வதில் மிகவும் மந்தமான போக்கே காணப்படுகிறது. பெரிய அளவில் வேலை வர்ய்ப்புகளை உருவாக்கும் உற்பத்தித் துறை யிலும் கட்டுமானத்துறையிலும், சுரங்கத் தொழிற் சாலைகளிலும் வளர்ச்சி மிகவும் குறைவாக உள்ளதால் அவற்றால் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை.” அன்டல் இன்டர்நேஷனல் இந்தியா என்ற கார்ப்பரேட் கம்பெனியின் அதிபர் ஜோசப் தேவசியா வேலைகளைஉருவாக்குவது இன்னும் நிறைவேறாத கன வாகவே உள்ளது என்று குறிப்பிடு கிறார்.ஜே கே டயர் இண்டஸ்ட்ரீஸ் என்றஇந்திய மற்றும் மெக்சிகோ கம்பெனி களின் அதிபர் விஜய் தேஷ்பாண்டே, மேக் இன் இந்தியா பிரச்சாரம் வெறும்அரசியல் வித்தையாக இருக்கக்கூடாது எனத் தெரிவித்தார்.இன்னொரு பக்கம் குளோபல் மேன்பவர் குழுமம் என்ற, வேலைக்கு ஆள் எடுக்கும்பன்னாட்டுக் கம்பெனியின் கணக்கெடுப்பின்படி, 58 விழுக்காடு வேலைக்கு ஆள் கிடைக்காமல் தவிப்பதாகவும் கூறுகின்றனர். இதில் 38 விழுக்காடு திறன்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.இந்த மேன்பவர் குழுமத்தின் இயக்குநரும் தலைவருமான ஸ்ரீகாந்த் ரெங்கராஜன், வேலை வாய்ப்பு உருவாக்குவதில் ஏராளமான எதிர்ப்பார்ப்புகள் உள்ளன என்று கூறியுள்ளனார்.டட்சே போர்சே என்ற நிறுவனத் தின் ஆய்வு அறிக்கை, நாட்டின் உற்பத்தி யும் ஏற்றுமதிக்கான ஆர்டர்களும் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய நிலை எப்படி இருந்ததோ அதே நிலைக்கு சென்று விட்டதாக கூறியுள்ளது, எம்என்ஐ என்ற வியாபாரம் குறித்த அளவீடுகளை காட்டும் அமைப்பு,கடந்த ஏப்ரலில் 63.9 பங்கு சந்தை வளர்ச்சி 2.5 விழுக்காடாக குறைந்து விட்டது என்று கூறியுள்ளது.கடந்த 2004 லிருந்தே உற்பத்தியானது மிகவும் குறைந்துவிட்டது என அதன் அறிக்கை கூறியுள்ளது. கம்பெனிகளின் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி ஆர்டர்கள் குறைந்துவருகின்றன. தற்போதைய மே மாதத் தில் 57.1 சதவீதமாக குறைந்து விட்டது.ஏற்றுமதி ஆர்டர்கள் கடந்த 2013லிருந் தது போன்று 53.6 விழுக்காடாக குறைந்து விட்டது. எனவே மேக் இன் இந்தியா தோல்வி அடைந்து விட்டது என அந்த அறிக்கையில் கூறியுள்ளது.

No comments: