குழந்தைகளின் மனதும், மூளையும் இந்த உலகுக்கு மிகவும் புதிது என்பதால், எதையும் எளிதாக நினைவில் வைத்துக் கொள்ளும். இது பரவலாக நாம் காணக்கூடிய ஒன்று. ஆனால், 2 வயதில் வில்லைப் பிடித்து இலக்கை குறி தவறாமல் எய்வது என்பது விதிவிலக்கான ஒன்று. அத்தகைய விதிவிலக்கான ஒன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குழந்தை இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. விஜயவாடாவைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தையின் பெயர் டோலி சிவானி. 2 வயது குழந்தைகள் அம்மாவுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் அன்புத் தொல்லைகளை தருவதை நாம் பார்த்திருக்க முடியும். ஆனால் சிவானியோ, அதற்குமாறாக அவரது தந்தையை தொல்லைக்கு ஆளாக்கி, வில் வித்தையில் தற்போது புதிய நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கியுள்ளார். நமது வாழ்த்துக்கள்.
No comments:
Post a Comment