Sunday 17 May 2015

16.05.15 திண்டுக்கல் நகர் கிளை மாநாடு...

அருமைத் தோழர்களே! நமது BSNLEU திண்டுக்கல் நகர் கிளையின் மாநாடு ,  16.05.15 சனிக்கிழமை மாலை, BSNL அவுட்டோர் அலுவலகத்தில், கிளைத் தலைவர் தோழர் A.ஞானசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. நமது BSNLEU சங்க கொடியை,2015- மே மாதம் பணிநிறைவு செய்ய உள்ள தோழர். R.அரசன் ஏற்றி வைத்தார். தோழியர்.S. சுமதி அஞ்சலி உரை நிகழ்த்தினார். தோழர்.J.ஜோதிநாதன், B/S வரவேற்பு உரை நிகழ்த்தினார். 
கிளைமாநாட்டினைதுவக்கிவைத்துமாவட்டசெயலர் தோழர்S.சூரியன் உரை நிகழ்த்தினார். அவரது உரையில் நமது BSNL அரங்கில நடந்து முடிந்த ஏப்ரல்-21 & 22 ஆகிய இரு நாட்கள் அதி உன்னத வேலை நிறுத்தம் குறித்த விபரங்களை விலகியதோடு, அதை ஒட்டி 01.05.15 அன்று டெல்லியில் நமது  FORUM சார்பாக DOT-SECY உடன் நடைபெற்ற பேச்சு வாரத்தை யின் விபரங்கள், அதற்கடுத்தாற்போல் JAC கூட்ட முடிவுகள், கடந்த 14.05.15 அன்று நடைபெற்ற  NJCM கூட்ட முடிவுகள், நமது மதுரை மாவட்ட அளவிலான பிரச்சனைகள் ஆகியவைகள் குறித்து விளக்க உரை நிகழ்த்தினார்.
அதன்பின் தோழர்கள், A.குருசாமி, BSNLEU-B/S-(O/D), சுசிலா மேரி,SNEA, S.அருளானந்தம் , B/S-NFTE-O/D, G. செபஸ்டியான்,B/S-NFTE-I/D, M.சௌந்தரராஜ்,BSNLEU-B/S-VDS, R.சக்திவேல், TNTCWU, S. உதயசூரியன் , B/S- TEPU, S.முபாரக் அலி, மாவட்ட செயலர் TNGEA,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மேலும் பணிநிறைவு பாராட்டு விழா கிளையின் சார்பாக தோழர்கள், R.அரசன், S.மலையாண்டி, K.ரெங்கசுப்ரமனியன், M.சண்முகம் ஆகியோருக்கு பொன்னாடைபோர்த்தி,நினைவு பரிசை மாவட்ட செயலர் தோழர்.S. சூரியன் வழங்கினார். 
அதன்பின் ஆண்டறிக்கை, வரவு-செலவு கணக்குகள் சமர்பிக்கப்பட்டு ஏற்கப்பட்டது.  நடை பெற்ற நிர்வாகிகள் தேர்வில் தலைவர், செயலர், பொருளர் பதவிக்கு முறையே, தோழர்கள் S.பரிமள ரெங்கரஜ், J. ஜோதிநாதன், A.பாக்யராஜ்  ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறுதியாக தோழர். K.S.ஆரோக்கியம் நன்றி கூற, மாநாடு இனிதே நிறைவுற்றது. 

1 comment:

AYYANARSAMY.R said...

அனைவருக்கும் வணக்கம்.
1௦ வது திண்டுக்கல் நகர்க்கிளை மாநாட்டிற்கு வருகை புரிந்து மாநாட்டினை சிறப்பித்த தோழர்கள் அனைவருக்கும் நன்றி.

தோழமையுடன்...
இராம.அய்யனார்சாமி
VICE PRESIDENT
BSNLEU/DINDIGUL URBAN BRANCH.