துருக்கியில் மே தின பேரணிக்கு அனுமதி மறுத்து காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். உழைப்பாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் உள்ள பெசிக்தஸ் சதுக்கத்தில் இருந்து தக்சிம் சதுக்கம் வரை மே தின பேரணி நடத்த அந்நாட்டுஎதிர்க்கட்சிகளும், தொழிற்சங்கங்களும் அறைகூவல் விடுத்திருந்தன.ஆனால், இப்பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்து விட்டார். மேலும், இப்பேரணியை தடுத்து நிறுத்தும் வகையில் சாலையில் முள் கம்பி வேலி அமைத்தும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் திட்டமிட்டபடி மே தின பேரணி நடத்த வெள்ளிக்கிழமை காலை பெசிக்தஸ் சதுக்கத்தில் எதிர்க்கட்சியினரும், தொழிற்சங்கத்திரும், தொழிலாளர்களும் திரண்டனர். அவர்களை கலைந்து செல்லும்படி காவலர்கள் எச்சரித்தனர். ஆனால் அவர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். அப்பொழுது அவர்களை காவலர்கள்தடுத்து நிறுத்தியதுடன், தடியடியும்நடத்தினர்.இதனால் தொழிலாளர்களுக்கும், காவலர்களுக்கும் பயங்கர மோதல் ஏற்பட்டது.இதைத்தொடர்ந்து தொழிலாளர்கள் மீது காவலர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். ஆனால்,கூட்டம் கலைந்து செல்லாததால் ரப்பர் தோட்டாக்கள் நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டனர்.இதில் ஏராளமான தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர். மேலும், பேரணியில் பங்கேற்ற தொழிலாளர்கள் பலரை காவல்துறையினர் கைது செய்தனர்.
No comments:
Post a Comment