Saturday 9 May 2015

மே - 9 உலகையே அச்சுறுத்திய பாசிசத்தை சோவியத் செஞ்சேனை தடுத்து நிறுத்தி வீழ்த்திய மகத்தான வரலாற்றின் 70ம் ஆண்டு இன்று!

மே 9 வெற்றி தினம்....பாசிஸ்டுகள் ஜனநாயகத்தின் அடிப்படையான தத்துவங்களாகிய பேச்சு சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் முதலியவைகளை முழு மூச்சுடன் எதிர்க்கின்றனர். சர்க்காரைத் தெய்வமாக்கி அத்தெய்வத்தின் சன்னிதானத்தில் ஜனங்களின் நியாயமான உரிமைகளைப் பலியிடுகிறது பாசிசம்.1933ம் ஆண்டில் ஜெர்மனியின் ஹிட்லர் அதிகாரத்துக்கு வந்ததைத் தொடர்ந்து உலகம் முழுவதையும் அச்சுறுத்தக் கூடிய பாசிச அபாயம் தலைதூக்க ஆரம்பித்தது. ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி மீதும்,
இதர முற்போக்கு சக்திகள் மீதும் முதலில் தனது தாக்குதலைத் தொடங்கினார்.ஹிட்லரின் ரகசியத் திட்டம், முதலில் சோவியத் நாட்டை கைப்பற்றுவது பின்னர் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்காவை கைப்பற்றுவது, அதன் பின் இதர நாடுகள் அனைத்தையும் தனது பிடியின் கீழ் கொண்டு வருவது.இத்தகைய ஆக்கிரமிப்பு எண்ணத்துடன் துவங்கியது இரண்டாவது உலக யுத்தம். 1939ல் துவங்கி ஆறு ஆண்டு காலம் நீடித்து கோடிக்கணக்கான மக்களை பலி கொண்ட அந்தக் கோரமான போர் சோவியத் நாட்டின் செஞ்சேனையால் ஸ்டாலின் தலைமையில் முறியடிக்கப்பட்டது.
1945 ஏப்ரல் 30ல் இட்லர் தற்கொலை செய்து கொண்டான். 1945 மே 7ம் தேதி ஜெர்மனியின் நாடாளுமன்றக் கட்டித்தின் மீது (ரீச் ஸ்டாக்) அரிவாள் சுத்தியல் பொறித்த செங்கொடி ஏற்றப்பட்டது. பெர்லின் வீழ்ந்தது. ஜெர்மனி நாஜிப் படைகள் சரணடைந்தன. மே 9ம் தேதியை சோவியத்நாடு வெற்றி தினமாகக் கொண்டாடியது.

No comments: