Monday, 4 May 2015

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில்தொடக்கம் . . .

கத்திரி வெயில் இன்று  தொடங்கி 25 நாட்கள் நீடிக்கும். 110 டிகிரி வரை வெயில் கொளுத்தி மக்களை வாட்டி வதைக்கும் என தெரிகிறதுதப்பிப்பது எப்படி? கத்திரி வெயில் காரணமாக உடலில் நீர்சத்து குறையும், பலவீனமானவர்களுக்கு உடல்நிலை பாதிக்கும் வாய்ப்பு அதிகம். இதனால் வயதானவர்கள், சர்க்கரை, ரத்த கொதிப்பு நோய் உள்ளவர்கள், குழந்தைகள் பகல் நேரத்தில் வெயிலில் சுற்றுவதை தவிர்க்கவேண்டும். அப்படி சுற்ற நேர்ந்தால் தொப்பி, குடை போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். காரமான உணவு வகைகளை தவிர்த்தல் வேண்டும். கடைகளில் விற்கப்படும் வாட்டர் பாக்கெட்களை வாங்கி குடிக்கக்கூடாது. அதிகமாக தண்ணீர் குடிக்கவேண்டும். கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரை பருகினால் நல்லது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினமும் முருங்கை கீரை, மோர், பழச்சாறு அருந்துதல், வெப்பத்தை உள்வாங்காத வெள்ளை காட்டன் உடைகள் அணிந்து வந்தால் ஓரளவு வெயிலில் இருந்து தப்பிகலாம். 

No comments: