Monday, 29 December 2014

ஆங்கில ஆட்சியை வேடிக்கை பார்த்த வாஜ்பாய்க்கு விருதா?

இது சர்வதேச நிதிமூலதனம் கோலோச்சும் காலம். உலக முதலாளித்துவ நெருக்கடி தீவிரமடைந்துள்ளது. கடந்த 6 ஆண்டுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள உலக முதலாளித்துவம் முயற்சி செய்கிறது. நெருக்கடி காரணத்தால் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் வேலைவாய்ப்பு வெகுவாகக் குறைக்கப்பட்டு வருகிறது.கூலி வெட்டப்படுகிறது. இதை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர். இருக்கும் உரிமையைப் பாதுகாக்கும் போராட்டம் நவீன தாரளமயத்திற்கெதிரான போராட்டமாக மாற வேண்டும். இது ஏகாதிபத்தியத் திற்கு எதிரான போராட்டமாக உருப்பெற வேண்டும்.  
மதவெறி மனிதகுலத்தின் எதிரி
சமீபத்தில் பயங்கரவாதச் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன. பாகிஸ்தானில் பெஷாவர் நகரில் பள்ளிக் குழந்தைகள் 160 பேர் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். எந்த மதத்தின் பின்னணியில் வந்தாலும் மதவாதத்தை, மதவெறி பயங்கரவாதத்தை நிராகரிக்க வேண்டும். தலிபான் பயங்கரவாதிகளை வளர்த்து விட்டதில் அமெரிக்காவின் பங்கும், சவூதி அரேபியாவின் பங்கும் உள்ளது.மதவெறி என்பது மனிதகுலத்தின் எதிரி. பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற கடந்த காங்கிரஸ் அரசும், இன்றைய பாஜக அரசும் தயாரில்லை. ஏனெனில். இஸ்ரேலுக்கு குடைபிடிக்கும் நாடாக அமெரிக்கா இருப்பதே இதற்குக் காரணமாகும்.
காட்டிக்கொடுத்தவர்களா தேசபக்தர்கள்?
இந்தியாவில் ஆர்எஸ்எஸ் முழு நேர ஊழியரான நரேந்திர மோடி பிரதமராகியுள்ளார். 4 மாநிலங்களில் முதல்வர்களாகவும், இந்திய கேபினட்டில் அமைச்சர்களாகவும் ஆர்எஸ்எஸ்காரர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இந்திய நாடாளுமன்ற மேடையில் நின்றுகொண்டு, இந்துத்துவா எங்கள் குடும்பம் என வெங்கையா நாயுடு சொல்லும் அளவிற்கு தைரியம் பாஜகவிற்கு ஏற்பட்டுள்ளது. ஆட்சி கைக்கு வந்த இறுமாப்பில் வாஜ்பாய்க்கு பாரதரத்னா விருது வழங்குகிறார்கள்.இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பார்வை யாளராக இருந்ததையும், போராட்டத்தில் யார் யார் கலந்து கொண்டார்கள் என்று பிரிட்டிஷ் அரசுக்கு வாஜ்பாய் பட்டியல் தந்ததையும் பிரண்ட்லைன் ஏடு வெளிப்படுத்தியுள்ளது. ஆர்எஸ்எஸ் பிதாமகன் எனக் கூறப்படும் கோல்வால்கர் அந்தமான் சிறையில் வாடிய தாக கூறுகிறார்கள்.பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கேட்டு இந்தியா இளைஞர்களை நல்வழிப் படுத்துவேன் என்று கடிதம் எழுதியவர்தானே இந்த கோல்வால்கர்? பகத்சிங்கை விடுதலை செய்ய வேண்டும் என்றுஅவரது தந்தை எழுதிய கடிதத்திற்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தவர்தானே கோல்வால்கர்?வரலாற்றின் எந்த இடத்திலும் ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தையோ, அமெரிக்க ஏகாதிபத்தியத் தையோ எதிர்க்கவில்லை.
சம்பளம் கேட்காதே என்று சொல்வதுதானே கீதை?
இந்தியாவிற்கு ஜனவரி மாதம் ஒபாமா வருவதற்காக சிவப்புக் கம்பள வரவேற்பளிக்க இன்சூரன்ஸ் துறையைச் சீர்குலைக்கும் அவசரச்சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. நாடாளுமன்றம் நடந்து முடிந்த அடுத்த நாள் இந்த சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாடாளுமன்ற ஜனநாயகத்தையே படுகொலை செய்திருக் கிறார்கள். பகவத்கீதையை இந்தியாவின் பொதுநூலாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடமையைச்செய்; பலனை எதிர்பாரதே எனக்கூறும் கீதையின் உபதேசத்தை அதானியிடமோ, டாடா, பிர்லா விடமோ மோடி சொல்ல முடியுமா? சம்பளம், போனஸ், குறைந்தபட்ச கூலி ஆகியவற்றைக் கேட்காதே என்பது தான் கீதை சொல்வது. நமது வாழ்வுரிமை மீது தாக்குதலை நடத்தும் பாஜகவின் மதவெறிக்கு எதிராக அனைத்து இடதுசாரி சக்திகளையும், ஜனநாயக சக்திகளையும், அறிவுஜீவிகளையும் ஒன்றிணைப்போம். - .வாசுகி

போக்குவரத்து ஊழியர் வேலை நிறுத்தம் - முடங்கின...

போக்குவரத்துஊழியர் வேலை நிறுத்தம் - அரசுப் பேருந்துகள் முடங்கின சாலைகள் வெறிச்சோடின










வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசுப்போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சென்னையில் உள்ள மாநகர அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பல்லவன் இல்லம் முன்பு கூடினர். அவர்கள் மத்தியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்பி,& CITU மாநிலத்தலைவர் .சவுந்தரராசன் எம்எல்ஏ ஆகியோர் பேசினர். வேலைநிறுத்தம் காரணமாக டெப்போவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகள்.
நியாமான கோரிக்கையுடன் போராடும் போக்குவரத்து ஊழியர் சங்கங்களுடன் அரசு முறையாக பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது நமது விளைவு ஆகும்...

நமது BSNLபாதுகாப்பு இயக்கங்கள், மாநிலத்தில் சில...

அருமைத்தோழர்களே ! மதுரை மாவட்டத்தில் நாம் நடத்திய "SAVE BSNL" உள்ளிட்ட,நமது தமிழ் மாநிலத்தின் சில மாவட்டங்களில் நடைபெற்ற  BSNLபாதுகாப்பு இயக்கங்களின் புகைப்படத்தை நமது தமிழ் மாநில சங்கம் வெளியட்டுள்ளது ... 

Sunday, 28 December 2014

காப்பீட்டு ஊழியர்களுக்கு ஆதரவாக பங்கேற்பு ...

அருமைத் தோழர்களே ! மத்திய மோடி அரசு காப்பீட்டு துறையில் 49 சதவீதம் அந்நிய முதலீட்டை உயர்த்துவது என்று தவரான முடிவை எடுத்துள்ளதை கண்டித்து காபீட்டு ஊழியர் சங்கம் போராட்ட அறிவிப்பை விடுத்துள்ளது. போராடும் இன்சூரன்ஸ் ஊழியகளுக்குAIIEAக்கு  ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில்  நமது உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள  நமது BSNLEU தமிழ் மாநில சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது ...

மத்திய சங்கத்தின் செய்திகள் -மாநில சங்க சுற்றறிக்கை...

அருமைத் தோழர்களே ! நமது (CHQ) மத்திய சங்கத்தின் முக்கிய செய்திகள் குறித்த முழுமையான விபரங்களை உள்ளடக்கி நமது  தமிழ் மாநில சங்கம்  சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது ...

Saturday, 27 December 2014

26.12.2014 பதிவை ஏற்படுத்திய பழனி கிளை . . .

அருமைத் தோழர்களே! BSNLலில் உள்ள ஊழியர் சங்கங்கள் + அதிகாரிகள் சங்கங்கள் கூட்டமைப்பு (FORUM)சார்பாக இந்திய நாடு முழுமைக்கும்  "SAVE BSNL" என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய நாடு முழுவதும்  1 கோடி கையெழுத்தை பொதுமக்களிடம் பெறுவது  என்ற அகில இந்திய FORUM அறை கூவலுக்கினங்க, நாம் மதுரை தொலை தொடர்பு மாவட்டத்தில் கடந்த 11.12.2014 அன்று மதுரையில் மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர்.ஆர். அண்ணாதுரை,MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம். அதன்பின் 15.12.2014 அன்று திண்டுக்கலில் மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர். கே. பாலபாரதி MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம். அதற்கு பிறகு பெரியகுளத்தில் 22.12.2014 அன்று  மக்கள் பிரதிநிதி சட்டமன்ற உறுப்பினர், மரியாதைக்குரிய தோழர் எ. லாசர் ,MLA அவர்களை  வைத்து கையெழுத்து நிகழ்ச்சியை துவக்கினோம்.  
அதனை தொடர்ந்து தற்போது 26.12.2014 அன்று  மரியாதைக்குரிய பழனி நகர் மன்ற  தலைவர் திரு. ஆ. வேலுமணி அவர்களை வைத்து கையெழுத்து இயக்கத்தை துவக்க பதிவை ஏற்படுத்திய பழனி கிளையை  நமது மதுரை மாவட்டFORUMசார்பாக மனதார வாழ்த்துகிறோம். . . .நிகழ்ச்சிக்கு தோழர். அன்பழகன் தலைமை தாங்கினார். வந்திருந்த அனைவரையும் உரிய முறையில் வரவேற்று உரை நிகழ்த்தினார் மாவட்ட உதவித் தலைவர் தோழர்.கணேசன். அதன்பின்  "SAVE BSNL" என்ற கோரிக்கையை முன்வைத்து நாடுமுழுவதும்  1 கோடி கையெழுத்தை பொதுமக்களிடம் பெறுவதின் நோக்கம் குறித்து BSNLEU மாவட்ட செயலரும், FORUM கன்வீனருமான தோழர்.எஸ். சூரியன் விளக்கவுரை நிகழ்த்தினார். தொடர்ந்து மரியாதைக்குரிய பழனி நகர் மன்ற  தலைவர் திரு. ஆ. வேலுமணி அவர்கள் முதல் கையெழுத்து இட்டு  இயக்கத்தை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து தோழர்கள் சி . செல்வின் சத்தியராஜ், மாவட்ட தலைவர், எஸ். ஜான் போர்ஜியா, மாநில துணைத் தலைவர் கோரிக்கையை விளக்கி பேசினர்.இறுதியாக தோழர். கே. பழனிகுமார் நன்றிகூற நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
பணி  நிறைவு பாராட்டு விழா 
கடந்த 33 மூன்று ஆண்டுகளாக பழனி துனைக்கோட்டம் கோரிக்கடவு தொலைபேசியகத்தில் பணியாற்றி 31.12.2014 அன்று பனி நிறைவு பெறும் அருமைத் தோழர் S.T.கோபாலகிருஷ்ணன், டெலிகாம் மெக்கானிக் அவர்களுக்கு நமது பழனிக் கிளை சார்பாக மிக விமர்சியாக பனி நிறைவு பாராட்டு விழா நடத்தப்பட்டது. தோழர் S.T.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி எஸ். சூரியன் வாழ்த்துரை வழங்கினார். தோழர்.சி . செல்வின் சத்தியராஜ் நினைவு பரிசு வழங்கி வாழ்த்துரை வழங்கினார். தோழர்.எஸ். ஜான் போர்ஜியா, கே.மாரிமுத்து, சாது சிலுவைமணி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்தி பேசினர். இறுதியாக தோழர்.S.T. கோபால கிருஷ்ணன், ஏற்புரை நிகழ்த்த விழா இனிதே நிறைவுற்றது. 

கார்ட்டூன் . . . கார்னர் . . .


சமையல் காஸ் மானியம்-BSNLநிறுவனம், இலவச SMSசேவை.

சமையல் காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டுவிட்டதா என்பதை அறிய, BSNL., நிறுவனம், இலவச SMS., சேவையை அறிமுகம் செய்துள்ளது. இச்சேவையை, ஆதார் எண் உள்ளவர்கள் மட்டுமே பயன்படுத்தமுடியும்.
காஸ் மானியம் பெற, ஆதார் எண்ணோடு, வங்கிக் கணக்கு எண் அளிக்க வேண்டும். ஆதார் எண் இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுக்க வேண்டும். ஜனவரி முதல், இந்த நடைமுறை அமலுக்கு வருவதால், இம்மாத இறுதிக்குள், ஆதார் எண் அல்லது வங்கிக் கணக்கு எண்ணை, காஸ் முகமை, வங்கியிடம் அளிக்கும் பணி, மும்முரமாக நடக்கிறது. காஸ் முகமை மற்றும் வங்கியில் இந்த விவரங்களை அளித்த பின், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கு இணைக்கப்பட்டதா என்பதை அறிய, இவலச எஸ்.எம்.எஸ்., சேவையை, பி.எஸ்.என்.எல்., அறிமுகம் செய்துள்ளது. வாடிக்கையாளர்கள், 9999/ என, மொபைல் போனில் அழுத்தினால், 12 இலக்கம் கொண்ட ஆதார் எண் கேட்கும். ஆதார் எண்ணை பதிவு செய்தால், காஸ் மானியம் பெற வங்கிக் கணக்கு எண், இணைக்கப்பட்டு விட்டதா என்ற தகவலை அறியலாம்.

கடனை திருப்பி செலுத்தாத- பெரும் முதலாளிகள்...

வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது வங்கிக் கடன் செலுத்தாதவர்களின் முழுபட்டியல் வெளியிடப்படும் என்று அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் வெங்கடாசலம் திருச்சியில் நிருபர்களிடம் தெரிவித்தார்.அனைத்திந்திய வங்கி ஊழியர்சங்க அகில இந்திய பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் திருச்சியில் நிருபர்களிடம் கூறிய தாவது:வங்கி ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு நவம்பர் 2012 முதல்நிலுவையில் உள்ளது. தொழிற் சங்கங்கள் கொடுத்த கோரிக்கைகள் 2 வருடங்களாக ஏற்கப்படவில்லை. உடனடியாக ஊதிய உயர்வு கோரி அனைத்திந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் பிறவங்கி சங்கங்கள் வரும் ஜனவரி 7ல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தமும், ஜனவரி 21 முதல் 24வரை 4நாட்கள் தொடர் வேலை நிறுத்தமும் மார்ச் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளன.
காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் அவசர சட்டத்தை எதிர்க்கின்றோம். இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் 75லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுமக்களின் வைப்பு தொகை உள்ளது. வங்கி சீர்திருத்தம் என்ற பெயரில் அரசாங்கம் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முயற்சிப்பதோடு பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் தனியார் முதலாளிகள் வங்கிகள் துவங்க அனுமதி அளித்துள்ளது.இதன் மூலம் மக்களின் சேமிப்பு பணம் தனியார் முதலாளிகளின் வசம் சென்று வங்கிகள் திவாலாகும் அபாய நிலை ஏற்படவாய்ப்புள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 40க்கும் மேற்பட்ட தனியார்துறை வங்கிகள் நிர்வாக சீர்கேடுகளின் காரணமாக திவாலாகி உள்ளது. வங்கிகளின் வாராக்கடன் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெரிய முதலாளிகள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து பெற்ற கடனை திருப்பி செலுத்தாததே இதற்கு காரணம். இவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.கிங் பிஷர் விமான நிறுவனம் இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளுக்கு சுமார் 7ஆயிரம் கோடி ரூபாய் கடன் செலுத்த வேண்டியிருக்கிறது. அதன் நிறுவனர் மல்லையாவை வேண்டு மென்றே கடனை செலுத்தாதவர் என அறிவித்து அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் போது வங்கிக்கடன் திருப்பி செலுத்தாதோரின் முழுப்பட்டியலை வெளியிட இருக் கிறோம். வரும் பிப்ரவரி 2015 முதல் வங்கி சீர்திருத்தம் மற்றும் வாராக்கடன் தொடர்பாக அகில இந்திய அளவில் பிரச்சாரம் மற்றும்போராட்டம் மேற்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது.அதுமட்டு மல்லாமல் பொதுத்துறை வங்கி களை பலப்படுத்த மற்றும் வாராக்கடனை வசூல்செய்ய சரியான நெறிமுறை மற்றும் வழிக்காட்டுதல் களைக்கோரி அகில இந்திய அளவில் வேலை நிறத்தமும் நடை பெற இருக்கிறது என்றார்.

LICயில், நிலக்கரியில் தனியார் - அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49சதவீதமாக அதிகரித்து அனுமதிப்பது மற்றும் நிலக்கரி சுரங்கங்களை தனியாரிடம் அளிக்கும் அவசரச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையெழுத் திட்டுள்ளார் என குடியரசுத்தலைவர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் வேணு ராஜமோனி தெரிவித் துள்ளார்.BJP அரசு கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பொதுத்துறைகளை கலைத்து தனியாரிடம் தாரை வார்ப்பதை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது மற்றும் நிலக்கரிச்சுரங்கங்களை தனியாருக்கு அளிப்பது ஆகியவை குறித்து சட்ட திருத்தங்களை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தது.அமெரிக்கஜனாதிபதி ஒபாமாவின் இந்திய வருகைக்கு முன்னதாக அவரை மகிழ்விக்க இந்த மசோதாக்களை நிறைவேற்ற அவசரம் காட்டியது. ஆனால் மாநிலங்களவையில் ஆளுங்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாததால் இந்த சட்ட முன்வரைவுகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் BJP அரசு, மிக நெருக்கடி காலங்களில் மட்டும் பயன்படுத்தக்கூடிய அவசரச் சட்டங்களை உருவாக்கி அவற்றை குடியரசுத்தலைவரின் ஒப்புதலோடு நிறைவேற்றத் துணிந்தது.இதற்கு நாடு முழுவதும் கடுமையான கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன. இந்நிலையில் தற்போது குடியரசுத்தலைவர் இந்த சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்து கையெழுத்திட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் போராட்டம்: வி.ரமேஷ்
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்க பாஜக அரசு சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த அவசரச்சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதைக் கண்டித்தும், அவசரச்சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்சூரன்ஸ் ஊழியர்கள் போராட்டம் அறிவித் துள்ளனர்.இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வி.ரமேஷ், அவசரச்சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டிசம்பர் 29 திங்களன்று நாடு முழுவதும்இதர சங்கங்களுடன் இணைந்து இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு மதிய உணவு இடைவேளையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவோம் என அறிவித்தார்.
சட்டவிரோதமானது
-காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் மசோதாவையும் நிலக்கரி மசோதாவையும் அவசரச் சட்டத்தின் மூலமாக செயல்படுத்துவது முற்றிலும் சட்டவிரோதமானது; இது அரசியல் சட்டத்திற்கு இழைக்கப்படும் மோசடியாகும் என்று தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதிராஜேந்தர் சச்சார் கண்டனம் தெரிவித்துள்ளார்.தில்லியில் பத்திரிகையாளர்களி டம் பேசிய சச்சார் கூறியதாவது:இந்த மசோதாக்களை மத்திய அரசு அவசரச் சட்டங்களின் மூலம்நிறைவேற்ற முயற்சிப்பதே இவற்றைநாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை என்பதை வெட்கங்கெட்ட முறையில் ஏற்றுக் கொள்வதாகவே பொருள். இதுவே குடியரசுத்தலைவர் இந்த சட்டங்களுக்கு அனுமதி மறுப்பதற்கான நியாயமான காரணமாகவும் உள்ளது. இந்த விசயம் அவ்வளவு அவசரமானது. ஏன் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீட்டிக்கக் கூடாது?அவை கூடாதிருக்கும்போது ஒரு அவசர காலத்தில், அவசரச் சட்டத்தை உருவாக்குவதற்கான அதிகாரம் 1987ல் உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒரு கடுமையான நெருக்கடி நிலையைஎதிர்கொள்ளவே பயன்படுத்த வேண்டும். அரசியல் காரணங்களுக்காக வக்கிரமாக இதைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. மத்திய அரசின் அவசரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் செய்துகொண்ட ஒரு ரகசிய உடன்படிக் கையை காப்பாற்றவா என்பது தெரியவேண்டும். அவர்கள் இப்படிப்பட்ட சட்டமியற்றுவதிலுள்ள உத்தரவாதமற்ற சூழ்நிலையில் முதலீடு செய்ய மாட்டார்கள். ஏன் இப்படிப்பட்ட அவசரம்?காப்பீட்டுக் கழகம் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசுக்கு கொழுத்த லாபத்தை அளித்துக்கொண்டுதான் இருக்கிறது. நிலக்கரி குறித்த அவசரச் சட்டம் என்பது நிலக்கரி சுரங்கங்கள் தேசியமயமாக்கல் சட்டத்தை மீறுவதாகும். அந்த சட்டம் தனியார் நிலக்கரி சுரங்கங்கள் தோண்டுவதை அனுமதிக்கவில்லை. அவசரச் சட்டம் மூலம் நிலக்கரி சுரங்க தேசியமயச் சட்டத்தை மீறுவது எந்தவிதத்திலும் அனுமதிக்கப்பட முடியாதது. இவ்வாறு சச்சார் கூறியுள்ளார்.மத்திய அரசின் அவசரம் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் செய்து கொண்ட ஒரு ரகசிய உடன்படிக்கையை காப்பாற்றவா?நீதிபதி ராஜேந்தர் சச்சார்...