Friday, 31 May 2013

தமிழ்மாநில Forum கூட்டமுடிவுகள்



78.2 சத பஞ்சப்படி இணைப்பிற்கான 

தர்ணா  போஸ்டர் 



Thursday, 30 May 2013

கோவை வெற்றிவிழா கூட்டத்திற்கு 

ஸ்பெஷல் CL மாநில நிர்வாகத்தின் கடிதம்.



Wednesday, 29 May 2013

மே 31, 2013 அன்று பணி நிறைவு பெறும் தோழர்கள் :

  • K. BALASARASWATHY, SDE, NWP, EP CFA, TALLAKULAM, MADURAI
  • A. PANNEERSELVAM, LIFT OPERATOR, O/o. SDE AC & ELECTRICALS
  • D. RAJENDRAN, TTA, O/o. SDE CSC, TALLAKULAM, MADURAI
  • P.K. RAJENDRAN, TM, O/o. SDE PHONES, BATLAGUNDU
  • S. RAJENDRAN, DE, NWOP, CFA, THENI
  • P. RAMUTHAI, Gr. 'D', O/o. GM BSNL, MADURAI
  • Y. ROYAPPAN, TM, O/o. SDE SOUTH, DINDIGUL
  • C. SELVARAJ, TTA, O/o. SDOT, CUMBUM
  • S. SELVARAJ, STS (O), O/o. SDOT, CUMBUM
  • S. VIJAYALAKSHMI, CTM, O/o. GM BSNL, MADURAI
  • S. SANKARESWARI, CTM, O/o. SDE CSC, TALLAKULAM, MADURAI

பணி நிறைவு பெறும் மேற்குறிப்பிட்டுள்ள தோழர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க நமது மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறது.

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர். 
29.05.2013 
மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பிரச்சனைகளின் தீர்வுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி காணப்பட்டது.  மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்   S. ஜான்போர்ஜியா,  c. செல்வின் சத்தியராஜ், மாவட்ட சங்க நிர்வாகிகள்  தோழர்கள் S. சூரியன், R. ரவிச்சந்திரன், S. ராமலிங்கம் ஆகியோர் பேட்டியில் கலந்து கொண்டனர்.  

நிர்வாகத் தரப்பில் DGM (HR), AGM (HR) & SDE (HRD) ஆகியோருடன் கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.

பிரச்சனைகள் :
  • LEVEL-IV மற்றும் எல்லிஸ் நகர்  LIFT முறையாக இயங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.  LEVEL-IV LIFT ஒரு வாரத்திற்குள் பழுது சரிசெய்யப்பட்டு முறையான இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்றும், எல்லிஸ் நகர் LIFT டெண்டர் கோரப்பட்டுள்ளது என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BATLAGUNDU CSC-ற்கு எழுத்தர் பற்றாக்குறை உள்ளதை சுட்டிக்காட்டி விவாதித்தோம். உடனடியாக ஒரு எழுத்தர் மாற்றலிடப்பட்டுள்ளார்.
  • NEPP விடுபட்டுள்ள  ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென விவாதித்தோம்.  தற்போது  DPC முடிந்த நிலையிலுள்ளது.  ஒரு சில நாட்களுக்குள் விடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்விற்கான உத்தரவு வெளியிடப்படும்.
  • நிலக்கோட்டை தொலைபேசியகத்தில் WATER PIPELINE பழுது நீக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் தீர்வு ஏற்படுத்த நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • BIBIKULAM தொலைபேசியகத்திற்கு ENGINE ALTERNATOR தனியாகப் பொருத்தவேண்டுமென எடுத்து கூறினோம்.  வேறு மாவட்டத்திலிருந்து கூடிய விரைவில் புதிய ENGINE ALTERNATOR நிறுவப்படுமென  நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • தல்லாகுளம் CSC-க்கு JTO & TTA உடனடியாக நியமிக்கவேண்டுமென்ற நமது நியாயமான கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
  • விளாம்பட்டி  தொலைபேசியகத்திற்கு ஒரு ஒப்பந்த ஊழியர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
  • UPDATE செய்யப்பட SERVICE DIRECTORY அனைத்து அலுவலகங்களுக்கும் புதிதாக வழங்கப் பட வேண்டுமென்ற நமது கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 

இது தவிர, பல்வேறு CADRE-களின் இடமாற்றல்கள் குறித்து விவாதித்து உள்ளோம்.  நிர்வாகத் தரப்பில் சுமூகத் தீர்விற்கு இசைவு அளிக்கப்பட்டுள்ளது. 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்டச்செயலர் 

      கோவையில் நடைபெறும் நமது வெற்றிவிழா போஸ்டர் 

Friday, 24 May 2013

கோவை வெற்றிவிழாவில் சங்கமிப்போம்  !

நமது  BSNLEU சங்கத்தின் தொடர் வெற்றியை கொண்டாடும் முகத்தான், தமிழகத்திலேயே அதிக வாக்குகள் பெற்ற மாவட்டமான கொங்கு தேசத்தின் தலைநகரமான  கோவையில் 04.06.2013 அன்று கூடிடுவோம்.  

தமிழ் மாநில அளவிலான வெற்றிவிழாவை  நடத்திட கோவை தோழர்கள்  சீரிய பணியினை மேற்கொண்டிருக்கின்றார்கள்.  நமது மாவட்டத்திலிருந்து  வாய்ப்புள்ள தோழர்கள் அனைவரும்  வெற்றி விழாவில்  கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம். 

என்றும் தோழமையுடன்,
S. SOORIYAN - DIST SECY. 

Wednesday, 22 May 2013

78.2% பஞ்சப்படி  இணைப்பிற்கான ஆர்ப்பாட்டம்  - 22.05.2013

FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS அறைகூவலின்படி நமது மதுரை SSA-ல்  5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது .  


மதுரை LEVEL-IV வளாகத்தில் 22.05.2013 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு SNEA மாவட்டச்செயலர்  தோழர் M. சந்திர சேகரன்  தலைமை தாங்கினார்.  100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.  78.2% IDA இணைப்பை தாமதப் படுத்தும்  DoT / BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினைக் கண்டித்து
  • தோழர்  V. சூரப்பன் - TEPU அகில இந்திய அமைப்புச்செயலர் 
  • தோழர் S. கருப்பையா  - AIBSNLEA மாவட்டச்செயலர் 
  • தோழர் S. கந்தசாமி - SEWA  மாவட்டச்செயலர் 
  • தோழர் S. சூரியன் -  BSNLEU  மாவட்டச்செயலர் 
  • தோழர் M. கண்ணன் - WRU
ஆகியோர் உரையாற்றினர்.  இறுதியாக NFTE கிளைச்செயலர் வீரன் நன்றி கூறினார். 

22.05.2013 அன்று மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் S. முத்துக்குமார் - FNTO  மாவட்டச் செயலர்  தலைமை தாங்கினார். 75-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 
  • தோழர் A. அருணாசலம் - மாநில சங்க நிர்வாகி AIBSNLEA
  • தோழர் M. சந்திரசேகர் - SNEA  மாவட்டச்செயலர் 
  • தோழர் C. செல்வின் சத்தியராஜ் - BSNLEU மாநில அமைப்பு செயலர் 
ஆகியோர் உரையாற்றினர் . அதன் பின்னர் இறுதியாக  NFTE கிளைச் செயலர்  மெஹ்ராசுதின் நன்றி கூறினார். 

திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் A. பழனிவேலு - SNEA தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 
  • தோழர் S. ஜான் போர்ஜியா - BSNLEU மாநில துணைத்தலைவர் 
  • தோழர் S. உதயசூரியன் - TEPU
  • தோழர் G. செபஸ்டியன் - NFTE 
  • தோழர் M. முருகேசன் - FNTO
ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர் A. குருசாமி, BSNLEU கிளைச் செயலர் நன்றி கூறினார். 

தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் தமிழ்ராஜன் - SNEA தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது
  • தோழர் ஜான்சன்  மாணிக்கராஜ் - NFTE
  • தோழர் நாராயணன் - TEPU
  • தோழர் மைக்கேல் சிரில்ராஜ் - BSNLEU
ஆகியோர் உரையாற்றினர்.  இக்கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். 

கம்பத்தில் நடைபெற்றக் ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருப்பதி - BSNLEU தலைமை தாங்கினார்.  தோழர்  இளங்கோவன் - TEPU, தோழர் ஸ்ரீராமன் - BSNLEU ஆகியோர் உரையாற்றினர்.  இறுதியாக தோழர் விஸ்வாசம் - NFTE நன்றி கூறினார். 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன், 
மாவட்டச்செயலர்.

எம்.பி.யிடம் மனு. தினத்தந்திச் செய்தி.


Tuesday, 21 May 2013

மத்திய சங்கங்களின் அறைகூவலுக்கு இணங்க மதுரை மாவட்ட (forum) கூட்டமைப்பின் சார்பாக மரியாதைக்குரிய எம்.பி. திரு. மாணிக் தாகூர் அவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. தினமணி செய்தித்தாளில் வந்த செய்தி கீழே வெளியிடப்பட்டுள்ளது. (இதே மனு மரியாதைக்குரிய எம்.பி. திரு. சித்தன் அவர்களிடமும் அளிக்கப்பட்டது.)


Friday, 17 May 2013

FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS
மதுரை தொலைதொடர்பு மாவட்டம், மதுரை - 625 002.
------------------------------------------------------------------------------------------------------------

அருமைத் தோழர்களே ! வணக்கம்  !!

மதுரை மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் 16.05.2013 அன்று  மதுரை பொது மேலாளர்  அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு NFTE மாவட்டச்செயலர்  தோழர்  கே. முருகேசன் தலைமை தாங்கினார்.  

FORUM CONVENER தோழர் S. சூரியன் கூட்டத்தின் நோக்கமான 78.2% பஞ்சப்படி இணைப்பிற்கான மத்திய சங்கங்களின் போராட்ட அறைகூவலான 
    • 22.05.2013           -     ஆர்ப்பாட்டம் 
    • 05.06.2013           -     தர்ணா 
    • 12.06.2013           -     காலவரையற்றவேலைநிறுத்தம் 
ஆகிய இயக்கங்களை நமது மதுரை மாவட்டத்தில் சக்தியாக நடத்துவது குறித்த கருத்துக்களை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் AIBSNLEA மாநில நிர்வாகி தோழர் A. அருணாசலம், மாவட்டச் செயலர் தோழர் S. கருப்பையா, SEWA மாவட்டச்செயலர் தோழர் S. கந்தசாமி. SNATTA மாநிலச் செயலர்  தோழர் P. அழகுபாண்டியராஜா, TEPU மாவட்ட செயலர் தோழர் N. முருகன், SNEA மாவட்டச்செயலர் தோழர் M. சந்திரசேகரன், WRU மாவட்டச் செயலர் தோழர் L. கண்ணன் ஆகியோரும், சில முன்னணி  தோழர்களும் கலந்து கொண்டனர்.

DOT-யும், BSNL நிர்வாகமும் 78.2 சத IDA-வை  நமது சங்கங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கடந்த 12.06.2012 ஏற்பட்ட உடன்பாடை  அமுல்   படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கினை கடை பிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. 

கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளின் முழமையான கலந்தாலோசனைக்கு பின் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.  கூட்ட முடிவை  சுற்றறிக்கையாக வெளியிடுவது, கோரிக்கை விளக்கி நோட்டீஸ் வெளியிடுவது, போராட்டத் திட்டத்திற்கான POSTER வெளியிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

22.05.2013 ஆர்ப்பாட்டம் :  

  • காலை 10.00 மணிக்கு LEVEL - IV வளாகம்
  • மாலை 04.00 மணிக்கு GM அலுவலகம் 
  • தேனி, திண்டுக்கல், பழனி, கம்பம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. 

போராட்ட  தயாரிப்பு  விளக்க  கூட்டங்கள் :

அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்கண்ட தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் அனைத்து மாவட்ட செயலர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் போராட்ட தயாரிப்பு விளக்க கூட்டங்களை சக்தியாக நடத்துவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. 
  1. 20.05.2013 அன்று GM அலுவலக TRC-ல்  கூட்டம் நடத்துவது 
  2. 24.05.2013 அன்று LEVEL-IV LMR-ல்  கூட்டம் நடத்துவது 
  3. 27.05.2013 அன்று எல்லிஸ் நகரில்  கூட்டம் நடத்துவது 

தர்ணா போராட்டம் :

அனைத்து மாவட்ட செயலர்களும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம்  வெவ்வேறு தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று REVENUE  மாவட்டங்களில் தர்ணா நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டது.
  • 05.06.2013 - GM ஆபீஸ் முன்பு                 -     1000 Hrs. to 1700 Hrs.
  • 06.06.2013 - திண்டுக்கல் EXGE முன்பு  -     1000 Hrs. to 1700 Hrs.
  • 07.06.2013 - தேனி  EXGE முன்பு              -      1000 Hrs. to 1700 Hrs.           
தர்ணா நடத்துவதென முடிவெடுக்கப் பட்டது. 

தோழர்களே! கிளைச்சங்கங்கள்  ஆர்ப்பாட்டம், போராட்ட விளக்க கூட்டம், தர்ணா ஆகிய அனைத்து இயக்கங்களிலும் தங்களது பகுதியிலுள்ள அனைவரையும் முழுமையாக திரட்டிட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுகிறோம்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு   - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு" 
போராட்ட வாழ்த்துக்களுடன்,

                    K. MURUGESAN                                                     S. SOORIYAN      
     FORUM தலைவர் & D/S - NFTE.                 FORUM CONVENER & D/S - BSNLEU

 M. CHANDRASEKARAN              S. MUTHUKUMAR             S. KARUPPIAH
            D/S - SNEA                                  D/S - FNTO                    D/S - AIBSNLEA

N. MURUGAN                                       L. KANNAN                    S. KANDASAMY
   D/S - TEPU                                             D/S - WRU                          D/S - SEWA








Wednesday, 15 May 2013

மத்திய சங்க செய்தி 

14.05.2013 அன்று  திரு ஆர் . கே . உபாத்யாயா  CMD  அவர்களை நமது FORUM  சார்பாக சந்தித்து, ஏற்கனவே  Group of Ministers-க்கு  அளிக்கப்பட்ட MEMORANDUM  நகலை கொடுத்து பின் விவாதித்தனர்.  இந்த சந்திப்பில் FORUM  சார்பாக CONVENER தோழர் V.A.N . நம்பூதிரி, நமது பொதுச்செயலர் தோழர் P. அபிமன்யு, துணைப்பொது செயலர் தோழர் அனிமேஷ் மித்ரா, SNEA பொதுச்செயலர் தோழர் K. செபாஸ்டின், AIBSNLEA  பொதுச்செயலர் தோழர் PRAHLADRAI, மற்றும் தோழர் ராஜ்மௌலி - NFTE  செயலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனுவில் குறிப்பிட்டுள்ள கீழ்கண்ட  விஷயங்கள் குறித்து CMD அவர்கள் பெரும்பாலான FORUM கருத்துக்களை ஏற்றுக்கொள்வதாக உறுதி கூறினார்.
  1. Top management of BSNL should belong to the company, not on deputation.
  2. No disinvestment in BSNL.
  3. No  VRS in BSNL.
  4. Compensation for rural services.
  5. Procurement mechanism for Equipments for expansion work.
  6. Refund of BWA spectrum charges.
  7. Pension contribution should be actual basic pay and not on the maximum of pay scale.
  8. Reimbursement of licence fee.
  9. Exemption from payment to USO fund contribution.
  10. Exemption for BSNL from payment towards additional spectrum.
  11. Providing services to Central/State Govts., CPSUs, Banks etc.,
  12. Refund the interest on notional loan of Rs. 7500 Crores.
  13. Transfer of Assets and making land bank for commercial utilisation.
  14. Revival of Telecom Factories.
  15. Compensation for Cable damage for the work executed by Govt. agencies.
  16. Compensation for Telegraph Services.
  17. Abolition of Telephone Advisory Committees.
மேலும் நமது தலைவர்களிடம் 78.2% IDA இணைப்பு பற்றி DoT மற்றும் BRPSE  துறைகளிடம் வலியுறுத்துவதாக உறுதி அளித்தார். 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் 
மாவட்டச் செயலர் .

Thursday, 9 May 2013


போராட்ட அறைகூவல்


தோழர்களே !

டெல்லியில் இன்று (09.05.2013) நமது FORUM OF BSNL  UNIONS  &  ASSOCIATIONS  கூட்டம் நடைபெற்றது.   அக்கூட்டத்தில் 78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு உடனடி தீர்வு கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது.  78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் DoT  அந்த விஷயத்தை BRPSE-ன் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது காலம் தாழ்த்தும் போக்கே ஆகும்.  

ஆழ்ந்த விவாதத்திற்கு பின்னர், நமது FORUM  கீழ்கண்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதென முடிவெடுத்தது.  

இன்றைய கூட்டத்தில்,

தோழர் நம்பூதிரி (CONVENER ) 
தோழர் அபிமன்யு - பொதுச்செயலர், BSNLEU  
தோழர் C. SINGH  - பொதுச்செயலர்,  NFTE  
தோழர் செபாஸ்டின் - பொதுச்செயலர், SNEA 
தோழர் PRAHALAD  RAI  - பொதுச்செயலர், AIBSNLEA 
தோழர் ஜெயப்ரகாஷ் - பொதுச்செயலர், FNTO 
தோழர் சுரேஷ்குமார் - பொதுச்செயலர், BSNL  MS  
தோழர் ஷர்மா - தலைவர், WRU   ஆகியோர் கலந்து கொண்டனர்.

போராட்ட திட்டம்:

22.05.2013     -     ஆர்ப்பாட்டம்
05.06.2013     -     தர்ணா

12.06.2013 முதல் "கால வரையற்ற வேலை நிறுத்தம் "

நமது கிளைச்சங்கங்கள் தற்போதிருந்தே போராட்ட தயாரிப்பு பணிகளில்  ஈடுபடுமாறு வேண்டுகிறோம்.   அனைத்து போராட்ட திட்டங்களும் முழு வெற்றி பெற அயராது பணி புரிய வேண்டுகிறோம்.   போராட்டத்திற்கு தயாராவோம். 

என்றும் தோழமையுடன்,

எஸ். சூரியன், 
CONVENER , FORUM  &  மாவட்டச்செயலர்,  BSNLEU.



Wednesday, 8 May 2013

08.05.2013  GM-உடன்  மாவட்ட சங்கம் பேட்டி 


அருமைத் தோழர்களே! வணக்கம் !

நமது குரூப் C & D  ஊழியர்களுக்கு நாம் ஏற்கனவே பெற்றுக் கொடுத்த CUG Postpaid ஆக இருந்ததை இப்போது Prepaid இணைப்பாக மாற்ற உத்தரவிடப் பட்டுள்ளது. ஆகவே CUG-ல் உள்ள ஊழியர்கள்  Prepaid விண்ணப்பம் கொடுக்க வேண்டி உள்ளது .


மேலும் கடந்த மாதம் CUG  இணைப்பில் other Network calls பேசி உள்ளவர்களுக்கு Bill  வந்து உள்ளது.  இது பற்றி  CGM அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று 
Bill ரத்து செய்வதற்கு ஆவண  செய்ய வேண்டுமென GM  மதுரை  அவர்களிடம் கோரி உள்ளோம்.  GM  அவர்கள் உரிய முயற்சி எடுப்பதாக கூறி உள்ளார்.

இது தவிர திண்டுக்கல் CSC இடமாற்றம்,  வத்தலக்குண்டு CSC, தல்லாகுளம் CSC, தேனி CSC மற்றும் GM அலுவலக  CSC பிரச்சனைகளையும் விரிவாக விவாதித்துள்ளோம்.

மற்றும் சில விருப்பமாற்றல்கள் குறித்தும்  விவாதித்துள்ளோம்.தீர்வு ஏற்பட்டுள்ளது. பேட்டியின் போது DGM (HR) அவர்களும்,  AGM (HR) அவர்களும் உடனிருந்தனர் .

என்றும் தோழமையுடன் ,

எஸ் .சூரியன்  - மாவட்டசெயலர். 



    

மதுரை சொஸைட்டி



தோழர்களே !

BSNL-ல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் ஒற்றுமை கருதி  சிறிய சங்கமானாலும், பெரிய சங்கமானாலும் சமநிலை  என்ற நோக்கோடு  சொசைட்டியில் தேர்தலை தவிர்ப்பதற்காகவும், ஒன்றுபட்ட இயக்குனர்களை  தேர்ந்தெடுக்கலாம் என்ற முன்மொழிவை நமது BSNLEU  மாவட்ட சங்கம் சார்பாக முன்வைத்தோம்.

இந்த நல்ல முன்மாதிரியை அமுல்படுத்த AIBSNLEA  மாவட்ட செயலர் தோழர் எஸ். கருப்பையா அவர்கள் முயற்ச்சியை மேற்கொண்டார்.  கிட்டத்தட்ட அனைத்து சங்கங்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டன. ஆனால் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட NFTE  சங்கம் ஒற்றுமைக்கு உலை வைத்து  உடன்பாட்டை மறுதலித்தது.  எனவே, வேறு வழியின்றி தேர்தல் நடந்தது.

அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்களில்  நான் தான் தலைவர் என்ற சொல்லோடு சிலர் தோள் தட்டினர் - யார் எதிர்த்தாலும் தவிடுபொடி என்றனர் - 

மிரட்டல், உருட்டல், அதட்டல், ஆவேசம் எல்லாம் இணைந்த நாடகம் அரங்கேறியது - 

வென்றவர்களில் நம்மவர் இருவர் .... ஒருவர் அன்பானவர் - இன்னொருவர் இனிப்பானவர்.  இருவரும் கூட்டணித்தலைவர்கள் ஆலோசனைப்படி தெளிவாக அறிவித்தனர் "நாங்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லையென" .

சென்னை சொசையிட்டியில் நடத்திய விளையாட்டை மதுரை சொசையிட்டியை கைப்பற்றி விளையாட வஞ்சக வலை விரித்தது ஒரு கூட்டம். 

ஆனால் மக்கள் தெளிவானவர்கள். நானே தலைவர் என்ற சிலரின் பேராசை பகல் கனவானது. நல்ல வேலை மதுரை சொசைட்டி தப்பியது.

சூரியனையே  சுட்டெரிப்போம்  என்றார்கள் .... ... ...  ஆனால் 
சூரியனின் சூடு பொறுக்க முடியாமல் ............................ ஆனார்கள்.

மதுரை என்றும் மாமதுரைதான் என்பதை கற்றுக்குட்டிகள் புரிந்து கொள்ளட்டும்.  

Tuesday, 7 May 2013

LTC செல்ல ஒரு வாய்ப்பு 


LTC செல்லவதற்கு இருந்த தடை நீங்கி ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக LTC செல்ல முடியாமல் நமது ஊழியர்களும்,அதிகாரிகளும் மிகவும் சிரமத்திற்கு ஆட்பட்டு இருந்தார்கள்.நமது சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக 59 வது வயது முதல் உள்ளவர்கள் LTC செல்லலாம் என்ற கீழ்க்கண்ட உத்தரவு CORPORATE அலுவலகம் பிறப்பித்துள்ளது.

59 வயது உடையவர்கள் பயன் அடைந்து கொள்ளலாம்.

விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்



தலை நகர் செய்தி 


நமது மத்திய சங்கத்தின் சார்பாக அகில இந்திய தலைவர் தோழர் V.A.N. நம்பூதிரி அவர்களும், பொது செயலர் தோழர் P.அபிமன்யு அவர்களும் நேற்று திங்கள்கிழமை 06-05-2013 நமது BSNL நிர்வாகத்தின் DIR(HR), GM(SR )ஆகியோரை சந்தித்து உடனடியாக அனைத்து கவுன்சில்களும் அமைப்பதற்கான வழிகாட்டுதலை வழங்குமாறு வலியுறுதியுள்ளனர்.


S .சூரியன் -மாவட்ட செயலர் 

Sunday, 5 May 2013

DELHI NEWS












BSNLEU  மதுரை மாவட்ட சங்கம்

டெல்லிச் செய்தி . . .
தோழர்களே! அனைவருக்கும் வணக்கம்.

கடந்த 02.05.2013 அன்று BSNL-ல் உள்ள அனைத்து ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான  FORUM OF BSNL UNIONS & ASSOCIATION–ன் கூட்டம் டெல்லி BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு NFTE–ன் தலைவர் தோழர். இஸ்லாம் அஹமத் தலைமை தாங்கினார்.

நமது மத்திய சங்கத்தின் தலைவரும், கன்வீனருமான        தோழர் VAN. நம்பூதிரி அவர்கள், கடந்த கூட்டத்திற்கு பின் நடைபெற்ற நிகழ்வுகளோடு, 78.2 சதவீத பஞ்சப்படி பெறுவது, BSNL நிறுவன வளர்ச்சிக்காக திட்டமிடுவது போன்றவை குறித்து விவரித்தார்.

அனைத்து சங்கங்களின் சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஆழமான விவாதத்திற்குபின், BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு நிதி உதவி வழங்கிடவும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கிடையே நமது BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு கடைபிடிக்கும் பாரபட்சத்தை போக்கவும் வேண்டி நமது FORUM–ன் சார்பாக நிதி அமைச்சர்          திரு. ப. சிதம்பரம் தலைமையிலான மத்திய அமைச்சர் குழுவிற்கு ஒரு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.

v 78.2 சதம் பஞ்சப்படி இணைப்பு உத்தரவை மற்றும் நிர்வாகம் விரைவில் வெளியிட வலியுறுத்தி நிர்ப்பந்தம் செய்வது.

vLTC, Medical Allowance போன்ற சலுகைகள் ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

 நமது  FORUM-இன் அடுத்த கூட்டம்  07.05.2013 அன்று நடைபெறும்.

என்றும் தோழமையுடன்,                                                              
s. சூரியன்                                                                                                                                                                                 மாவட்ட செயலர் 

Saturday, 4 May 2013

மே 5 கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்




     




















'மனித குலத்தின் நன்மைக்காக
நாம் சிறப்பாகப் பாடுபடுவதற்குரிய
வேலையை நாம் தேர்ந்தெடுத்துவிட்டால்
அதன் எந்த சுமையும் நம்மை அழுத்த முடியாது,
ஏனென்றால் அது எல்லோருடைய நன்மைக்காகவும் 

செய்யப்படுகின்ற தியாகம்’...-- தோழர் கார்ல் மார்க்ஸ்

DIRECT RECRUITMENT FOR TELECOM TECHNICAL ASSISTANTS (TTA)

விவரம் அறிய இங்கே கிளிக் செய்யவும்

http://tamilnadu.bsnl.co.in/Final%20draft%20TTA_DR_%20ADVT_17042012.pdf
136 பேருக்கான overpay பிரச்சனை



தோழர்களே, 03.05.2013 அன்று கார்பரேட் அலுவலகம் மேற்கண்ட உத்தரவை வெளியிட்டுள்ளது. இவ்வுத்தரவு நமது ஊழியர்களுக்கு பாதகமாக உள்ளது என்பதை நமது மத்திய/மாநில சங்கத்திடம் இன்று (04.05.2013) வலியுறுத்தியுள்ளது நமது மாவட்ட சங்கம்.
நமது பொதுச் செயலரிடம் மொபைலில் தொடர்பு கொண்டோம். தோழர்.P.அபிமன்யு GS தலைநகர் டெல்லியில் தற்போது இல்லை. 06.05.2013க்குப் பின் டெல்லி சென்றவுடன் பிரச்சனை குறித்து விவாதிக்கவுள்ளார்.  

நமது மாவட்ட, மாநில, மத்திய சங்கத்தின் நிலைபாடு இப்பிரச்சனையில் ஏற்கனவே Executive களுக்கு இதே போன்ற பிரச்சனையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் Bond வாங்கிக் கொண்டு overpay பிடித்தம் செய்யவில்லை அதேமாதிரி நமது C & D ஊழியர்களுக்கும் அனுமதிக்க வேண்டும் என்பதே ஆகும்.
                                     என்றும் தோழமையுடன்,

மதுரை-2.                                   / எஸ்.சூரியன்/
04.05.2013                                 மாவட்டச் செயலர்.




Friday, 3 May 2013



துணைப்பொது மேலாளர் (நிதி)யுடன் 3.5.13 பேட்டி


ஊழியர்கள் வங்கி கடன் பெறுவதில் திடீரென தடங்கல் ஏற்பட்டது.  அதாவது ஒரு ஊழியர் ஒரு வங்கியில் மட்டும் தான் கடன் பெறமுடியும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. இது அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை உருவாக்கியது. இப்பிரச்சனை நமது மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக துணைப்பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் விவாதித்தோம். நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு கடிதம் ஒன்றும் கொடுக்க பட்டது. 

பேச்சு வார்த்தையின் இறுதியில் 25% Take Home Pay உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் வழக்கம் போல் வங்கிக்கடன் வழங்குவது என்ற முடிவு எட்டப்பட்டது. 

சுமூக முடிவை எடுப்பதற்கு உதவி புரிந்த துணைப்பொது மேலாளர் (நிதி) அவர்களுக்கு நமது மாவட்ட சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

BSNL EMPLOYEES UNION
MADURAI SSA, MADURAI – 625002.

Secretary:  S. Sooriyan                                                                                                                                                    03.05.2013

To
Shri. R. Rajeswaran,
Deputy General Manager (F & A),
 BSNL, Madurai SSA,
Madurai – 625 002.

Dear Sir,
Sub :  Denial of Bank loans to officials – Pray immediate intervention - Reg.
Kindly recall the informal discussion that we had with you over the subject matter mentioned here-in-above.  It is pertinent to point out that multivarious loans such as Personal loans, HBA, Scooter advance, Computer advance etc., etc., were sanctioned to the officials by our department earlier.  Now they had been stopped forthwith and the officials are directed to obtain the same from Banks that had been authorized for that purpose thro’ MOU by the Corporate office.  Till date there had been no hitch over that and there was a smooth flow over this issue.
But we came to understand that all of a sudden, the officials are denied the facilities to avail bank loans despite the availability of the requisite take home pay after deductions of EMI Calculations resulting in lot of sufferings to the officials.
Hence we request you to kindly intervene and cause instructions for the approval of loans submitted by the officials from different banks with which MOU is in operation, subject to the condition that minimum take home pay as per statutory rules is available.
In fine, we hope that you would definitely intervene and cause instructions for the necessary approval of loans from different banks as requested by the officials and help them at times of their crisis. We would ever remain indebted to you for your act of kindness.
Thanking you in anticipation, sir,
Yours faithfully,
Sd.... (S. Sooriyan)
Copy to:
1.      The General Manager, BSNL, Madurai SSA, Madurai-2
2.      The Deputy General Manager (HR), O/o. GM BSNL, Madurai-2.
3.       Com. S. Chellappa, Circle Secretary, BSNLEU, TN Circle, Chennai.
4.       All District Office-bearers and Branch Secretaries of BSNLEU in Madurai SSA.

Thursday, 2 May 2013

இதய பூர்வமான வாழ்த்துக்கள்


தோழர் ம. சௌந்தரராஜன் 30.04.2013 பணி நிறைவையொட்டி நமது மத்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்கங்களுக்கு மனமுவந்து முறையே ரூ. 1000, ரூ. 1000, ரூ. 5000 & ரூ. 2000  நிதி அளித்துள்ளார்.  மேலும் பணி நிறைவு செய்யும் நமது தோழர் சௌந்தரராஜன் அவர்களுக்கு நமது பொது மேலாளர் அலுவலக கிளை கடந்த 28.04.2013 அன்று சிறப்பான "பணி ஓய்வு பாராட்டு விழாவை" நடத்தியது.

அவ்விழாவில் கீழ்கண்ட தொழிற்சங்க தலைவர்கள்

தோழர் பா. விக்ரமன்
தோழர் எம். என். எஸ். வெங்கட்ராமன்
தோழர் எஸ். ஏ. பெருமாள்
தோழர் சி. ராமகிருஷ்ணன்
தோழர் இ. எம். ஜோசப்
தோழர் கிருஷ்ணன்
தோழர் எஸ். ஜான் போர்ஜியா &
தோழர் சி . செல்வின் சத்தியராஜ்  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் பாராட்டு விழாவினை ஒருங்கிணைத்தார்.  

விழாவில் நமது கிளைச்செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் மற்றும் உறவினர்களுமாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.  

தோழர் சௌந்தரராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறது.