போராட்ட அறைகூவல்
தோழர்களே !
டெல்லியில் இன்று (09.05.2013) நமது FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் 78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு உடனடி தீர்வு கோரி, காலவரையற்ற உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டது. 78.2% அகவிலைப்படி இணைப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் DoT அந்த விஷயத்தை BRPSE-ன் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பது காலம் தாழ்த்தும் போக்கே ஆகும்.
ஆழ்ந்த விவாதத்திற்கு பின்னர், நமது FORUM கீழ்கண்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுப்பதென முடிவெடுத்தது.
இன்றைய கூட்டத்தில்,
தோழர் நம்பூதிரி (CONVENER )
தோழர் அபிமன்யு - பொதுச்செயலர், BSNLEU
தோழர் C. SINGH - பொதுச்செயலர், NFTE
தோழர் செபாஸ்டின் - பொதுச்செயலர், SNEA
தோழர் PRAHALAD RAI - பொதுச்செயலர், AIBSNLEA
தோழர் ஜெயப்ரகாஷ் - பொதுச்செயலர், FNTO
தோழர் சுரேஷ்குமார் - பொதுச்செயலர், BSNL MS
தோழர் ஷர்மா - தலைவர், WRU ஆகியோர் கலந்து கொண்டனர்.
போராட்ட திட்டம்:
22.05.2013 - ஆர்ப்பாட்டம்
05.06.2013 - தர்ணா
12.06.2013 முதல் "கால வரையற்ற வேலை நிறுத்தம் "
நமது கிளைச்சங்கங்கள் தற்போதிருந்தே போராட்ட தயாரிப்பு பணிகளில் ஈடுபடுமாறு வேண்டுகிறோம். அனைத்து போராட்ட திட்டங்களும் முழு வெற்றி பெற அயராது பணி புரிய வேண்டுகிறோம். போராட்டத்திற்கு தயாராவோம்.
என்றும் தோழமையுடன்,
எஸ். சூரியன்,
CONVENER , FORUM & மாவட்டச்செயலர், BSNLEU.
No comments:
Post a Comment