Wednesday, 29 May 2013

29.05.2013 
மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பிரச்சனைகளின் தீர்வுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி காணப்பட்டது.  மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்   S. ஜான்போர்ஜியா,  c. செல்வின் சத்தியராஜ், மாவட்ட சங்க நிர்வாகிகள்  தோழர்கள் S. சூரியன், R. ரவிச்சந்திரன், S. ராமலிங்கம் ஆகியோர் பேட்டியில் கலந்து கொண்டனர்.  

நிர்வாகத் தரப்பில் DGM (HR), AGM (HR) & SDE (HRD) ஆகியோருடன் கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.

பிரச்சனைகள் :
  • LEVEL-IV மற்றும் எல்லிஸ் நகர்  LIFT முறையாக இயங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.  LEVEL-IV LIFT ஒரு வாரத்திற்குள் பழுது சரிசெய்யப்பட்டு முறையான இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்றும், எல்லிஸ் நகர் LIFT டெண்டர் கோரப்பட்டுள்ளது என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BATLAGUNDU CSC-ற்கு எழுத்தர் பற்றாக்குறை உள்ளதை சுட்டிக்காட்டி விவாதித்தோம். உடனடியாக ஒரு எழுத்தர் மாற்றலிடப்பட்டுள்ளார்.
  • NEPP விடுபட்டுள்ள  ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென விவாதித்தோம்.  தற்போது  DPC முடிந்த நிலையிலுள்ளது.  ஒரு சில நாட்களுக்குள் விடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்விற்கான உத்தரவு வெளியிடப்படும்.
  • நிலக்கோட்டை தொலைபேசியகத்தில் WATER PIPELINE பழுது நீக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் தீர்வு ஏற்படுத்த நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • BIBIKULAM தொலைபேசியகத்திற்கு ENGINE ALTERNATOR தனியாகப் பொருத்தவேண்டுமென எடுத்து கூறினோம்.  வேறு மாவட்டத்திலிருந்து கூடிய விரைவில் புதிய ENGINE ALTERNATOR நிறுவப்படுமென  நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • தல்லாகுளம் CSC-க்கு JTO & TTA உடனடியாக நியமிக்கவேண்டுமென்ற நமது நியாயமான கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
  • விளாம்பட்டி  தொலைபேசியகத்திற்கு ஒரு ஒப்பந்த ஊழியர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
  • UPDATE செய்யப்பட SERVICE DIRECTORY அனைத்து அலுவலகங்களுக்கும் புதிதாக வழங்கப் பட வேண்டுமென்ற நமது கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 

இது தவிர, பல்வேறு CADRE-களின் இடமாற்றல்கள் குறித்து விவாதித்து உள்ளோம்.  நிர்வாகத் தரப்பில் சுமூகத் தீர்விற்கு இசைவு அளிக்கப்பட்டுள்ளது. 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்டச்செயலர் 

No comments: