மதுரை சொஸைட்டி
தோழர்களே !
BSNL-ல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் ஒற்றுமை கருதி சிறிய சங்கமானாலும், பெரிய சங்கமானாலும் சமநிலை என்ற நோக்கோடு சொசைட்டியில் தேர்தலை தவிர்ப்பதற்காகவும், ஒன்றுபட்ட இயக்குனர்களை தேர்ந்தெடுக்கலாம் என்ற முன்மொழிவை நமது BSNLEU மாவட்ட சங்கம் சார்பாக முன்வைத்தோம்.
இந்த நல்ல முன்மாதிரியை அமுல்படுத்த AIBSNLEA மாவட்ட செயலர் தோழர் எஸ். கருப்பையா அவர்கள் முயற்ச்சியை மேற்கொண்டார். கிட்டத்தட்ட அனைத்து சங்கங்களும் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டன. ஆனால் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்ட NFTE சங்கம் ஒற்றுமைக்கு உலை வைத்து உடன்பாட்டை மறுதலித்தது. எனவே, வேறு வழியின்றி தேர்தல் நடந்தது.
அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனர்களில் நான் தான் தலைவர் என்ற சொல்லோடு சிலர் தோள் தட்டினர் - யார் எதிர்த்தாலும் தவிடுபொடி என்றனர் -
மிரட்டல், உருட்டல், அதட்டல், ஆவேசம் எல்லாம் இணைந்த நாடகம் அரங்கேறியது -
வென்றவர்களில் நம்மவர் இருவர் .... ஒருவர் அன்பானவர் - இன்னொருவர் இனிப்பானவர். இருவரும் கூட்டணித்தலைவர்கள் ஆலோசனைப்படி தெளிவாக அறிவித்தனர் "நாங்கள் எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லையென" .
சென்னை சொசையிட்டியில் நடத்திய விளையாட்டை மதுரை சொசையிட்டியை கைப்பற்றி விளையாட வஞ்சக வலை விரித்தது ஒரு கூட்டம்.
ஆனால் மக்கள் தெளிவானவர்கள். நானே தலைவர் என்ற சிலரின் பேராசை பகல் கனவானது. நல்ல வேலை மதுரை சொசைட்டி தப்பியது.
சூரியனையே சுட்டெரிப்போம் என்றார்கள் .... ... ... ஆனால்
சூரியனின் சூடு பொறுக்க முடியாமல் ............................ ஆனார்கள்.
மதுரை என்றும் மாமதுரைதான் என்பதை கற்றுக்குட்டிகள் புரிந்து கொள்ளட்டும்.
No comments:
Post a Comment