Friday 17 May 2013

FORUM OF BSNL UNIONS/ASSOCIATIONS
மதுரை தொலைதொடர்பு மாவட்டம், மதுரை - 625 002.
------------------------------------------------------------------------------------------------------------

அருமைத் தோழர்களே ! வணக்கம்  !!

மதுரை மாவட்டத்திலுள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் கூட்டம் 16.05.2013 அன்று  மதுரை பொது மேலாளர்  அலுவலகத்தில் நடைபெற்றது.  கூட்டத்திற்கு NFTE மாவட்டச்செயலர்  தோழர்  கே. முருகேசன் தலைமை தாங்கினார்.  

FORUM CONVENER தோழர் S. சூரியன் கூட்டத்தின் நோக்கமான 78.2% பஞ்சப்படி இணைப்பிற்கான மத்திய சங்கங்களின் போராட்ட அறைகூவலான 
    • 22.05.2013           -     ஆர்ப்பாட்டம் 
    • 05.06.2013           -     தர்ணா 
    • 12.06.2013           -     காலவரையற்றவேலைநிறுத்தம் 
ஆகிய இயக்கங்களை நமது மதுரை மாவட்டத்தில் சக்தியாக நடத்துவது குறித்த கருத்துக்களை முன்வைத்தார்.

இக்கூட்டத்தில் AIBSNLEA மாநில நிர்வாகி தோழர் A. அருணாசலம், மாவட்டச் செயலர் தோழர் S. கருப்பையா, SEWA மாவட்டச்செயலர் தோழர் S. கந்தசாமி. SNATTA மாநிலச் செயலர்  தோழர் P. அழகுபாண்டியராஜா, TEPU மாவட்ட செயலர் தோழர் N. முருகன், SNEA மாவட்டச்செயலர் தோழர் M. சந்திரசேகரன், WRU மாவட்டச் செயலர் தோழர் L. கண்ணன் ஆகியோரும், சில முன்னணி  தோழர்களும் கலந்து கொண்டனர்.

DOT-யும், BSNL நிர்வாகமும் 78.2 சத IDA-வை  நமது சங்கங்களின் தொடர் போராட்டத்திற்கு பின் கடந்த 12.06.2012 ஏற்பட்ட உடன்பாடை  அமுல்   படுத்தாமல் காலம் தாழ்த்தும் போக்கினை கடை பிடிப்பது மிகவும் கண்டிக்க தக்கது. 

கூட்டத்தில் அனைத்து சங்க நிர்வாகிகளின் முழமையான கலந்தாலோசனைக்கு பின் கீழ் கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.  கூட்ட முடிவை  சுற்றறிக்கையாக வெளியிடுவது, கோரிக்கை விளக்கி நோட்டீஸ் வெளியிடுவது, போராட்டத் திட்டத்திற்கான POSTER வெளியிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

22.05.2013 ஆர்ப்பாட்டம் :  

  • காலை 10.00 மணிக்கு LEVEL - IV வளாகம்
  • மாலை 04.00 மணிக்கு GM அலுவலகம் 
  • தேனி, திண்டுக்கல், பழனி, கம்பம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. 

போராட்ட  தயாரிப்பு  விளக்க  கூட்டங்கள் :

அனைத்து சங்கங்களின் சார்பாக கீழ்கண்ட தேதிகளில் குறிப்பிட்ட இடங்களில் அனைத்து மாவட்ட செயலர்களும் கலந்து கொள்ளும் விதத்தில் போராட்ட தயாரிப்பு விளக்க கூட்டங்களை சக்தியாக நடத்துவதெனவும் முடிவு எடுக்கப்பட்டது. 
  1. 20.05.2013 அன்று GM அலுவலக TRC-ல்  கூட்டம் நடத்துவது 
  2. 24.05.2013 அன்று LEVEL-IV LMR-ல்  கூட்டம் நடத்துவது 
  3. 27.05.2013 அன்று எல்லிஸ் நகரில்  கூட்டம் நடத்துவது 

தர்ணா போராட்டம் :

அனைத்து மாவட்ட செயலர்களும் தர்ணா போராட்டத்தில் கலந்து கொள்ளும் வண்ணம்  வெவ்வேறு தேதிகளில் தேனி, திண்டுக்கல், மதுரை ஆகிய மூன்று REVENUE  மாவட்டங்களில் தர்ணா நடத்துவதென முடிவு எடுக்கப்பட்டது.
  • 05.06.2013 - GM ஆபீஸ் முன்பு                 -     1000 Hrs. to 1700 Hrs.
  • 06.06.2013 - திண்டுக்கல் EXGE முன்பு  -     1000 Hrs. to 1700 Hrs.
  • 07.06.2013 - தேனி  EXGE முன்பு              -      1000 Hrs. to 1700 Hrs.           
தர்ணா நடத்துவதென முடிவெடுக்கப் பட்டது. 

தோழர்களே! கிளைச்சங்கங்கள்  ஆர்ப்பாட்டம், போராட்ட விளக்க கூட்டம், தர்ணா ஆகிய அனைத்து இயக்கங்களிலும் தங்களது பகுதியிலுள்ள அனைவரையும் முழுமையாக திரட்டிட அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடன் இணைந்து பணியாற்றிட வேண்டுகிறோம்.
"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு   - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு" 
போராட்ட வாழ்த்துக்களுடன்,

                    K. MURUGESAN                                                     S. SOORIYAN      
     FORUM தலைவர் & D/S - NFTE.                 FORUM CONVENER & D/S - BSNLEU

 M. CHANDRASEKARAN              S. MUTHUKUMAR             S. KARUPPIAH
            D/S - SNEA                                  D/S - FNTO                    D/S - AIBSNLEA

N. MURUGAN                                       L. KANNAN                    S. KANDASAMY
   D/S - TEPU                                             D/S - WRU                          D/S - SEWA








1 comment:

Unknown said...

"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு"


.....ஒன்றுபட்ட போராட்டம் ஒன்றே நம் துயரோட்டும் !!

வெல்லட்டும் நம் கூட்டு பேர சக்தி !!

... Ganesan Palanisamy