BSNLEU – மதுரை மாவட்ட சங்கம்
டெல்லிச் செய்தி . . .
தோழர்களே! அனைவருக்கும்
வணக்கம்.
கடந்த
02.05.2013 அன்று BSNL-ல் உள்ள அனைத்து
ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பான FORUM OF BSNL UNIONS & ASSOCIATION–ன் கூட்டம் டெல்லி BSNLMS சங்க அலுவலகத்தில்
நடைபெற்றது. கூட்டத்திற்கு NFTE–ன் தலைவர் தோழர். இஸ்லாம் அஹமத் தலைமை தாங்கினார்.
நமது
மத்திய சங்கத்தின் தலைவரும், கன்வீனருமான தோழர் VAN. நம்பூதிரி அவர்கள், கடந்த கூட்டத்திற்கு
பின் நடைபெற்ற நிகழ்வுகளோடு, 78.2 சதவீத பஞ்சப்படி பெறுவது, BSNL நிறுவன வளர்ச்சிக்காக
திட்டமிடுவது போன்றவை குறித்து விவரித்தார்.
அனைத்து
சங்கங்களின் சார்பாக கலந்து கொண்ட நிர்வாகிகளின் ஆழமான விவாதத்திற்குபின், BSNL நிறுவனத்திற்கு மத்திய அரசு
நிதி உதவி வழங்கிடவும், தொலைதொடர்பு நிறுவனங்களுக்கிடையே நமது BSNL நிறுவனத்திற்கு
மத்திய அரசு கடைபிடிக்கும் பாரபட்சத்தை போக்கவும் வேண்டி நமது FORUM–ன் சார்பாக நிதி அமைச்சர்
திரு. ப. சிதம்பரம் தலைமையிலான
மத்திய அமைச்சர் குழுவிற்கு ஒரு மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
v 78.2 சதம் பஞ்சப்படி இணைப்பு உத்தரவை
மற்றும் நிர்வாகம் விரைவில் வெளியிட வலியுறுத்தி நிர்ப்பந்தம் செய்வது.
vLTC, Medical
Allowance போன்ற சலுகைகள்
ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கிட நிர்வாகத்தை வலியுறுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
நமது FORUM-இன்
அடுத்த கூட்டம் 07.05.2013 அன்று நடைபெறும்.
என்றும்
தோழமையுடன்,
s. சூரியன் மாவட்ட செயலர்
No comments:
Post a Comment