Thursday, 2 May 2013

இதய பூர்வமான வாழ்த்துக்கள்


தோழர் ம. சௌந்தரராஜன் 30.04.2013 பணி நிறைவையொட்டி நமது மத்திய, மாநில, மாவட்ட மற்றும் கிளை சங்கங்களுக்கு மனமுவந்து முறையே ரூ. 1000, ரூ. 1000, ரூ. 5000 & ரூ. 2000  நிதி அளித்துள்ளார்.  மேலும் பணி நிறைவு செய்யும் நமது தோழர் சௌந்தரராஜன் அவர்களுக்கு நமது பொது மேலாளர் அலுவலக கிளை கடந்த 28.04.2013 அன்று சிறப்பான "பணி ஓய்வு பாராட்டு விழாவை" நடத்தியது.

அவ்விழாவில் கீழ்கண்ட தொழிற்சங்க தலைவர்கள்

தோழர் பா. விக்ரமன்
தோழர் எம். என். எஸ். வெங்கட்ராமன்
தோழர் எஸ். ஏ. பெருமாள்
தோழர் சி. ராமகிருஷ்ணன்
தோழர் இ. எம். ஜோசப்
தோழர் கிருஷ்ணன்
தோழர் எஸ். ஜான் போர்ஜியா &
தோழர் சி . செல்வின் சத்தியராஜ்  ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

நமது மாவட்ட செயலர் தோழர் எஸ். சூரியன் பாராட்டு விழாவினை ஒருங்கிணைத்தார்.  

விழாவில் நமது கிளைச்செயலர்களும் மாவட்ட சங்க நிர்வாகிகளும் மற்றும் உறவினர்களுமாக 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது சிறப்பு அம்சமாகும்.  

தோழர் சௌந்தரராஜன் பணி ஓய்வு காலம் சிறக்க மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறது.


No comments: