78.2% பஞ்சப்படி இணைப்பிற்கான ஆர்ப்பாட்டம் - 22.05.2013
FORUM OF BSNL UNIONS / ASSOCIATIONS அறைகூவலின்படி நமது மதுரை SSA-ல் 5 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது .
மதுரை LEVEL-IV வளாகத்தில் 22.05.2013 அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு SNEA மாவட்டச்செயலர் தோழர் M. சந்திர சேகரன் தலைமை தாங்கினார். 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 78.2% IDA இணைப்பை தாமதப் படுத்தும் DoT / BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத போக்கினைக் கண்டித்து
- தோழர் V. சூரப்பன் - TEPU அகில இந்திய அமைப்புச்செயலர்
- தோழர் S. கருப்பையா - AIBSNLEA மாவட்டச்செயலர்
- தோழர் S. கந்தசாமி - SEWA மாவட்டச்செயலர்
- தோழர் S. சூரியன் - BSNLEU மாவட்டச்செயலர்
- தோழர் M. கண்ணன் - WRU
ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக NFTE கிளைச்செயலர் வீரன் நன்றி கூறினார்.
22.05.2013 அன்று மதியம் 1.00 மணிக்கு GM அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் S. முத்துக்குமார் - FNTO மாவட்டச் செயலர் தலைமை தாங்கினார். 75-க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்
- தோழர் A. அருணாசலம் - மாநில சங்க நிர்வாகி AIBSNLEA
- தோழர் M. சந்திரசேகர் - SNEA மாவட்டச்செயலர்
- தோழர் C. செல்வின் சத்தியராஜ் - BSNLEU மாநில அமைப்பு செயலர்
ஆகியோர் உரையாற்றினர் . அதன் பின்னர் இறுதியாக NFTE கிளைச் செயலர் மெஹ்ராசுதின் நன்றி கூறினார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தோழர் A. பழனிவேலு - SNEA தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில்
- தோழர் S. ஜான் போர்ஜியா - BSNLEU மாநில துணைத்தலைவர்
- தோழர் S. உதயசூரியன் - TEPU
- தோழர் G. செபஸ்டியன் - NFTE
- தோழர் M. முருகேசன் - FNTO
ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர் A. குருசாமி, BSNLEU கிளைச் செயலர் நன்றி கூறினார்.
தேனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர் தமிழ்ராஜன் - SNEA தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது
- தோழர் ஜான்சன் மாணிக்கராஜ் - NFTE
- தோழர் நாராயணன் - TEPU
- தோழர் மைக்கேல் சிரில்ராஜ் - BSNLEU
ஆகியோர் உரையாற்றினர். இக்கூட்டத்தில் 35-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
கம்பத்தில் நடைபெற்றக் ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் திருப்பதி - BSNLEU தலைமை தாங்கினார். தோழர் இளங்கோவன் - TEPU, தோழர் ஸ்ரீராமன் - BSNLEU ஆகியோர் உரையாற்றினர். இறுதியாக தோழர் விஸ்வாசம் - NFTE நன்றி கூறினார்.
என்றும் தோழமையுடன்,
S. சூரியன்,
மாவட்டச்செயலர்.
No comments:
Post a Comment