Wednesday, 12 June 2013

...   ...   ...   நடந்தவை  ...   ...   ...

தோழர்களே!

நமது BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள்  சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக 12.06.2013 (புதன் கிழமை) அன்று மாலை GM  அலுவலக மனமகிழ் மன்றத்தில்  நன்றி அறிவிப்பும் 78.2% IDA இணைப்பு ஒப்பந்த விளக்க கூட்டமும்  நடைபெற்றது.  

75 பெண் தோழியர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்ட சிறப்பு கூட்டத்திற்கு தோழர் K . முருகேசன், DS  NFTE  தலைமை தாங்கினார்.  போராட்டத்தின் வெற்றியை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினார்கள்.

தோழர் S . முத்துக்குமார் - DS  FNTO 
தோழர் M . சந்திரசேகரன் - DS SNEA 
தோழர் L . கண்ணன் - DS WRU 
தோழர் A . அருணாசலம் - ACS AIBSNLEA 

இறுதியாக தோழர் S . சூரியன் - FORUM  CONVENER  & DS BSNLEU  நிறைவுரை ஆற்றினார். 

என்றும் தோழமையுடன்,
S . சூரியன், DS 






           FORUM OF BSNL  UNIONS & ASSOCIATIONS  

                             மதுரை மாவட்டம் 


தோழர்களே,


நமது அதிமுக்கிய கோரிக்கையான 78.2 சத IDA-க்கான உத்தரவு பெற்று நமது கோரிக்கை வெற்றியடைந்துள்ளதை விளக்கும்முகத்தான் இன்று 12.06.2013 மாலை 4 மணிக்கு பொது மேலாளர் அலுவலக மனமகிழ்மன்றத்தில் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் அனைவரும் தவறாது திரளாக கலந்து கொள்ளவேண்டுமாய் அன்புடன் அழைக்கின்றோம்.

தோழமையுடன்,
S. சூரியன். 
Forum  Convenor & DS BSNLEU

வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.


நம்முடைய BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களுடைய கூட்டு தொடர் முயர்ச்சியின் காரணமாக நமக்கு நியாயமாக வழங்க வேண்டிய 78.2% IDA இணைப்பு உத்தரவு DOT & BSNL நிர்வாகம் வெளியிட்டதால் நமது கூட்டமைப்பு அறிவித்திருந்த 12/06/2013 முதல் வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப்பட்டுவிட்டது. கூட்டமைப்பின் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.



Monday, 10 June 2013

SNEA மாவட்டச் சங்க போராட்டத்திற்கு நமது ஆதரவு.


தோழர்களே,


மதுரை மாவட்ட SNEA  தோழர்களின் கோரிக்கையை ஏற்று, ஆர்பாட்டத்தை தவிர்க்கும்முகத்தான் மதுரை  மாவட்ட நிர்வாகம் பிரச்சினைகளை தீர்க்க முன்வரவேண்டுமென மதுரை மாவட்ட FORUM OF BSNL UNIONS சார்பாக      Forum தலைவர் தோழர் K. முருகேசன், தோழர் S. கருப்பையா DS, AIBSNLEA ஆகியோருடன் நமது மாவட்டச் செயலரும், Forum CONVENEOR-ம் ஆன தோழர் S. சூரியன் பொது மேலாளரிடம் விவாதித்தனர். பேட்டியின் பொது DGM(HR), DGM(NWP-CM), DGM(F&A) ஆகியோர் உடனிருந்தனர். பொது மேலாளர் அவர்கள், முதன்மை பொது மேலாளர் (CGM)  அவர்களுடன் இம்மாதம் 17 அல்லது 19 தேதியில் கலந்து ஆலோசித்து, மாற்றல் உத்தரவை ரத்து செய்து, மதுரை நகருக்குள் மாற்றலிடுவதாக உறுதியளித்தார்.

இந்த தகவலை SNEA தோழர்களிடம் கூறினோம். பொது மேலாளர் போராடும் SNEA சங்கத்துடன் விவாதிக்க வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினார்கள். ஆனால் GM அவர்கள் SNEA சங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்த மறுத்ததால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் அடிப்படையில் மதுரையில் இன்று (10/06/2013) SNEA மாவட்டச் சங்கம் "இரு SDE-களுக்கு போடப்பட்ட மாற்றல் உத்தரவை ரத்து செய்ய கோரி"  நடத்திய உணவு இடைவேளை ஆர்பாட்ட போராட்டத்திற்க்கு நமது மாவட்டச் சங்கம் தோழமைப் பூர்வமான ஆதரவினை நல்கியது. 

ஆர்ப்பாட்டத்தில், நமது மாவட்டச் செயலர் தோழர் S. சூரியன் உரையாற்றியபோது ...


10.06.2013: Implementation of 78.2% IDA Pay Fixation Case

10.06.2013:Implementation of 78.2% IDA 

Pay Fixation  Case: 

Implementation of 78.2% IDA pay fixation of DPE OM dated 2nd April,2009 was approved by BSNL Board. It is understood that Hon'ble MOC&IT has approved the proposal for implementation today morning and sincere efforts are being made in DoT for issuance of Presidential Directives immediately. The orders are  expected today itself from DoT & BSNL. Further developments in this regard will be intimated soon.

தோழர்களே ,நமக்கு வழங்கப்படவேண்டிய 78.2 % 

பஞ்சப்படி இணைப்பிற்க்கு மத்திய தொலை 

தொடர்பு அமைச்சகம் இன்று (10-6-2013) ஒப்புதல் 

அளித்துள்ளது.எனவே இன்று 78.2 % IDA க்கான 

உத்தரவை DOT மற்றும் BSNL வெளியிடும் என்று 

எதிர்பார்க்கபடுகிறது. 




என்றும் தோழமையுடன் 
                                                                                                       எஸ். சூரியன்
                                                                                                    மாவட்ட செயலர்




Saturday, 8 June 2013

BSNL ஊழியர்கள் + அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு  -   மதுரை மாவட்டம் 

ஜூன் 12 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம் 

தோழர்களே! 
நமது நாட்டிலுள்ள 260 பொதுத்துறை நிறுவனங்களுக்கும் 1.1.2007 முதல் 78.2%  IDAவை இணைத்து ஊதிய மாற்றம் செய்திட  DPE 02.04.2009 அன்றே உத்தரவிட்டுள்ளது.  ஆனால் நமது BSNL துறையில் மட்டும் 68.8% IDAவை இணைத்து ஊதிய மாற்றம் செய்யப்பட்டது.

நியாயம் கோரி போராட்டம் 

BSNL நிறுவனத்தின் நியாயமற்ற போக்கினை மாற்றக்கோரி BSNL ல் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் இணைந்து ஒன்றாக போராடியதன் விளைவாக 78.2% IDAவை  அடிப்படை சம்பளத்துடன் இணைத்து ஊதிய மாற்றம் செய்யப்படும் என்று BSNL நிர்வாகம் நமது கூட்டமைப்பு தலைமையுடன் கடந்த 12.06.2012 அன்று உடன்பாட்டை ஏற்படுத்தியது.

ஒப்பந்தம் ஏற்பட்டு ஓர் ஆண்டு 

ஒப்பந்தம் ஏற்பட்டு ஓராண்டு காலம் முடிந்தும் உடன்பாட்டை அமுல்படுத்த DOT மற்றும் BSNL நிர்வாகம் காலந்ததாழ்த்துகிறது. DOT மற்றும் BSNL நிர்வாகத்தின் காலதாமதத்தைக் கண்டித்து நாடெங்கும் மே 22ந் தேதி ஆர்ப்பாட்டமும் ஜூன் 5ந் தேதி தர்ணா ஆகிய இரண்டுகட்ட போராட்டம் நடத்திய பின்பும் DOT மற்றும் BSNL நிர்வாகம் நமது கோரிக்கையை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டவில்லை.  எனவே, உடனடியாக ஒப்பந்தத்தை அமுல் படுத்த கோரி 12.06.2013 முதல் நடைபெறும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்திற்கு நமது அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளன.

மறுக்கப்பட்ட உரிமையை பெற்றிட 

நமக்கு நியாயமாக கிடைக்கவேண்டிய 78.2% IDA இணைப்பான நமது உரிமையை  வென்றெடுக்க 12.06.13 முதல் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும்  வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று, வேலைநிறுத்தத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
போராட்ட வாழ்த்துக்களுடன் 
எஸ். சூரியன்   கே. முருகேசன்  எம். சந்திரசேகரன்  எஸ். கருப்பையா
    DS-BSNLEU                DS-NFTE                     DS-SNEA                     DS- AIBSNLEA
என். முருகன்   எஸ். கந்தசாமி    எல். கண்ணன்   எஸ். முத்துக்குமார்
         DS-TEPU                DS-SEWA                     DS-WRU                        DS-FNTO

Friday, 7 June 2013

நடக்க  இருப்பவை  . . .

நமது மதுரை மாவட்ட ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு  கூட்டம் 8.6.2013 சனிக்கிழமையன்று மதுரை பொது மேலாளர் அலுவலக மனமகிழ் மன்றத்தில்  நடைபெற உள்ளது. செயற்குழு சிறக்க BSNLEU மதுரை மாவட்ட சங்கம் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.

                                                                                     என்றும் தோழமையுடன் 
                                                                                               எஸ். சூரியன்
                                                                                             மாவட்ட செயலர்

 CHQ Flash News:


Dear Comrade, at 18.45Hours CMD BSNL informed me over phone that DOT has approved 78.2% IDA merger and order will be issued shortly. Nothing is confirmed, unless the order is issued by DOT. Let us wait for the order. Till then there should not be any let up in the strike preparations

                - Com. P.Abhimanyu, GS., BSNLEU.

நடந்தவை . . . 07.06.13  தேனியில் தர்ணா 

அருமை தோழர்களே !
நமது மதுரை மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி  ஆகிய 3 இடங்களிலும்  தர்ணா நடத்துவது என்ற முடிவின் அடிப்படையில் 7.6.13 அன்று  தேனியில் நடைபெற்ற  தர்ணாவிற்கு கூட்டு தலைமையாக தோழர்கள் ராமசாமி SNEA, பாலகிருஷ்ணன் NFTE, செல்வம் SEWA, அறிவழகன் FNTO ஆகியோர் வழி நடத்தினர்.  துவக்கவுரையாக  தோழர் லட்சம் NFTE மாநில அமைப்பு செயலர் உரையாற்றினார். 

78.2% IDA கோரிக்கையை விளக்கி 

 தோழர் சூரியன் DS-BSNLEU, தோழர் வி.கே. பரமசிவம் CHQ அட்வைசர் AIBSNLEA, தோழர் எஸ். கந்தசாமி DS-SEWA, தோழர் எல். கண்ணன் DS-WRU, தோழர் சேதுராமலிங்கம் AIPWA, தோழர் எம். நாராயணன் TEPU, தோழர் சுருளிச்சாமி SEWA, தோழர் மைக்கேல் சிரில் ராஜ் BSNLEU, தோழர் அண்ணாமலை DE/Theni, SNEA, ஆகியோர் உரையாற்றினர். 
தர்ணாவை  தோழர் டி.கே. ஸ்ரீனிவாசன், BSNLEU முடித்து வைத்து உரையாற்றினார்.  தர்ணாவில் 11 பெண்கள் உட்பட 100க்கும்  மேற்பட்டோர் கலந்து கொண்டது பாராட்டுக்குரியது.  
நன்றியுரை : தோழர் தேசிங்கு BSNLEU நிகழ்த்தினார். 
என்றும் தோழமையுடன்
எஸ். சூரியன் 
மாவட்ட செயலர்
06.06.2013 திண்டுக்கல்லில் தர்ணா

தோழர்களே!

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் சார்பாக திண்டுக்கல் ரெவன்யு மாவட்ட தோழர்கள் பங்கேற்ற தர்ணா 06.06.2013 வியாழன் அன்று திண்டுக்கல் தொலைபேசியகம் முன்பாக நடைபெற்றது.

தர்ணாவிற்கு தோழர். P. சந்திரகுமார், ADS-SNEA தலைமை தாங்கினார். கூட்டமைப்பின் கன்வீனரும், BSNLEU மாவட்டச் செயலருமான தோழர் S. சூரியன் தர்ணாவை துவக்கிவைத்து உரையாற்றிய பொழுது

78.2% IDA-வை 01.01.2007 முதல் சம்பளத்துடன் உடனடியாக இணைக்கவேண்டும்; ஒப்பந்தம் ஏற்பட்டு ஓர் ஆண்டு ஆகியும் தாமதப்படுத்தும் நிர்வாகத்தின் நேர்மையற்ற நிலைப்பாட்டை சாடினார்.

கோரிக்கையை விளக்கி ..........
தோழர் K. முருகேசன் D/S - NFTE
தோழர் O. துரை - AIPWA
தோழர் C. விஜயரெங்கன் – DP - NFTE
தோழர் V.K. பரமசிவம், CHQ அட்வைசர் - AIBSNLEA
தோழர் M. மதன முனியப்பன் - TEPU
தோழர் S. கந்தசாமி D/S - SEWA
தோழர் S. முபாரக் அலி - TNGEA
தோழர் சேதுராமலிங்கம் - AIPWA
ஆகியோர் பேசினர்.

தர்ணாவை தோழர் S. ஜான்போர்சியா, மாநில உதவித்தலைவர் BSNLEU முடித்து வைத்து உரையாற்றினார். தோழர் A. பழனிவேல், SNEA நன்றி கூறினார். தர்ணாவில் 160 தோழர்கள் கலந்து சிறப்புச் சேர்த்தனர்.
வாழ்த்துக்களுடன்.
S. சூரியன், D/S BSNLEU


இன்று 07.06.2013 தேனியில் தர்ணா போராட்டம் நடைபெற உள்ளது.

Wednesday, 5 June 2013

05.06.2013 - மதுரையில் தர்ணா 

தோழர்களே!  

இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற தர்ணாவின்  ஒரு பகுதியாக நமது மதுரை LEVEL - IV வளாகத்தில் 78.2% IDA இணைப்பு உடனடியாக செய்ய கோரி நடைபெற்ற தர்ணாவில் 34 பெண்கள் உட்பட 250 பேர் கலந்து கொண்டனர்.  தர்ணாவிற்கு தோழர் K. முருகேசன், DS - NFTE தலைமை தாங்கினார்.  தோழர் S. கணேசன், மாநில உதவி செயலர், SNEA துவக்க உரை நிகழ்த்தினார். 

கோரிக்கையினை விளக்கி கீழ்கண்ட தோழர்கள் உரையாற்றினர் :-

தோழர் S. கருப்பையா, DS - AIBSNLEA
தோழர் C. செல்வின் சத்தியராஜ், COS - BSNLEU
தோழர் N. முருகன், DS - TEPU,
தோழர் S. கந்தசாமி, DS - SEWA
தோழர் L. கண்ணன், DS - WRU
தோழியர் ZAC. அருணோதயம், DOS - BSNLEU
தோழர் M. சந்திரசேகரன், DS - SNEA
தோழர் A. அருணாசலம், மாநில நிர்வாகி, AIBSNLEA
தோழர் G.P. பாஸ்கரன், CS - WRU
தோழர் சங்கையா, AIPWA
தோழர் A.K. குணா, DP - TEPU

தோழர் S. சூரியன், CONVENER & DS - BSNLEU நிறைவுரையாற்றினார்.

06.06.2013-ல் திண்டுக்கல்லில் தர்ணா நடைபெற உள்ளது.
07.06.2013-ல் தேனியில் தர்ணா நடைபெற உள்ளது.

போராட்டம் வெற்றி பெற மாவட்ட சங்கம் தனது வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது. 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன், மாவட்டச்செயலர்



04.06.2013 - கோவையில்
தேர்தல் வெற்றி விழா கூட்டம் :

தோழர்களே! 

6-வது சங்க அங்கீகார தேர்தலில், இந்திய நாடு முழுவதும்  நமது  BSNLEU சங்கம் தொடர்ந்து 5-வது  முறையாக நாம் பெற்ற வெற்றியை, தமிழகத்தில் கொண்டாடும் முகத்தான் 04.06.2013 அன்று கோவையில் நடைபெற்ற வெற்றி விழாவில், சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

வெற்றி விழாவின் செய்தியை நமது மத்திய சங்கம் வெளியிட்டுள்ளதை இத்துடன் இணைத்துள்ளோம். 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன், மாவட்ட செயலர்.







136 OVERPAYMENT ISSUE - நமது தொடர் முயற்சி 


அருமை தோழர்களே !


நம்முடைய மாவட்ட சங்கத்தின் தொடர் முயற்சியால்  கடந்த ஜனவரி 2013 முதல் இதுவரை ஆறு மாத காலத்திற்கு 1.10.2000ற்கு  முன் பதவி உயர்வு பெற்றவர்கள்  FR 22 1(a) 1 OPTION மறுக்கப்பட்டு நமது மாவட்டத்தில் மட்டும் 136 தோழர்களுக்கு overpayment பிடித்தத்தை நிறுத்தி வைத்திருந்தோம்.  ஆனால்  கடந்த 3.5.2013 அன்று மீண்டும் overpayment பிடித்தத்திற்கான உத்தரவை  BSNL CORPORATE அலுவலகம் உத்தரவினை பிறப்பித்துள்ளது.  இதனை ஏற்க முடியாது.  பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமென நமது பொதுச் செயலர் தோழர் P. அபிமன்யு அவர்களிடம் நமது மாவட்ட சங்கம் சார்பாக கீழ்கண்ட கடிதம் கொடுத்துள்ளோம்.

என்றும் தோழமையுடன்,

S. சூரியன் - மாவட்டச்செயலர் 

BSNL EMPLOYEES UNION
MADURAI SSA, MADURAI – 625002

To                                                                                                                                 
Com. P. Abimanyu,
General Secretary, BSNLEU, Camp at Coimbatore,
CHQ, Dada Ghosh Bhavan,
New Delhi.

Dear Comrade,

Kindly recall the telephonic conversation that I had with you on 04.05.2013 pursuant to the release of orders by the BSNL C.O. on 03.05.2013 reiterating its earliest orders and insisting to recover the overpayment w.r.t. “Mode of fixation of pay in IDA pay scale in respect of absorbed officials of BSNL, who were promoted prior to 1.10.2000 but opted under FR 22 1(a)(1) for fixation of their pay in the promoted scale on the date of their next increment in the lower grade, which falls after 1.10.2000”. 

Because of this orders, nearly 136 officials in addition to few retired officials in Madurai SSA itself are affected and huge recoveries to the tune of lakhs of rupees had been ordered, for no fault of them.  We had persuaded the district administration to keep in abeyance the recoveries as our CHQ had already been appraised of the issue and our General Secretary is pursuing the case at the Corporate office.  As such, our General Manager was kind enough to keep the recoveries in abeyance till June 2013.

Since the BSNL C.O. had issued orders once again, the district administration had informed that they have no other option rather than to recover.  Hence I have brought it to your kind knowledge regarding the same on 4.5.2013, to which you have replied that you are out of Headquarters and assured to take up the case with BSNL C.O. on 06.05.2013.  But even after the lapse of nearly one month, nothing tangible has been done and the membership is deeply agitated over this.

Hence, I request your goodself to kindly pursue this case with the concerned authorities at BSNL C.O. in war-footing and see that the recoveries are atleast kept in abeyance till the issue is favourably disposed of in favour of employees.  A small brief prepared in this regard is enclosed herewith for your kind perusal and necessary follow-up action.

With fraternal greetings,

Comradely yours,
Sd.,

(S. Sooriyan)
Dt. 04.06.2013

Saturday, 1 June 2013

BSNL-ல் பணியாற்றும் ஊழியர்களுக்கான வாடகையில்லா தொலைபேசியில் பிற ஆபரேட்டர்களின் தொலைபேசி இணைப்பு ரத்து குறித்த கடிதம்.


Friday, 31 May 2013

தமிழ்மாநில Forum கூட்டமுடிவுகள்



78.2 சத பஞ்சப்படி இணைப்பிற்கான 

தர்ணா  போஸ்டர் 



Thursday, 30 May 2013

கோவை வெற்றிவிழா கூட்டத்திற்கு 

ஸ்பெஷல் CL மாநில நிர்வாகத்தின் கடிதம்.



Wednesday, 29 May 2013

மே 31, 2013 அன்று பணி நிறைவு பெறும் தோழர்கள் :

  • K. BALASARASWATHY, SDE, NWP, EP CFA, TALLAKULAM, MADURAI
  • A. PANNEERSELVAM, LIFT OPERATOR, O/o. SDE AC & ELECTRICALS
  • D. RAJENDRAN, TTA, O/o. SDE CSC, TALLAKULAM, MADURAI
  • P.K. RAJENDRAN, TM, O/o. SDE PHONES, BATLAGUNDU
  • S. RAJENDRAN, DE, NWOP, CFA, THENI
  • P. RAMUTHAI, Gr. 'D', O/o. GM BSNL, MADURAI
  • Y. ROYAPPAN, TM, O/o. SDE SOUTH, DINDIGUL
  • C. SELVARAJ, TTA, O/o. SDOT, CUMBUM
  • S. SELVARAJ, STS (O), O/o. SDOT, CUMBUM
  • S. VIJAYALAKSHMI, CTM, O/o. GM BSNL, MADURAI
  • S. SANKARESWARI, CTM, O/o. SDE CSC, TALLAKULAM, MADURAI

பணி நிறைவு பெறும் மேற்குறிப்பிட்டுள்ள தோழர்களின் பணி ஒய்வு காலம் சிறக்க நமது மாவட்ட சங்கம் உளப்பூர்வமாக வாழ்த்துகிறது.

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்ட செயலர். 
29.05.2013 
மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி 

நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக பிரச்சனைகளின் தீர்வுக்காக மாவட்ட நிர்வாகத்துடன் பேட்டி காணப்பட்டது.  மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்   S. ஜான்போர்ஜியா,  c. செல்வின் சத்தியராஜ், மாவட்ட சங்க நிர்வாகிகள்  தோழர்கள் S. சூரியன், R. ரவிச்சந்திரன், S. ராமலிங்கம் ஆகியோர் பேட்டியில் கலந்து கொண்டனர்.  

நிர்வாகத் தரப்பில் DGM (HR), AGM (HR) & SDE (HRD) ஆகியோருடன் கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.

பிரச்சனைகள் :
  • LEVEL-IV மற்றும் எல்லிஸ் நகர்  LIFT முறையாக இயங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.  LEVEL-IV LIFT ஒரு வாரத்திற்குள் பழுது சரிசெய்யப்பட்டு முறையான இயக்கத்திற்கு கொண்டுவரப்படும் என்றும், எல்லிஸ் நகர் LIFT டெண்டர் கோரப்பட்டுள்ளது என நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • BATLAGUNDU CSC-ற்கு எழுத்தர் பற்றாக்குறை உள்ளதை சுட்டிக்காட்டி விவாதித்தோம். உடனடியாக ஒரு எழுத்தர் மாற்றலிடப்பட்டுள்ளார்.
  • NEPP விடுபட்டுள்ள  ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென விவாதித்தோம்.  தற்போது  DPC முடிந்த நிலையிலுள்ளது.  ஒரு சில நாட்களுக்குள் விடுபட்ட அனைவருக்கும் பதவி உயர்விற்கான உத்தரவு வெளியிடப்படும்.
  • நிலக்கோட்டை தொலைபேசியகத்தில் WATER PIPELINE பழுது நீக்கப்பட வேண்டுமென்ற நமது கோரிக்கை ஏற்கப்பட்டு விரைவில் தீர்வு ஏற்படுத்த நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • BIBIKULAM தொலைபேசியகத்திற்கு ENGINE ALTERNATOR தனியாகப் பொருத்தவேண்டுமென எடுத்து கூறினோம்.  வேறு மாவட்டத்திலிருந்து கூடிய விரைவில் புதிய ENGINE ALTERNATOR நிறுவப்படுமென  நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
  • தல்லாகுளம் CSC-க்கு JTO & TTA உடனடியாக நியமிக்கவேண்டுமென்ற நமது நியாயமான கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
  • விளாம்பட்டி  தொலைபேசியகத்திற்கு ஒரு ஒப்பந்த ஊழியர் நியமிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. 
  • UPDATE செய்யப்பட SERVICE DIRECTORY அனைத்து அலுவலகங்களுக்கும் புதிதாக வழங்கப் பட வேண்டுமென்ற நமது கோரிக்கை நிர்வாகத்தால் ஏற்கப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி உள்ளன. 

இது தவிர, பல்வேறு CADRE-களின் இடமாற்றல்கள் குறித்து விவாதித்து உள்ளோம்.  நிர்வாகத் தரப்பில் சுமூகத் தீர்விற்கு இசைவு அளிக்கப்பட்டுள்ளது. 

என்றும் தோழமையுடன்,
S. சூரியன் - மாவட்டச்செயலர்