Friday 3 May 2013


துணைப்பொது மேலாளர் (நிதி)யுடன் 3.5.13 பேட்டி


ஊழியர்கள் வங்கி கடன் பெறுவதில் திடீரென தடங்கல் ஏற்பட்டது.  அதாவது ஒரு ஊழியர் ஒரு வங்கியில் மட்டும் தான் கடன் பெறமுடியும் என்ற புதிய நிபந்தனை விதிக்கப்பட்டது. இது அனைத்து ஊழியர்கள் மத்தியிலும் மிகுந்த வருத்தத்தை உருவாக்கியது. இப்பிரச்சனை நமது மாவட்ட சங்கத்தின் கவனத்திற்கு வந்தவுடன் உடனடியாக துணைப்பொது மேலாளர் (நிதி) அவர்களுடன் விவாதித்தோம். நமது மாவட்ட சங்கத்தின் சார்பாக கவன ஈர்ப்பு கடிதம் ஒன்றும் கொடுக்க பட்டது. 

பேச்சு வார்த்தையின் இறுதியில் 25% Take Home Pay உள்ள ஊழியர்கள் அனைவருக்கும் வழக்கம் போல் வங்கிக்கடன் வழங்குவது என்ற முடிவு எட்டப்பட்டது. 

சுமூக முடிவை எடுப்பதற்கு உதவி புரிந்த துணைப்பொது மேலாளர் (நிதி) அவர்களுக்கு நமது மாவட்ட சங்கம் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது.

1 comment:

ராதாகிருஷ்ணன், விருதை said...

BSNLEU மதுரை மாவட்டச் சங்கத்தின் வலைத்தளம்
சங்கச் செய்திகளோடு சமூகச் செய்திகளையும் தாங்கிச் செழிக்க எனது வாழ்த்துக்கள்!