Saturday, 27 February 2016
தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறிய BSNLEU- DOB & B/S கூட்டம்...
அருமைத்தோழர்களே ! நமது மதுரை மாவட்ட சங்கத்தின் DOB & B/S கூட்டம் 26-02-16 அன்று மாலை நமது BSNLEU மாவட்ட சங்க அலுவலகத்தில், மாவட்டத்தலைவர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் மிக மிக எழுச்சியுடன் நடைபெற்றது. ஓரிருவரைத்தவிர அனைத்து நிர்வாகிகளும், கிளைச் செயலர்களும் குறைந்த கால அழைப்பில் சக்தியாக கலந்து கொண்டது என்பது நமது அமைப்பின் மேல் தோழர்களுக்கு உள்ள பிடிமானத்தை பறை சாட்டியது.
ஓடுகாலிகளின் கூட்டத் தலைவன் வெளியுட்டுள்ள ஓலம் (நோட்டிஸ்) குறித்து கண்டனத்துடன் கூடிய உதாசினத்தை கூட்டம் பதிவு செய்தது. மதுரை மாவட்டத்தில் நமது BSNLEU சங்கம் தொடர் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில், விவாதத்தில் பங்கேற்ற அனைவரும் புள்ளிவிபரங்களுடன் கருத்தை எடுத்தியம்பினர்.
DOB & B/S கூட்டம் கீழ்கண்ட சீரிய முடிவுகளை எடுத்தது ...
- மதுரை SSA அளவிலான ஸ்டீரிங் கமிட்டி
- MA-TEI-DDG ரெவின்யு தேர்தல் கமிட்டிகள்
- சுற்றுபயண திட்டம்
- தேர்தல் நிதி
- 28-03-16 விரிவடைந்த மாவட்ட செயற்குழவை சக்தியாக நடத்துவது
- 7வது சங்க அங்கிகாரத்தேர்தலிலும் No.1தொடர் வெற்றியை பெறுவது
- K.லெட்சுமணன் - குடும்ப நிதியை 28-03-16 அன்று வழங்குவது
மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள்,எஸ். ஜான் போர்ஜியா, பி . சந்திர சேகர் இருவரும் முறையே விரிவடைந்த மத்திய. மாநில சங்க கூட்ட முடிவுகளை விளக்கினர். TNTCWU மாவட்ட செயலர் தோழர். என். சோனைமுத்து வாழத்துரை வழங்கினார். பணி நிறைவிற்கு பின்னும் தொடர்ந்து நமது சங்கப்பணியாற்றிவரும் தோழர்கள் எஸ். ராமலிங்கம், ஜி.கே.வெங்கடேசன், ஆர். இரவிச்சந்திரன் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப் பட்டது. இறுதியாக மாவட்ட பொருளர் தோழர்.எஸ். மாயாண்டி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி போதாது ஏ.லாசர் எம்எல்ஏ பேட்டி...
போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடி ஒதுக்கியது போதாது; அதிக நிதி ஒதுக்க வேண்டுமென போராட்டக்குழு தலைவர் ஏ.லாசர் எம்எல்ஏ வலியுறுத்தி யுள்ளார்.போடி -மதுரை, திண்டுக்கல் - லோயர்கேம்ப் அகல ரயில் பாதைதிட்ட அமலாக்கக் குழுவின் கூட்டம் தேனியில் கமிட்டி தலைவர் ஏ.லாசர்எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. நிர்வாகிகள் பி.சி.ராஜேந்திரன், எம்.எம்.ஆனந்தவேல், கே.சீனிவாசன், பி.ராமமூர்த்தி, எல்.ஆர்.சங்கரசுப்பு, டி.வெங்கடேசன், கே.ராஜப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.கூட்ட முடிவுகள் குறித்து ஏ.லாசர் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறியதாவது:மத்திய ரயில்வே பட்ஜெட்டில் போடி -–மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ரூ.25 கோடியும், திண்டுக்கல் -குமுளி அகல ரயில் திட்ட ஆய்வுப்பணிக்கு ரூ.30 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை காட்டிலும் சற்று கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் ஏற்கத்தக்கதல்ல. கடந்த 2010ல் போடி -–மதுரை ரயில் நிறுத்தப்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக நிதி ஒதுக்கீடு செய்யாமல் பணிகள்நடைபெறவில்லை. 5 ஆண்டுகளுக்கு பின்பு வெறும் ரூ.25 கோடி ஒதுக்கியுள்ளது தேனி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2015-ல் அகல ரயில்பாதை திட்டப் பணி முடிவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 2016 ஆம் ஆண்டு வரை தேவையான நிதியை ஒதுக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் நிதி ஒதுக்கினால் 20 ஆண்டுகளானாலும் இப்பணி நிறைவேறாது. மத்திய அரசு திட்ட மதிப்பீடான ரூ.300 கோடியை இரண்டே தவணையில் (2016-17, 2017-18) நிதி ஒதுக்கீடு செய்து இத்திட்டப் பணிகளை 2017ம்ஆண்டில் முடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அமலாக்கக்குழுவின் நோக்கமாக உள்ளது. கடந்த 60 ஆண்டுகளாக ஆய்வு நிலையிலேயே உள்ள திண்டுக்கல் - குமுளி ரயில்திட்ட ஆய்வுப் பணிக்காக ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளனர். எப்போது தொடங்கும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இக்கூட்டத்தொடர் முடியும் முன் இத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வாய்ப்பு உள்ளது. எனவே இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 10 முதல் 15ம் தேதிக்குள் தேனி மாவட்டம் முழுவதும் மக்களை திரட்டிசிறப்பு மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இக்குழுவின் சார்பில் பிரதமர், மத்திய ரயில்வே அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து ரயில்வேதிட்டங்களை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்துவோம். அதுபோல புதிய திட்டங்களுக்கு மாநில அரசு தனது பங்கு நிதியை ஒதுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். நிதியமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம். இத்திட்டங்களை நிறைவேற்றதமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமலாக்கக்குழு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை எந்த பதிலும் வரவில்லை. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து வலியுறுத்தியதாக எந்த தகவலும் இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டிபட்டியில் தமிழக முதல்வர் தெரிவித்தது போல போடி -மதுரை அகல ரயில்பாதை திட்டத்திற்கு ஒரேதவணையில் நிதி ஒதுக்கி திட்டத்தைநிறைவேற்ற வேண்டும். இதற்கு அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
ரூ.5.66 கோடி பற்றாக்குறையுடன் மதுரை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை: சிபிஎம் கவுன்சிலர் மா.செல்லம் குற்றச்சாட்டு
மதுரை மாநகராட்சி 2016-17ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தில் ரூ.5.66 கோடி நிதி பற்றாக்குறையுடன் நிறைவேற்றப்பட்டது.மதுரை மாநகராட்சி பட்ஜெட் கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் வெள்ளியன்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநகராட்சி மேயர் ராஜன்செல்லப்பா தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரி முன்னிலை வகித்தார்.பட்ஜெட்டை மேயர் தாக்கல் செய்தார். அப்போது 2016 -17 நிதி ஆண்டில் மொத்த வரவு ரூ.791.13 கோடி என்றும், மொத்த செலவீனம் ரூ.796.79 கோடியாக உள்ளதாகவும், நிதி பற்றாக்குறையாக ரூ.5.66 கோடியாக உள்ளதாகவும் தெரிவித்தார். கூட்டத்தில் பட்ஜெட் மீதான கவுன்சிலர்கள் விவாதம் மற்றும் கருத்துக்கள் கேட்கப்பட்டன. இந்த பட்ஜெட் கூட்டத்தை திமுக கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.மா.செல்லம்இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் மா.செல்லம் பேசியதாவது: நிதிநிலை அறிக்கையை இரண்டுநாட்களுக்கு முன்பே மாமன்ற உறுப்பினர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில்தான் வழங்கப்பட்டுள்ளது. கோரிப்பாளையம், காளவாசல் மேம்பாலப் பணிக்கான நிதிஒதுக்கீடு குறித்து நிதிநிலை அறிக்கையில் கூறப்படவில்லை. ஓபுளா தரைப்பாலத்தை மேம்படுத்த வேண்டும். தெற்குவாசல் மேம்பாலத்தில் போக்குவரத்து நெருக்கடி அதிகமுள்ளது. ஆகையால் மேம்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம். அதற்கான ஏற்பாடுகள் இருந்தும், விரிவாக்கத்திற்கான பணிகள் துவங்கப்படவில்லை. மகப்பேறு அறுவை சிகிச்சைக்காக பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்கின்றனர். மேற்கு மண்டலத்தில் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. அதில் மகப்பேறு அறுவை சிகிச்சைக்கான வசதியை மாநகராட்சி செய்துதர வேண்டும். வைகை 3-வது குடிநீர் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாநகராட்சியில் ரூ.6 கோடிக்கு நிதி பற்றாக்குறை உள்ளது. பொட்டல் வரியை வசூல்செய்வதன் மூலமும் 1400-க்கும் மேற்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான மண்டபம், கடைகளில் வாடகையை முறையாக வசூலிப்பதன் மூலமும் பற்றாக்குறை சரிசெய்ய முடியும். இந்த பட்ஜெட்டில் மதுரை மாநகரம் வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லை என்றார்.
Friday, 26 February 2016
26-02-16 நடக்க இருப்பவை . . .
26-02-16மாவட்ட நிர்வாகிகள் &கிளைச்செயளர்கள் கூட்டம்...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச்செயளர்கள் கூட்டம், நமது மாவட்ட தலைவர் தோழர்.சி . செலவின் சத்தியராஜ் தலைமையில் எதிர்வரும் 26-02-16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நமது சங்க அழுவலகத்தில் நடைபெறும். அது சமயம் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
- விரிவடைந்த-மத்திய-மாநில- மாவட்ட செயற்குழுகள் .
- 7வது சங்க அங்கீகார தேர்தல்.
- ஸ்தல மட்ட பிரச்சனைகள்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.
Thursday, 25 February 2016
ஜே.என்.யு - விற்கு வேறு நீதியாம் ! . . .
அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற கூட்டத்தில், இந்திய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினார் என குற்றம் சாட்டப்பட்டு ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டார். ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ ஆதாரத்தின் அடிப் படையில், “பயங்கரவாதி களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணை செய்வதற்காகவே” அவர் காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப் பட்டதாக காவல் துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு விசயங்கள் நடைபெற்றிருக்கின்றன.
முதல் அடி!
ஜே.என்.யு மாணவர்களுக்கு லஷ்கர்-ஏ-தொய்பா தலைவர் ஹபீஸ் முகம்மதுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக தெரிவித்த மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங், “அந்த எதார்த் தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்திய எதிரிகளின் டுவிட்டர் செய்திகளுக்கு எவரும் இரையாகி விடக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஹபீஸ் சயீதின் டுவிட்டர் கணக்கு போலியானது என்ற உண்மை ஓரிரு நாட்களிலேயே அம்பலமாகி விட்டது. இது காவல் துறையின் குற்றச்சாட்டிற்குக் கிடைத்த முதல் அடி. அதைத் தொடர்ந்து அதற்கு மற்றொரு அடியும் கிடைத்தது.
இரண்டாவது அடி!
கன்னய்ய குமார் இந்திய எதிர்ப்புக் கோஷமிட்டதைக் காட்டிய வீடியோவினை இந்தியா டுடே மற்றும் ஏ.பி.பி நியூஸ் தொலைக்காட்சிகள் ஆய்வு செய்து, அவற் றில் இடைச் செருகல் மோசடி நடை பெற்றிருப்பதாக அறிவித்தன. ஆம் ஆத்மி கட்சி காவல் துறைக்கு அளித்த புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்ட வீடியோ ஆதாரம் இன் னும் கூடுதலான தகவல் ஒன்றினைத் தெரிவித் தது. கன்னய்ய குமாரைக் கைது செய்யக் காரண மாக அமைந்த அதே வீடியோவில் பா.ஜ.கவின்மாணவர் பிரிவான ஏபிவிபி (அகில பாரதியவித்யார்த்தி பரீஷத்) மாணவர்கள், “பாகிஸ் தான் வாழ்க” என்று கோஷமிடுவதைக் காண முடிந்தது. “ஜே.என்.யு வளாக அமைதியின்மை யின் பின்னணியில் ஒளிந்திருக்கும் உண்மை யான குற்றவாளிகளின்” முகங்கள் அதில் அம்பலமாயின.
காவல் துறை கண்ணெதிரில்…
கன்னய்ய குமார் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கன்னய்ய குமார் மற்றும் அவரது சக மாணவ நண்பர்கள் மீது தில்லி பா.ஜ.க எம்.எல்.ஏ ஒருவரும், வழக்கறிஞர்கள் சிலரும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். இதனை அறிந்த ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர்கள் சிலர் தலைமறைவாயினர். போலீஸ் அவர்களைப் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்கள் மீண்டும் சில தினங்களில் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர்கள் தாங்கள் மறைந்திருந்தற்குக் காரணம் போலீஸ் குறித்த பயம் அல்ல, போலீஸ் மட்டுமல்லாது, ஊடகங்களின் கண்ணெதிரிலும் மாணவர்களைத் தாக்கியவர்கள், பல்கலைக்கழகத்திற்கு உள்ளும் வந்து தங்களை தாக்கக்கூடும் என்பதாலேயே தாங்கள் தலைமறைவாக இருந்ததாகக் கூறினார்கள்.
ஜே.என்.யுவிற்கு வேறு நீதி!
இத்தனைக்கும் பின்னர், அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல் , தில்லி போலீஸ் கமிஷனர் ஒன்றைக் கூறி இருக்கிறார். “ அவர்கள் (மாணவர்கள்) தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினால், குற்ற மற்றவர்கள் என்பதற்கான ஆதாரத்தினை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.” நம் நாட்டில், பிரிட்டிஷ் (ஆங்லோ- சாக்சன்) நீதி பரிபாலனக் கோட்பாடுகள் தான் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றன. அதன் படி பார்த்தால், “குற்றத்தினை அரசு நிரூபிக்கும் வரை, ஒருவர் குற்றமற்றவர்” என்பதே அந்தக் கோட்பாடு. மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அகராதியில், அது ஜே.என்.யு மாணவர்களுக்குப் பொருந்தாதாம். E.M.ஜோசப் (ஆதாரம் : சுபிர் ராய் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் - 23.02. 2016)
Wednesday, 24 February 2016
26-02-16மாவட்ட நிர்வாகிகள் &கிளைச்செயளர்கள் கூட்டம்...
அருமைத் தோழர்களே ! நமது BSNLEU மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளைச்செயளர்கள் கூட்டம், நமது மாவட்ட தலைவர் தோழர்.சி . செலவின் சத்தியராஜ் தலைமையில் எதிர்வரும் 26-02-16 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நமது சங்க அழுவலகத்தில் நடைபெறும். அது சமயம் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
- விரிவடைந்த-மத்திய-மாநில- மாவட்ட செயற்குழுகள் .
- 7வது சங்க அங்கீகார தேர்தல்.
- ஸ்தல மட்ட பிரச்சனைகள்.
--- என்றும் தோழமையுடன், எஸ். சூரியன் D/S-BSNLEU.
GPF கிடைக்க நமது BSNLEU தொடர் முயற்சி . . .
அருமைத் தோழர்களே ! GPF விண்ணப்பித்து பட்டுவாடாவிற்க்காக காத்து இருப்பவர் களுக்கு GPF Payment கிடைக்க வேண்டும் என்பதற்காக, நமது மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக மாவட்ட செயலர் தோழர். எஸ். சூரியன் மத்திய சங்க கவனத்திற்கு கொண்டு சென்றார் . நமது BSNLEU மத்திய சங்கம் டெல்லியில் தொடர் முயற்சியை எடுத்ததால் 24-02-16 GPF FUND ஒதுக்கீடு தமிழகத்திற்கு செய்யப்படும் என நமது அகிலஇந்திய உதவிப்பொதுச் செயலர் தோழர். எஸ். செல்லப்பா அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே, GPF விண்ணப் பித்தவர்களுக்கு GPF Payment கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
Monday, 22 February 2016
Sunday, 21 February 2016
போராடிய அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக மதுரையில் ...
அருமைத் தோழர்களே ! 19-02-16 அன்று மாலை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து மதுரையில் அனைத்து தொழிற்சங்க இயக்கம்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறித்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசாங் கத்திடம் 72 முறை கோரிக்கை மகஜர் அளித்தும், தமிழக அரசு எவ்வித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை.
தமிழக முதலமைச்சர் 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்குவேன் என்றும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற ஊதிய முறைகளை மாற்றி காலமுறை ஊதியம் வழங்குவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறித்தி தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் போராட்டத்தை மதுரை அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரிக்கிறது. மேலும் போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக தமிழக அரசாங்கம் போச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுகாண வலியுறித்தி 19.02.16 பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் ஆதரவு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு BSNL எம்ப்ளாயிஸ் யூனியன் மதுரை தொலை தொடர்பு மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் தலைமை வகுத்தார். இக் கூட்டத்தில் கீழ்க்கண்டோர் உரை நிகழ்த்தினர்.
1.தோழர் . குருதமிழரசு - அனைத்து அரசு ஓய்வூதியர் சங்கம்
2.தோழர். பன்னீர்செல்வம் - டான்சாக்
3.தோழர். அருணா - AIIEA
4.தோழர். சண்முகம் - BEFI
5.தோழர். செந்தாமரை கண்ணன் - MUTA
இறுதியாக CITU மாவட்ட செயலர் தோழர் .R. தெய்வராஜ் நிறைவுரை நிகழத்தினார் .
இறுதியாக CITU மாவட்ட செயலர் தோழர் .R. தெய்வராஜ் நிறைவுரை நிகழத்தினார் .
மகாராஷ்ட்ராவில் BSNLEUமத்திய விரிவடைந்த செயற்குழுவில்...
அருமைத் தோழர்களே ! மகாராஷ்ட்ராவில் நடந்து கொண்டிருக்கும் BSNLEU மத்திய விரிவடைந்த செயற்குழுவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் பிரதிநிதிகள் விவாதத்தில் நமது தமிழ் மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 3 பேரில் நமது மாநிலச் செயலர் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன் , சேலம் மாவட்ட உதவிச் செயலர் தோழர்.ஹரி , நாகர்கோவில் மாவட்ட செயலர் தோழர். ஜார்ஜ் ஆகியோர் உரைநிகழ்த்தினர்.....
Saturday, 20 February 2016
மகாராஷ்டிராவில் நமது BSNLEU விரிவடைந்த CEC...
அருமைத் தோழர்களே ! 19-02-16 முதல் 3 நாட்களுக்கு மகாராஷ்டிரா மாநிலம் அகமத் நகரில் நமது BSNLEU விரிவடைந்த மத்திய செயற்குழு மிகவும் உற்சாகமாக எழுச்சியுடன் தொடங்கியது ...
முதல் நிகழ்வாக தேசிய கொடியை, நமது அகில இந்திய தலைவர், தோழர் பல்பீர் சிங் ஏற்றி வைத்தார். சங்க கொடியை நமது பொது செயலர் தோழர் P
. அபிமன்யு , வின்னதிரும் கோஷங்களுக்கிடையே, ஏற்றி வைத்தார். நமது சங்க புரவலர் தோழர் V
.A .N .நம்பூதிரி, முன்னிலை வகிக்க, தியாகிகள் அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தியாகிகள் நினைவு ஸ்துபிக்கு வீர வணக்கம் செலுத்திய பின், நிகழ்வுகள் துவங்கின. மகாராஷ்டிரா மாநில
CITU பொது செயலர் தோழர் டாக்டர் கார்கி முறைப்படி, செயற்குழுவை துவக்கி வைத்தார். அகமத்நகர் CGM வாழ்த்துரை வழங்கினார்.
பின்னர் தொலை தொடர்பு மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் V .A .N . நம்பூதிரி சிறப்புரை வழங்க, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, விரிவாக கூட்ட நோக்கங்களையும், விவாத பொருளையும் அறிமுக படுத்தி விளக்க உரை வழங்கினார்.
நாடு முழுவதுலுமிருந்து மாவட்ட செயலர்கள் இந் நிகழ்வில், கலந்து கொண்டனர். நமது மதுரை மாவட்டம் சங்கம் சார்பாக, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஜான்போர்ஜியா, விரிவடைந்த மத்திய செயற்குழுவில் பங்கேற்றார். விரிவடைந்த மத்திய செயற்குழு அனைத்து வகையிலும் வெற்றிபெற மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
பின்னர் தொலை தொடர்பு மூத்த தொழிற்சங்க தலைவர் தோழர் V .A .N . நம்பூதிரி சிறப்புரை வழங்க, நமது பொது செயலர் தோழர் P . அபிமன்யூ, விரிவாக கூட்ட நோக்கங்களையும், விவாத பொருளையும் அறிமுக படுத்தி விளக்க உரை வழங்கினார்.
நாடு முழுவதுலுமிருந்து மாவட்ட செயலர்கள் இந் நிகழ்வில், கலந்து கொண்டனர். நமது மதுரை மாவட்டம் சங்கம் சார்பாக, மாவட்ட உதவி செயலர் தோழர் S . ஜான்போர்ஜியா, விரிவடைந்த மத்திய செயற்குழுவில் பங்கேற்றார். விரிவடைந்த மத்திய செயற்குழு அனைத்து வகையிலும் வெற்றிபெற மதுரை மாவட்ட சங்கம் வாழ்த்துகிறது.
Subscribe to:
Posts (Atom)