அருமைத் தோழர்களே ! 19-02-16 அன்று மாலை அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை ஆதரித்து மதுரையில் அனைத்து தொழிற்சங்க இயக்கம்.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறித்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும், கடந்த நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசாங் கத்திடம் 72 முறை கோரிக்கை மகஜர் அளித்தும், தமிழக அரசு எவ்வித பேச்சுவார்த்தையும் இதுவரை நடத்தவில்லை.
தமிழக முதலமைச்சர் 2011-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் அரசு ஊழியர்களுக்கான புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமுலாக்குவேன் என்றும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் போன்ற ஊதிய முறைகளை மாற்றி காலமுறை ஊதியம் வழங்குவேன் என்றும் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறித்தி தற்போது தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் போராட்டத்தை மதுரை அனைத்து தொழிற்சங்கங்கள் ஆதரிக்கிறது. மேலும் போராடும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்து உடனடியாக தமிழக அரசாங்கம் போச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வுகாண வலியுறித்தி 19.02.16 பழங்காநத்தம் நடராஜ் தியேட்டர் அருகில் ஆதரவு தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு BSNL எம்ப்ளாயிஸ் யூனியன் மதுரை தொலை தொடர்பு மாவட்ட செயலர் தோழர். S. சூரியன் தலைமை வகுத்தார். இக் கூட்டத்தில் கீழ்க்கண்டோர் உரை நிகழ்த்தினர்.
1.தோழர் . குருதமிழரசு - அனைத்து அரசு ஓய்வூதியர் சங்கம்
2.தோழர். பன்னீர்செல்வம் - டான்சாக்
3.தோழர். அருணா - AIIEA
4.தோழர். சண்முகம் - BEFI
5.தோழர். செந்தாமரை கண்ணன் - MUTA
இறுதியாக CITU மாவட்ட செயலர் தோழர் .R. தெய்வராஜ் நிறைவுரை நிகழத்தினார் .
இறுதியாக CITU மாவட்ட செயலர் தோழர் .R. தெய்வராஜ் நிறைவுரை நிகழத்தினார் .
No comments:
Post a Comment