4 லட்சம் அரசு ஊழியர்கள்... 68 சங்கங்கள்... 20 அம்சக் கோரிக்கைகள்...5 ஆண்டுகளாக செவிசாய்க்காத தமிழக அரசை பிப்ரவரி 10ம்தேதி முதல் துவங்குகிற மாபெரும் காலவரையற்ற வேலைநிறுத்தம் முற்றாக ஸ்தம்பிக்கச் செய்யவிருக்கிறது...இந்தப் போராட்டத்திற்கு பின்னால் உள்ள நியாயங்கள் என்னென்ன?விரிவாக விளக்குகிறார் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத் தலைவர்இரா.தமிழ்செல்வி
தமிழக அரசு ஊழியர்களால் பல ஆண்டுகளாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றதமிழக அரசை வலியுறுத்தி தொடர்ந்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மற்றும் அதன் தோழமைச் சங்கங்களை உள்ளடக்கிய அனைத்துச் சங்கப் போராட்டக் குழுவின் சார்பில் 10.2.2016 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்கள் போராட்டம் என்று அறிவித்த உடனே, ஆளும் அரசும் சில ஊடகங்களும், “அரசு ஊழியர்களின் போராட்டம் நியாயமற்றது... தவறானது... அநியாயமானது... இதற்கு பொதுமக்களிடம் இருந்து எவ்வித ஆதரவும் கிடைக்காது என்றெல்லாம் பல்வேறுவிதமான கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அதாவது அரசு ஊழியர் தவிர்த்த இதர வெகுஜனங்கள் மட்டுமே இந்த தேசத்தின் குடிமக்கள்...அரசு ஊழியர்கள் அந்நிய தேசத்தவர்கள் என்பது போன்ற கருத்துக்கள்திட்டமிட்டே திணிக்கப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்கள் அம்பானிகளோ... அதானிகளோ அல்ல... அந்நிய கார்ப்பரேட்டுகளும் அல்ல...அரசு ஊழியர் அனைவருமே இந்தியக் குடிமக்களே... தமிழகத்தின் பின்தங்கிய கிராமப்புறங்களைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழை, எளிய விவசாயி, விவசாயத் தொழிலாளர் மற்றும் இதரபகுதி தொழிலாளிகளின் குடும்பங்களைச் சார்ந்தவர்களே என்பதையும், தங்களின் வறுமை நிலையிலும்ஏராளமான சிரமங்களுக்கு மத்தியில் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு அரசுப் பணிக்குத் தேவையான அடிப்படைக் கல்வியைப் பெற்று அதன்மூலம் அரசுப் பணிக்கு வந்தவர்களே என்பதையும்... விதிவிலக்காக விரல்விட்டு எண்ணும் அளவிற்கான சிலரால் மட்டுமே உயர்கல்வி கற்று அரசின் உயர் பதவிகளுக்கு செல்ல முடிந்திருக்கிறது என்பதையும்... அரசு ஊழியர்களைப் பற்றித்தவறாகச் சித்தரிப்போர் உணர வேண்டும். எனவே, தற்போது போராட்ட களத்தில் நிற்பது தமிழகத்தின் அடித்தட்டு வர்க்கமே.
அரசு ஊழியர் முன்வைக்கும் கோரிக்கைகள்தமிழக அரசு ஊழியர்கள் தங்களது அடிப்படையான கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களின் மூலம் பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டாலும், மேலே சொல்லப்பட்டவாறு அவற்றில் அடிப்படையானது, அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் பணி நிலை சார்ந்த கோரிக்கைகளே ஆகும். அரசு ஊழியர்கள் முன்வைக்கின்ற இந்த கோரிக்கைகளை அரசு, சட்டப்படி தீர்க்க வேண்டிய பிரச்சனையாக பார்க்காமல், அவற்றை வெறும் பொருளாதார கோரிக்கையாகப் பார்ப்பதால்தான் இப்பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் நீண்டு கொண்டே செல்கிறது. உண்மையில் இக்கோரிக்கைகள் அனைத்தும் மக்கள் நலன், தேச நலன் சார்ந்தவையே.அரசு ஊழியர்களின் வேலைநிறுத்தம் வெற்றிபெற BSNLEUமதுரை மாவட்ட சங்கத்தின் தோழமைபூர்வமான வாழ்த்துக்கள்...S..சூரியன் ...D/S
No comments:
Post a Comment