நிலையில், தமிழக அரசு உடனடியாக அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென மக்கள் கோரிக்கை எழுந்துள்ளது ...
கொச்சியிலிருந்து தமிழ்நாட்டின் வழியாக மங்களூரு வரை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு கெயில்
நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டது. விவசாயிகளின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக, உயர்நீதிமன்றம்
விவசாயிகளின் கருத்துக்களை கேட்டு சுமூகமான முறையில் தீர்வுகாண வேண்டுமென்று உத்தரவிட்டது.
இதனடிப்படையில், தமிழக அரசுவிவசாயிகளின் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தியது. இக்கூட்டத்தில் கெயில்
நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கருத்து தெரிவித்த அனைத்து விவசாயிகளும், விவசாயிகளுக்கு
சொந்தமான விளை நிலங்களில் எரிவாயு குழாய் பதிக்கக் கூடாது
என்று ஒருமித்த கருத்தை தெரிவித்தனர்.இதன் காரணமாகத்தான் தமிழக அரசு, மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்றவும், விளை நிலங்களில் குழாய் பதிப்பு திட்டத்திற்கு தடை விதித்தும் உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த
உத்தரவைஎதிர்த்து கெயில் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் 1962ம் ஆண்டு பெட்ரோலியம், மினரல்ஸ் பைப்லைன்
சட்டத்தின்அடிப்படையில் தமிழக அரசு தலையிட உரிமையில்லை என்றும்,
எனவேதமிழக அரசு விதித்த தடை ரத்துசெய்யப்படுகிறது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதி
மன்றத்தின் இந்த தீர்ப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழக அரசு உடனடியாக
இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமென்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். 1962 பி.எம்.பி.
சட்டம் விவசாயிகளின் நிலத்தின் மீதான உரிமையைப் பறிக்கும் வகையிலான எதேச்சதிகார சட்டமாகும்.
எனவே இச்சட்டத்தை திரும்ப பெறவும், விவசாயிகளின் நில உரிமையைப் பாதுகாக்கும் வகையில் சட்டங்களை
இயற்றவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். விவசாயிகளின்
விருப்பத்திற்கு விரோதமாக அவர்களுடைய நிலங்களில் எரிவாயு குழாய் பதிப்பதை எக்காரணம் கொண்டும்
அனுமதிக்க முடியாது. எனவே, தமிழக அரசு
தேவையான நடவடிக்கைகளை எடுத்து இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணமுன்வர வேண்டுமென
வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.
No comments:
Post a Comment