Thursday 25 February 2016

ஜே.என்.யு - விற்கு வேறு நீதியாம் ! . . .

அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து நடைபெற்ற கூட்டத்தில், இந்திய எதிர்ப்புக் கோஷங்களை எழுப்பினார் என குற்றம் சாட்டப்பட்டு ஜேஎன்யு மாணவர் பேரவைத் தலைவர் கன்னய்ய குமார் கைது செய்யப்பட்டார். ஜீ நியூஸ் தொலைக்காட்சி ஒளிபரப்பிய வீடியோ ஆதாரத்தின் அடிப் படையில், “பயங்கரவாதி களுடன் அவருக்கு இருக்கும் தொடர்புகள் குறித்து விசாரணை செய்வதற்காகவேஅவர் காவல் துறை கட்டுப்பாட்டிற்குள் எடுக்கப் பட்டதாக காவல் துறை அறிவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு விசயங்கள் நடைபெற்றிருக்கின்றன.
முதல் அடி!
ஜே.என்.யு மாணவர்களுக்கு லஷ்கர்--தொய்பா தலைவர் ஹபீஸ் முகம்மதுடன் டுவிட்டர் மூலம் தொடர்பு இருப்பது தெரியவந்திருப்பதாக தெரிவித்த மத்திய உள்துறைஅமைச்சர் ராஜ்நாத் சிங், “அந்த எதார்த் தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்எனவும் இந்திய மக்களைக் கேட்டுக் கொண்டார். இந்திய எதிரிகளின் டுவிட்டர் செய்திகளுக்கு எவரும் இரையாகி விடக் கூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், ஹபீஸ் சயீதின் டுவிட்டர் கணக்கு போலியானது என்ற உண்மை ஓரிரு நாட்களிலேயே அம்பலமாகி விட்டது. இது காவல் துறையின் குற்றச்சாட்டிற்குக் கிடைத்த முதல் அடி. அதைத் தொடர்ந்து அதற்கு மற்றொரு அடியும் கிடைத்தது.
இரண்டாவது அடி!
கன்னய்ய குமார் இந்திய எதிர்ப்புக் கோஷமிட்டதைக் காட்டிய வீடியோவினை இந்தியா டுடே மற்றும் .பி.பி நியூஸ் தொலைக்காட்சிகள் ஆய்வு செய்து, அவற் றில் இடைச் செருகல் மோசடி நடை பெற்றிருப்பதாக அறிவித்தன. ஆம் ஆத்மி கட்சி காவல் துறைக்கு அளித்த புகார் கடிதத்துடன் இணைக்கப்பட்ட வீடியோ ஆதாரம் இன் னும் கூடுதலான தகவல் ஒன்றினைத் தெரிவித் தது. கன்னய்ய குமாரைக் கைது செய்யக் காரண மாக அமைந்த அதே வீடியோவில் பா..கவின்மாணவர் பிரிவான ஏபிவிபி (அகில பாரதியவித்யார்த்தி பரீஷத்) மாணவர்கள், “பாகிஸ் தான் வாழ்கஎன்று கோஷமிடுவதைக் காண முடிந்தது. “ஜே.என்.யு வளாக அமைதியின்மை யின் பின்னணியில் ஒளிந்திருக்கும் உண்மை யான குற்றவாளிகளின்முகங்கள் அதில் அம்பலமாயின.
காவல் துறை கண்ணெதிரில்
கன்னய்ய குமார் தில்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, கன்னய்ய குமார் மற்றும் அவரது சக மாணவ நண்பர்கள் மீது தில்லி பா.. எம்.எல். ஒருவரும், வழக்கறிஞர்கள் சிலரும் சேர்ந்து தாக்குதல் நடத்தினர். இதனை அறிந்த ஜே.என்.யு மாணவர் சங்கத் தலைவர்கள் சிலர் தலைமறைவாயினர். போலீஸ் அவர்களைப் பல இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. அவர்கள் மீண்டும் சில தினங்களில் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது, அவர்கள் தாங்கள் மறைந்திருந்தற்குக் காரணம் போலீஸ் குறித்த பயம் அல்ல, போலீஸ் மட்டுமல்லாது, ஊடகங்களின் கண்ணெதிரிலும் மாணவர்களைத் தாக்கியவர்கள், பல்கலைக்கழகத்திற்கு உள்ளும் வந்து தங்களை தாக்கக்கூடும் என்பதாலேயே தாங்கள் தலைமறைவாக இருந்ததாகக் கூறினார்கள்.
ஜே.என்.யுவிற்கு வேறு நீதி!
இத்தனைக்கும் பின்னர், அனைத்திற்கும் மகுடம் வைத்தது போல் , தில்லி போலீஸ் கமிஷனர் ஒன்றைக் கூறி இருக்கிறார். “ அவர்கள் (மாணவர்கள்) தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூறினால், குற்ற மற்றவர்கள் என்பதற்கான ஆதாரத்தினை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும்.” நம் நாட்டில், பிரிட்டிஷ் (ஆங்லோ- சாக்சன்) நீதி பரிபாலனக் கோட்பாடுகள் தான் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றன. அதன் படி பார்த்தால், “குற்றத்தினை அரசு நிரூபிக்கும் வரை, ஒருவர் குற்றமற்றவர்என்பதே அந்தக் கோட்பாடு. மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையின் அகராதியில், அது ஜே.என்.யு மாணவர்களுக்குப் பொருந்தாதாம்.  E.M.ஜோசப்                                                        (ஆதாரம் : சுபிர் ராய் - பிசினஸ் ஸ்டாண்டர்ட் - 23.02. 2016)

No comments: