Tuesday, 2 February 2016

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்: தமிழகம் முழுவதும் 1.5 லட்சம் ஆசிரியர்கள் கைது...

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்வது, 6-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைவது, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், தொகுப் பூதிய காலத்தை பணிக்காலமாக கருதுவது என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (ஜாக்டோ) சார்பில் 3 நாள் தொடர் மறியல் போராட்டம் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை தொடங்கியது. இதைத்தொடர்ந்து ஜாக்டோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடைசி நாளான நேற்றும் மாவட்ட அளவில் ஆங்காங்கே மறியல் போராட்டம் நடந்தது.சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே நேற்று காலை 11 மணியளவில் போராட் டம் நடந்தது. ஜாக்டோ மாநில உயர்நிலைக்குழு உறுப்பினரும், தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்- இயக்குநர் சங்க மாநிலத் தலை வருமான எஸ்.சங்கரப்பெருமாள் தலைமையில் நடைபெற்ற போராட் டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் சாலையில் உட்கார்ந்து கோஷமிடத் தொடங்கினர். தொடர்ந்து, அவர்கள் கோட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற போது அவர்களை போலீஸார் கைதுசெய்தனர்
முற்றுகை போராட்டம்
முன்னதாக, போராட்டத்துக்கு தலைமை வகித்த ஜாக்டோ உயர் நிலைக்குழு உறுப்பினர் சங்கரப் பெருமாள் நிருபர்களிடம் கூறிய தாவது:எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு வழிக ளில் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால், இதுவரையில், எங்கள் கோரிக்கைகள் தொடர் பாக முதல்வர் எங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. இந்த மறியல் போராட்டத்தில் தமிழகம் முழுவதும் ஏறத்தாழ 3 லட்சம் ஆசிரியர்கள் பங்கு பெற் றுள்ளனர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக முதல்வர் எங்களை பேச்சுவார்த் தைக்கு அழைக்காவிட்டால் சென் னையில் ஒரு லட்சம் ஆசிரியர்களை திரட்டி கோட்டையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடவும் அடுத்த கட்டமாக தொடர் மறியல் போராட்டத்தில் இறங்கவும் திட்ட மிட்டுள்ளோம். இவ்வாறு சங்கரப் பெருமாள் கூறினார்.ஜாக்டோ சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்..
95,375 பேர் வரவில்லை
திங்கள்கிழமை (நேற்று) தமிழகம் முழுவதும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 19 ஆயிரத்து 749 ஆசிரியர்களும், தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 75 ஆயிரத்து 626 பேரும் பணிக்கு வரவில்லை. அவர்களுடைய வருகைப்பதிவேட்டில், பணிக்கு வரவில்லை என்று குறிப் பிடப்படும். ஒருநாள் ஆப்சென்ட் ஆகியிருப்பதால் அவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்படுமா இல்லையா என்பதை அரசு முடிவுசெய்யும்என்றார்.பள்ளிக்கல்வித்துறையைக் காட்டிலும் தொடக்கக் கல்வித் துறையில்தான் அதிக எண்ணிக் கையிலான ஆசிரியர்கள் நேற்று பணிக்கு வரவில்லை. பள் ளிக்கல்வித் துறையில் 14 சதவீத ஆசிரியர்களும், தொடக்கக்கல்வித் துறையில் 51 சதவீதம் பேரும் நேற்று ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
 ---ஆசிரியர்களின் கூட்டுக்குழு போராட்டம் வெற்றி பெற நாம் வாழ்த்துகிறோம்.

No comments: