Wednesday, 17 February 2016

ரூ.14,200 கோடி வரி ஏய்ப்பு: வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை மீண்டும் நோட்டீஸ்...

வரி பாக்கி ரூ.14,200 கோடியை செலுத்தக் கோரி, வோடஃபோன் நிறுவனத்துக்கு வருமான வரித் துறை மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வரியை செலுத்தாவிட்டால், சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 ஹாங்காங்கைச் சேர்ந்த ஹட்சிசன் நிறுவனத்தின் 67 சதவீத பங்குகளை பிரிட்டனைச் சேர்ந்த வோடஃபோன் நிறுவனம், கடந்த 2007-ஆம் ஆண்டு வாங்கியது. அந்தப் பரிவர்த் தனையில், மூலதன ஆதாய வரியாக, ரூ.14,200 கோடியை செலுத்தக் கோரி, வோடஃபோன் நிறுவனத்துக்கு இந்திய அரசின் வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.

No comments: