அருமைத்தோழர்களே ! நமது BSNLEU சங்கத்தின் எழுச்சி மிகுந்த மாநில செயற்குழு 12-02-2016 அன்றும் , 13-02-106 அன்று விரிவடைந்த மாநில செயற்குழுவும் வேலூரில் மிக சிறப்பாக நடைபெற்றது. சங்கத்தின் தமிழ் .மாநில தலைவர் தோழர் S. செல்லப்பா தலைமையில் நடைபெற்ற இரண்டு நிகழ்சிகளும் மாநில, மாவட்ட, மற்றும் கிளை சங்க நிர்வாகிகளுக்கு புத்துணர்ச்சி ஊட்டக்கூடியதாக அமைந்தது .முதல் நாள் நிகழ்ச்சி. நமது மாநில செயலர் தோழர்.A.பாபு ராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார் .நமது பொது செயலர் தோழர்.P.அபிமன்யு அவர்கள் தனது நீண்ட உரையில், மத்திய நரேந்தர மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் பற்றியும் கடந்த மூன்று ஆண்டுகள் BSNL நிறுவன புத்தாக்கத்திற்கு நமது BSNLEU சங்கம் செலுத்திய பங்களிப்பையும் , Non executive ஊழியர்களுக்கு நாம் செய்துள்ள பணிகளையும் விரிவாக எடுத்துரைத்தார். மாநில செயலர் சமர்ப்பித்த விவாத குறிப்பின் மீது நடந்த விவாதத்தில் அனைத்து மாவட்ட செயலர்களும் ,மாநில சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர் . இரண்டாம் நாள் நடைபெற விரிவடைந்த மாநில செயற்குழு நிகழ்ச்சியில் 30-04-2016 அன்று பணி ஓய்வு பெற உள்ள நமது மதுரை மாவட்ட செயலர் தோழர் S.சூரியன் தேசிய கொடியை ஏற்றி வைக்க நமது சங்க கொடியை மாநில உதவித் தலைவர் தோழர் வெங்கட்ராமன் ஏற்றி வைக்க, மாநில உதவிச் செயலர் ,தோழர் சுப்ரமணியனின் அஞ்சலி உரையுடன், மாநில செயலரின் வரவேற்பு உரையுடன் விரிவடைந்த
மாநில செயற்குழு தொடங்கியது .தொடக்க உரை நிகழ்த்திய நமது பொது செயலர் தோழர் P .அபிமன்யு அவர்கள் நடைபெற உள்ள 7 வது சங்க சரிபார்ப்பு தேர்தலில் நமது BSNLEU சங்கம் 50 சதத்திற்கு மேல் மிக பெரிய வெற்றியை பெறும் என
அறிவித்த போது கரவொலி அடங்க நீண்ட நேரமாகியது . 6 வது சரிபார்ப்பு தேர்தலில் போனஸ் , மெடிக்கல் அலவன்ஸ் மற்றும் LTC ஆகியன நிறுத்தப்பட்ட விசயங்களை நமக்கு எதிரான பிரச்சாரங்களாக மாற்றிய
NFTE சங்கம் 4.68 % மேற்பட்ட வாக்குகளை இழந்தது . ஆனால் நமது BSNL ஊழியர் சங்கம் 2.% வாக்குகளை அதிகரித்து சாதனை வெற்றி பெற்றது . தற்போது கடந்த மூன்று ஆண்டுகளாக நாம் கையாண்டு தீர்வு செய்துள்ள பல்வேறு பிரச்சனைகள் மற்றும் நமது நிறுவன புத்தாக்கத்திற்கு செய்துள்ள நிகழ்வுகள்
நம்மை மிக பெரிய வெற்றியை நோக்கி செல்லும் என அறுதியிட்டு கூறினார் .மதியம் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வாரியாக கிளை செயலர்கள் பேசினர் .நமது மதுரை மாவட்ட சங்கம் சார்பாக திருமங்கலம் கிளை செயலர் தோழர்.R. சுப்புராஜ் ,TM மற்றும் திண்டுக்கல் சார்பாக தோழர்.R.அய்யனார்சமி, SS(O) ஆகிய இருவரும் விவாதத்தில் பங்கேற்றனர். .அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புற செய்த வேலூர் தோழர்களுக்கு நமது நன்றி உரித்தாக்குகிறோம்.
No comments:
Post a Comment