Thursday 26 February 2015

மின்கட்டணத்தை அதிரடியாக குறைத்தது டெல்லி அரசு...

டெல்லி வாழும் 90 சதவீத மக்களுக்கு பயனளிக்கும் விதமாக, மின்கட்டணத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறார், முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்.இந்த அறிவிப்பின்படி, மாதமொன்றுக்கு 400 யூனிட்கள் வரை பயன்படுத்துவோருக்கு மின்கட்டணம் 50% குறைக்கப்பட்டுள்ளது. முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டது. வரும் ஞாயிறு முதல் இந்தக் குறைக்கப்பட்ட புதியக் கட்டணம் நடைமுறைக்கு வருகிறது.ஆம் ஆத்மியின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், டெல்லியில் மின் கட்டணம் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது20,000 லிட்டர் தண்ணீர் இலவசம்:அதேபோல் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி வீடொன்றுக்கு மாதம் 20,000 லிட்டர்கள் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் திட்டம் மார்ச் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 20,000 லிட்டருக்கு மேல் பயன்பாடு தாண்டினால் கட்டணம் வசூலிக்கப்படும் என்று துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தெரிவித்தார்.இலவச தண்ணீர் பெறுபவர்கள் கழிவுநீரகற்றக் கட்டணம் செலுத்தவேண்டிய தில்லை.

No comments: