தலித் என்ற காரணத்தால் தன்னை பணியில் இருந்து நீக்கியுள்ளனர் எனக்கூறி மதுரையில் மத்திய அரசின் பூச்சியி யல் துறை அலுவலகம் முன்புஇளைஞர் குடும்பத்துடன் உண்ணாவிரதப் போராட்டத் தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.திண்டுக்கல் மாவட்டம் சின்னக்கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.சதீஷ்பாபு. MSC பயாலஜி படித்த தலித் இளைஞரான இவருக்கு நாக லெட்சுமி என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. இவர் தனது குடும்பத்துடன் மதுரை சொக்கிகுளத் தில் உள்ள மத்திய அரசின் பூச்சியியல் துறை அலுவலகம் முன்பு வெள்ளியன்று காலை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடு பட்டார். அவரிடம் இப் போராட்டம் குறித்து கேட்டதற்கு, கடந்த 2009 ஆம் ஆண்டு மதுரைசொக்கிகுளத்தில் உள்ள மத்திய அரசின் பூச்சியியல் துறை பணிக்கு பத்திரிகை வாயிலாக வந்த விளம்பரத் தையடுத்து நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு ஒப்பந்த முறையில் பணியில் சேர்ந்தேன். மூன் றாண்டுகள் வேலை செய்து வந்தநிலையில், விழுப்புரத்தில் உள்ள திருக்கோவிலூருக்கு பணி மாறுதல் செய்யப்பட்டேன். அங்கு யானைக்கால் நோய் குறித்த ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் பரமசிவத்திற்கு உதவியாள ராகப் பணிபுரிந்து வந்தேன். இந்த நிலையில், மதுரையில் உள்ள நிர்வாக அலுவலர் ரவி, மருத்துவர் பரமசிவம் ஆய்வு போதுமென என்னிடம் எழுதித்தரக் கூறினார். ஆனால், இதற்கு மறுத்து விட்டேன். ஆனால்,விடாமல் மதுரையில் உள்ள அலுவலக ஓட்டுநர் சேகர் மூலம் பல முறை கடிதம் எழுதித்தரச் சொல்லி தொந்தரவு தர ஆரம்பித்தார்கள். சம்பளம் 20 ம் தேதி வரை இழுத்தடிக்கப்பட்டது.இந்த நிலையில், மதுரையில் உள்ள அலுவலகத்தில் ஒரு பணியிடத்திற்கு ஆள் எடுப்ப தாக அறிந்து மனு செய்தேன். ஆனால்,அந்த இடத்திற்கு என்னை அவர்கள் பரிந்துரை செய்யவில்லை. இந்த நிலையில் 2 பணியிடங்களுக்கு தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களை பணி க்கு எடுத்தார்கள். அதில் நானும் சேர்ந்தேன். விருத்தாசலத்திற்கு வேலைக்கு அனுப்பினார்கள். கடந்த 2014 பிப்ரவரி-28 ம் தேதியோடு திட்டப்பணி முடிந்தது. நீங்கள் வேலையை விட்டு வெளியேறுங்கள் என்று நிர்வாக அலு வலர் ரவி கடிதம் எழுதினார். என் காலத்தில் பணியில் சேர்ந்த யாரையும் அவர் பணியிலிருந்து வெளியேற்றவில்லை. ஆனால்,நான் மட்டும் பழிவாங்கப் பட்டேன். இதுகுறித்து மத்தியஅரசுக்கு என் மனைவி கடிதம்எழுதினார். எனக்கு பணியளிக்க பரிசீலிக்க வேண்டும் என்று 30.7.2014, 17.11.2014 ஆகிய
தேதிகளில் இந்திய மருத்துவத் துறையில் இருந்து கடிதம் வந்தும் இதுவரை பதில் தர மறுக்கிறார்கள். என் மனைவி,இப்பிரச்சனை குறித்து கடிதம்எழுதியதால், வேலை வழங்க முடியாதென கூறினார். இந்த நிலையில், ஏற் கனவே, வேலைபார்த்த விருத்தாசலத்திலேயே பணி வழங்கு வதாகக் கூறி, 3 மாதம் மட்டும் தினக்கூலி அடிப்படையில் வேலைக்குச் சேர்த்து விட்டு பிப்-10 ம் தேதியோடு வேலையை விட்டு நிறுத்தி விட்டார்கள். மத்திய அரசு சொன்னதன் பேரில் வேலைக்குச் சேர்த்து விட்டோம் என கணக்குக் காட்டுவதற்காக, பணியில் சேர்ப்பது போல, சேர்த்து நீக்கியுள்ளனர். மத்திய அரசின் நிறுவனத்திலேயே நடைபெறும் இப்படிப்பட்ட சாதிப்பாகுபாட்டினை சகித்துக்கொள்ள முடியாத காரணத்தி னால் தான் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் என்று சதீஷ்பாபு கூறினார். அவரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு போராட்டத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment