மேட்டுப்பாளையம் அரசு வனக்கல்லூரி மாணவர்களின் தொடர் உள்ளிருப்பு போராட்டம் 11வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக தொடர்ந்து போராடி வரும் மாணவர்கள் வியாழனன்று மரக்கன்றுகள் மீது தங்களது ரத்ததுளிகளை சிந்தியும், வனவியல்பட்டப்படிப்பு கேள்விக்குறியாகி யுள்ளதாக சித்தரிக்கும் வகையில் தங்கள் ரத்தத்தால் எழுதியும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவ-மாணவிகள், வனத்துறையில் உள்ள வனச்சரகர் மற்றும் வனவர் காலிப் பணியிடங்களில் வனம் சார்ந்த படிப்பான வனவியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 27ம் தேதி முதல் காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பு மற்றும் கல்லூரி வளாகத்தினுள் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.காட்டுப் பகுதியில் அமைந்துள்ள வனக்கல்லூரியின் நுழைவு வாயில் அருகே வெட்ட வெளியில் இரவும், பகலும் தங்கியபடி தொடர்ந்து 10 நாட்களாக போராடிவரும் தங்களின் கோரிக்கை களுக்கு அரசு இது வரை செவிசாய்க்கவில்லை,
தங்களை பேச்சுவார்த் தைக்கும் அழைக்கவில்லை என வருத்தம் தெரிவிக்கும் மாணவ, மாணவியர் போராட்டத்தை தீவிரப்படுத்தியதின் அடையாளமாக
200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கை விரல்களில் ஊசியால் குத்தி, வழியும் ரத்தத்தை அருகில் உள்ள மரக்கன்றுகள் மீது சிந்தினர். பின்னர் வரிசையாக சென்று வனவியல் பட்டம் கேள்விக்குறியாகி விட்டதை உணர்த்தும் வகையில் ஒரு வெள்ளை துணியில் ரத்தத்தால் எழுதி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
1 comment:
போராட்டம் வெல்லட்டும்
Post a Comment