Saturday 14 February 2015

போடி-மதுரை ரயில் வலியுறுத்தி தர்ணா- ஏ.லாசர் MLA.

போடி-மதுரை அகல ரயில் பாதை திட்டத்திற்கு நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் தேவையான நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். ஆய்வு நிலையில் உள்ள திண்டுக்கல் -லோயர்கேம்ப் ரயில்திட்டத்தை அமலாக்க வேண்டும் என வலியுறுத்தி தேனியில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. தேனி -பெரியகுளம் சாலையில் நடைபெற்ற தர்ணாவிற்கு போடி-மதுரை, திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரயில்பாதை திட்ட அமலாக்கக்குழுத் தலைவர் .லாசர் MLA தலைமை வகித்தார். உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தலைவர் M.M.ஆனந்தவேல், ரயில்வேகமிட்டிச்செயலாளர் P.C..ராஜேந்திரன், பொருளாளர் K.S.K.நடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்ணா வில் தேனி மாவட்டத்தின் பல்வேறு நகரங்களி லிருந்து வர்த்தகர்கள், உரம்,பூச்சிமருந்து வியாபாரிகள், ஹோட்டல் சங்க உறுப்பினர்கள், மரக்கடை வியாபாரிகள் எனஏராளமானோர் கலந்து கொண்டனர். தர்ணாவில் .லாசர் MLA., பேசியதாவது:-கடந்த 2010-ஆம் ஆண்டு போடி -மதுரை ரயில்பாதையை அகலரயில்பாதையாக மாற்றப் போவ தாக அறிவித்த மத்திய அரசு, ரயிலைநிறுத்தியது. ரூ.17 கோடியை மூன்று தவணைகளில் ஒதுக்கி திட்டத்தைக் கிடப்பில் போட்டது.திட்டம் தாமதமாவதால் மதிப்பீட்டுத் தொகை உயர்ந்து கொண்டே செல்கிறது. ஆட்சியில்உள்ள பாஜகவிற்கும் போராட்டக்குழு சார்பில் நிதி ஒதுக்கக்கோரி மனு அளிக்கப் பட்டுள்ளது. கடந்த மாதம்தேனிக்கு வருகை தந்த மத்தியஅமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணனை போராட்டக்குழுவின் சார்பில் சந்தித்து இத்திட்டத்திற்கு உதவும்படி நேரில் வலியுறுத்தப்பட் டது. இத்திட்டம் நிறைவேற மாநில அரசு, மத்திய அரசை வலியுறுத்தவேண்டுமென தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ரயில் இல்லாத மாவட்டமாக தேனி இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளோம்.நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இத்திட்டம் நிறைவேற நிதி ஒதுக்க வேண்டும். நிதி ஒதுக்க தவறும் பட்சத்தில் தேனி மாவட்டம் முழுவதும் முழு வேலைநிறுத்தப் போராட்டம் நடை பெறும். இவ்வாறு .லாசர் MLA பேசினார்.

No comments: