Saturday 7 February 2015

தங்க மங்கை தீபா கர்மாகர்: தேசிய விளையாட்டில் அசத்தல்...

Dipa Karmakar
தேசிய விளையாட்டு ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில், அசத்திய திரிபுராவின் தீபா கர்மாகர் 5 தங்கம் வென்றார்.

கேரளாவில், 35வது தேசிய விளையாட்டு நடக்கிறது. இதில் பெண்களுக்கான தனிநபர்ஆல்ரவுண்டர்ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில்  தீபா கர்மாகர் தங்கம் வென்றார். நேற்று நடந்தஅப்பாரடஸ்பிரிவில்பேலன்சிங் பீம்’, ‘புளோர் எக்சர்சைஸ்’, ‘டேபிள் வால்ட்’, ‘அன்ஈவன் பார்ஸ்என நான்கு பிரிவுகளில் முதலிடம் பிடித்து தலா ஒரு தங்கம் வென்றார். இதன்மூலம், இம்முறை 5 தங்கம் வென்றார். ஏற்கனவே இவர், கடந்த 2011ல் ராஞ்சியில் நடந்த தேசிய விளையாட்டில் இதேபோல 5 தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த ஆண்டு நடந்த கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில், இவர், ‘வால்ட்பிரிவில் வெண்கலம் வென்றார்.வெள்ளி, வெண்கலத்தை முறையே மத்திய பிரதேசத்தின் பிரான்டி நாயக், மேற்கு வங்கத்தின் பிரனதி தாஸ் கைப்பற்றினர்.
ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ்அப்பாரடஸ்பிரிவில், .பி., அணியின் ஆஷிஸ் குமார், தலா ஒரு வெள்ளி (பேரலல் பார்ஸ்), வெண்கலம் (டேபிள் வால்ட்) வென்றார்.
துப்பாக்கி சுடுதல்:ஆண்களுக்கான தனிநபர் 50 மீ., ‘ரைபிள்–3 பொஷிசன்பிரிவு துப்பாக்கி சுடுதலில், சர்வீசஸ் அணியின் சத்யேந்திரா சிங் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். வெள்ளி, வெண்கலத்தை முறையே மகாராஷ்டிராவின் சுவப்னில் குசால், சர்வீசஸ் அணியின் செயின் சிங் மன்ஹாஸ் கைப்பற்றினர். இதன் அணிகள் பிரிவில் முதல் மூன்று இடங்களை முறையே சர்வீசஸ், அரியானா, .பி., அணிகள் பிடித்தன.
குத்துச்சண்டையில் குழப்பம்:திருச்சூரில், குத்துச்சண்டை போட்டிகள் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டன. ‘கம்ப்யூட்டர்மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, புதிய விதிமுறையின் படி போட்டிகளை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டன. இதனால் பழைய விதிமுறைப்படி போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் தலைக்கவசம் போன்ற உபகரணங்கள் இல்லாததால் பழைய விதிமுறையில் விளையாட, அனைத்து அணிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. பின் ஒருவழியாக போட்டி நடந்தது.
ஜெயவீனா வெள்ளி:பெண்களுக்கான தனிநபர்மெட்லேபிரிவு நீச்சல் போட்டியில், தமிழகத்தின் ஜெயவீனா இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். முதலிடத்தை மத்திய பிரதேசத்தின் ரிச்சா மிர்சா வென்றார். வெண்கலத்தை கர்நாடகாவின் தாமினி கவுடா தட்டிச் சென்றார்

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தீபா கர்மாகர் அவர்கள் பாராட்டிற்கு உரியவர்
பாராட்டுவோம்