தமிழில் முக்கியப் படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இயக்குநராகவும் கவனத்தை ஈர்த்த பழம்பெரும் திரைப்படக் கலைஞர் வின்சென்ட் காலமானார். அவருக்கு வயது 86.சமீபகாலமாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி இறந்தார்.1960 காலகட்டத்தில் பிரபல ஒளிப்பதிவாளராக வலம் வந்தவர் வின்சென்ட். 'கல்யாண பரிசு', 'நெஞ்சம் மறப்பதில்லை', 'தேன் நிலவு', 'காதலிக்க நேரமில்லை', 'எங்க வீட்டு பிள்ளை' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு ஒளிப்பதி வாளராக பணியாற்றியவர்.தமிழில் கறுப்பு - வெள்ளை படங்களில் இருந்து வண்ணப் படங்களுக்கு மாறிய காலக்கட்டத்தில் முக்கியமான ஒளிப்பதிவாளராக திகழ்ந்தவர் வின்சென்ட்.மலையாளத்தில் தற்போது வெளிவரும் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களுக்கு எல்லாம் முன்னோடியாக திகழ்ந்திருக்கிறார். பல்வேறு கருத்துள்ள படங்களை இயக்கியுள்ளார்.'துலாபாரம்', 'நிழலாட்டம்' போன்ற முக்கியமானப் படங்களை இயக்கியவர். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள மொழி சினிமாவில் மிகப் பெரிய பங்களிப்பை அளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..
No comments:
Post a Comment