மதுரையில் உள்ள எல்.ஐ.சி. மண்டல அலுவலக ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுயறுத்தி நேற்று 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. ஓய்வூதியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். காப்பீட்டு கழக ஊழியர்கள் சங்கத்தின் மதுரை மண்டல பொது செயலாளர் சுரேஷ் குமார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அப்போது, எல்.ஐ.சி. ஊழியர்களுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு வழங்கப்படுவது வழக்கம். ஆனால், கடந்த 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை. அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் 12.5 சதவீதம் தருவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி 40 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். நாடு முழுவதும் எல்.ஐ.சி. நிறுவனத்தில் 40 கோடி பேர் பாலிசி எடுத்துள்ளனர். ஆனால் அதற்கேற்ப ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. மதுரை மண்டல அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள அலுவலகங்களில் குரூப்–4 பணியிடத்தில் மட்டும் 150 பேருக்கு பதிலாக வெறும் 23 பேர் மட்டுமே வேலைபார்த்து வருகின்றனர் என்றார். இந்த போராட்டத்தால் மதுரை மண்டல அலுவலகம் சுமார் 2 மணி நேரம் வெறிச்சோடி காணப்பட்டது. LIC ஊழியர்களின்AIIEA போராட்டம் வெற்றி பெற நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தோழமை பூர்வமான வாழத்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
No comments:
Post a Comment