Thursday 19 February 2015

ERP- ESS விடுப்பு விண்ணப்பிப்பது எப்படி?

ERP – ESS என்ற இணையளதத்துக்குச் செல்லவும்.
* User Id என்ற இடத்தில் HRMS எண்ணின் முதல் எண்ணைத் தவிர்த்து மீதி எட்டு ண்களை டைப் செய்யவும்.
(உதாரணம் 197900944 என்பதில் 97900944 )என டைப் செய்ய வேண்டும்.ரகசிய எண்ணை (Password) டைப் செய்யவும்.  
பிறகு ஒரு திரை வரும்.
* அதில்  இடது பக்கத்தில் welcome என்ற இடத்தில் உங்கள் பெயர் வரும். அதற்குக் கீழ் உள்ள Employee Self Service என்பதை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு வரும் திரையில் வலது பக்கத்தில் “Working time”  என்பதை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு வரும் திரையில் இடது பக்கத்தில் “Leave Request”என்பதை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு வரும் திரையில் name of leave என்பதில் என்ன விடுப்பு  தேவை என்பதைத் தேர்வு செய்யவும்.
(Casual laeave, EL,Commuted Leave, RH)
* அதன் பிறகு வலது பக்கத்தில் From என்பதில் தேதியை தேர்வு செய்யவும். பிறகு To  என்பதில் தேதியை தேர்வு செய்யவும்.
* பிறகு Reason to leave என்பதில் Personal, Illness என தேவைக்கேற்றவாறு டைப் செய்யவும்.
* பிறகு கீழே உள்ள Check என்ற பட்டனை கிளிக் செய்யவும். விடுப்பை அனுமதிக்கும் உரிய அதிகாரியின் பெயர்,  பதவி திரையில் வரும். அதன் பிறகு send என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
* உங்கள் வேண்டுகோள் உரிய அதிகாரிக்குச் சென்று விடும்.
* குறியிட்ட இடங்கள் கட்டாயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.
* பாஸ்வோர்டை மிகவும் கவனமாக கையாள வேண்டுகிறோம்.
* பிறகு தவறாமல் திரையின் வலது பக்கத்தில் உள்ள LOG OFF என்ற பட்டனை கிளிக் செய்யவும். பிறகு வரும் திரையில் yes என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

No comments: