பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 7 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் 90 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது.இதன்மூலம் பெட்ரோல் விலை லிட்டர் ரூ. 60 ஆகவும், டீசல் 49 ரூபாய் 50 காசுகளாகவும் அதிகரித்துள்ளது. இந்த புதிய விலை உயர்வு, புதன்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்விலை கடுமையாக சரிந்த போதும், அதன் பயன் மக்களுக்கு கிடைக்காமல் கலால் வரி மூலம் மோடி அரசு தடுத்து வந்தது. தற்போது நேரடியாக விலையை உயர்த்தி அறிவித்துள்ளது.
Thursday, 17 March 2016
மல்லையாவுக்கு நெருக்கடி முற்றுகிறது: 4 பிணையில்லாத சம்மன் அனுப்பியது நீதிமன்றம்
ஹைதராபாத்தில் உள்ள எராமஞ்சில் நீதிமன்றம் நேற்று விஜய் மல்லையாவுக்கு நான்கு பிணையில்லாத சம்மன் அனுப்பியுள்ளது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி விமான நிலையத்துக்கு வழங்க வேண்டிய ரூ.2 கோடியில் செக் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் விஜய் மல்லையா ஆஜராகாததை தொடர்ந்து அவருக்கு இந்த சம்மன் அனுப்பப்டுள்ளது.இது பற்றி விஜய் மல்லையாவின் வழக்கறிஞர் ஹெச். சுதாகர் ராவ் கூறுகையில்,2 கோடி ரூபாய்க்கான செக் மோசடி வழக்கு தொடர்பாக நான்கு பிணையில்லாத சம்மன் நேற்று வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பாகவும் பிணையில்லாத சம்மன் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்திற்கு செல்ல இருக்கிறோம். மேலும் இந்த பிணையில்லாத சம்மனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய இருக்கிறோம் என்று தெரிவித்தார்.
இபிஎஃப்ஓ விசாரணை.இதற்கிடையே கிங்பிஷர் நிறுவனம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் செய்துள்ள முறைகேடுகள் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொள்வார்கள் என்று தொழிலாளர் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இது தொடர்ப்பாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.செப்டம்பர் 2015க்கு பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொழிலாளர் வருங்கால வைப்பு நிலுவைகள் குறித்து அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற் கொள்ள ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு 7.62 லட்சம் நிலுவை வைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் இந்த நிலுவையை செலுத்த வேண்டும் என இது தொடர்பாக ஆணையம் விஜய் மல்லையாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.இது தொடர்பாக நிறுவனத் துக்கு அனுப்பியுள்ள அறிக்கை யில் அபராதம் (ரூ.3,34,016) மற்றும் வட்டி நிலுவை (ரூ.3,55,678) மற்றும் குறுகிய காலத்தில் செலுத்த வேண்டிய தொகையை காலம் தாழ்த்துவதற்கான கட்டணம் (ரூ.71,910)உள்ளிட்ட வற்றை உடனடியாக கட்ட வேண்டும் என அறிக்கை அனுப்பியுள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய மொத்த தொகையின் மதிப்பு ரூ.7,61,604 என்று அமைச்ச அறிக்கை குறிப்பிட்டுள்ளது.விஜய் மல்லையா இந்தியாவில் பல்வேறு வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். இந்த நிலையில் இவருக்கு கடன் கொடுத்த வங்கிகள் நீதிமன்ற நடவடிக்கை எடுக்க முயற்சித்து வந்தன. அமலாக்கத்துறை வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் தற்போது உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து மார்ச் 2 வெளியேறிவிட்டார்.கடைசியாக மேற்கொண்ட ஆய்வில் நிறுவனம் 2012 டிசம்பர் வரை சம்பளம் மற்றும் இதர நிலுவைகள் மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிகளை செலுத்தியுள்ளது. கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் 6,185 பணியாளர்களுக்கான பிஎப் பணத்தை மார்ச் 2012 வரை செலுத்தியுள்ளது.ஜனவரி 2005ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையத்தில் பதிவு செய்யப் பட்டுள்ளது என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. பணியாளர் களின் எண்ணிக்கையை 2012 டிசம்பருக்கு பிறகு குறைத்த நிறுவனம் செயல்பாடுகளையும் நிறுத்தியது. அதற்கு பிறகு செப்டம்பர் 2015 வரை மிக குறைந்த அளவில் 2 நிர்வாக பணி யாளர்களுக்கான கட்டணங்களை மட்டும் செலுத்தியுள்ளது.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பணியாற்றிய இறந்த 12 பணியாளர்கள் உட்பட 5675 பணியாளர்கள் பிஎஃப் கிளைம் செய்துள்ளனர் என்று அமைச்சக அறிக்கை கூறியுள்ளது. எனிலும் கிங்பிஷர் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்கள்/ தொழிலாளர்கள் அமைப்புகள் போன்றவற்றிடமிருந்து தொழி லாளர் வருங்கால வைப்பு நிதி நிலுவை தொடர்பாக எந்த புகாரும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் இல்லை என்று அமைச்சகம் கூறியுள்ளது.
Wednesday, 16 March 2016
Tuesday, 15 March 2016
CUG- SIM -ல் C&D ஊழியர்கள் பிற நிறுவன எண்களை அழைக்க வசதி.
அருமைத் தோழர்களே ! BSNLCUG-யில் C&D ஊழியர்களுக்கு
வழங்கப்பட்ட மாதம் ரூ.200/= இலவச SIMல் தனியார் அலைபேசிகளை அழைக்கும் வசதி தரப்படாமல் இருந்தது.
இதனால் நமது தோழர்கள் குறிப்பாக
TM தோழர்கள் தனியார் அலைபேசியை உபயோகிக்கும்
வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ள இயலாத நிலை
நிலவியது. இப்பிரச்சினை நமது BSNLEU சங்கத்தால் கோரிக்கை எழுப்பப்பட்டு இருந்தது. தற்போது இந்த கோரிக்கை நிர்வாகத்தால்
ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது.
மாதம் ரூ.50/= அளவிற்கு மாநில எல்லைக்குள் தனியார் அலைபேசிகளை ஊழியர்கள் CUG -SIMல் தொடர்பு கொள்ளலாம் என BSNL நிர்வாகம் 09/03/2016 அன்று உத்திரவிட்டுள்ளது.இது நமது BSNLEU சங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.
Monday, 14 March 2016
மார்ச்-14 மாமேதை காரல் மார்க்ஸ் நினைவு தினம்...
போராளிகளின் கலங்கரை விளக்கம் - காரல் மார்க்ஸ்! ...
தோழர் மார்க்ஸ் மறைந்து 133 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. ஆனாலும் உலகம் எங்கும் சோசலிச மாற்றத்தை விரும்பும் லட்சக்கணக்கான போராளிகளுக்கு கலங்கரை விளக்காக மார்க்ஸ் தொடர்கிறார். அவரது மகத்தான படைப்புகள் சோசலிசப் போராட்டத்திற்கு ஆய்வுக் களஞ்சியமாக மட்டுமல்ல, நடைமுறைப் பணிகளுக்கு கூர்மையான வழிகாட்டியாகவும் திகழ்கின்றன. மார்ச்`14 மட்டுமல்ல, மார்ச்-18ம் கூட ஒரு முக்கியத்துவமான நாள்தான் ! ஏனெனில் அன்றுதான் மார்க்சும் ஏங்கெல்சும் கூட்டாக உருவாக்கிய கம்யூனிஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட நாள் . . .
Sunday, 13 March 2016
13-03-16 SNATTA மாநில செயற்குழுவில் நமது வாழ்த்து...
அருமைத் தோழர்களே ! 7வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தலில், நமது BSNLEU சங்கத்துடன் இணைந்து பணியாற்ற SNATTA சங்கம், நமது பொதுச் செயலர், தோழர் பி. அபிமன்யு அவர்களும், SNATTA பொதுச் செயலர் தோழர், அனுப் முகர்சி ஆகியோர் இடையே இரு சங்கங்களுக்கு தேர்தல் கூட்டு ஒப்பந்தம் உருவாகியுள்ள சூழ்நிலையில் மதுரை CTMX மன மகிழ் மன்றத்தில் 13-03-16 அன்று நடைபெற்ற SNATTA தமிழ் மாநில சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நமது BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக, மாவட்டத்தலைவர் தோழர்,சி. செல்வின் சத்தியராஜ், மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் ஆகிய இருவரும் நேரடியாக சென்று வாழ்த்துக் கூறியதோடு தேர்தலை இணைந்து சந்திக்க அழைப்பு விடுவிக்கப் பட்டது. SNATTA சங்கத்தின் தமிழ் மாநில செயலர் தோழர்.பி. அழகு பாண்டியராஜா, இந்திய முழுவதும் கிட்டத்தட்ட 10000-க்கும் மேற்பட்டSNATTA உறுப்பினர்கள் BSNLEU சங்கத்தின் வெற்றிக்கு வாக்களிப்பார்கள் என, உறுதியளித்தார். மதுரையில் தொடர்வெற்றியை உறுதி படுத்துவோம். நம்மை வாழ வைத்த BSNLEU சங்கத்திற்கு வாக்களிப்பது நமது வர்க்க கடமையாகும் .
Wednesday, 9 March 2016
பி.எப் தொகைக்கு வரி இல்லை-தொழிலாளர் எதிர்ப்புக்கு மோடி அரசு பணிந்தது.
தொழிலாளர்களின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வருங்கால வைப்பு நிதிக்கு வரி விதிக்கும் முடிவிலிருந்து, நரேந்திரமோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பின்வாங்கியது.இத்திட்டம் குறித்து வந்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் பி.எப். வரி விதிப்புத் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்ய விரும்பு வதாகவும், எனவே இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுவதாகவும் நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.2016-17ம் ஆண்டு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் அருண்ஜெட்லி, 2016-ஆண்டு ஏப்ரல் 1-க்கு பின்பு பி.எப். பிடித்தத் தொகையை தொழிலாளர்கள் எடுக்கும்போது, அதில் 60 சதவிகிதத் தொகைக்கு வரிகட்ட வேண்டும் என்று அறிவித்தார்.
தொழிலாளர்கள் அவர்களின் சேமிப்பிலிருந்து எடுக்கும் பணத்திற்கு வரி விதிக்கும் இந்தவிநோதமான அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன அப்போது, முழு பி.எப். தொகையையும் எடுக்கும்போதுதான் 60 சதவிகித எடுப்புத் தொகைக்கு வரி விதிக்கப்படும் என்றும், மாறாக அந்த 60 சதவிகிதத் தொகையும் ஏதாவது ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டால் அதற்கு வரிவிதிப்பு கிடையாது என்றும் அருண்ஜெட்லி சமாளித்தார். அதற்கு, ஒரு திட்டத்திலிருந்து எடுத்துமற்றொரு திட்டத்தில் சேமித்தால் வரிஇல்லை என்று சொல்வது மோசடியானது என்றும், எப்போதாவது தங்களின் சேமிப்பை எடுத்து, குடும்பத் தேவைகளுக்காக செலவழித்துத்தான் ஆக வேண்டும்; அப்படியிருக்க பி.எப். தொகையை வேறு திட்டத்தில் முதலீடு செய்ய நிர்ப்பந்திப்பதாக அரசின் அறிவிப்பு உள்ளது என்றும், தொழிற்சங்கத்தினர் கொந்தளித்தனர். தங்களின் பணத்தை எங்கு, எதில் முதலீடு செய்வது என்பதைத் தேர்வு செய்வது அந்தந்த தொழிலாளர்களின் உரிமை என்றும் குறிப்பிட்டனர். எதிர்க்கட்சிகளும் இந்த வரிவிதிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினர்.
பாஜக கூட்டணி கட்சிகளில் சிலவும்கூட வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன.எதிர்ப்பு முற்றுவதை அறிந்த நரேந்திரமோடி அரசு, செவ்வாயன்று நிதியமைச்சர் அருண்ஜெட்லி மூலம், நாடாளுமன்றத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில் “வரி விதிப்புத் திட்டம் குறித்து வந்த கருத்துகளின் அடிப்படையில், பல்வேறு கோணங்களில் மத்திய அரசு பி.எப். வரிவிதிப்புத் திட்டத்தை ஆய்வு செய்ய விரும்புகிறது; எனவே, இந்த வரிவிதிப்புத் திட்டத்தை மத்திய அரசு கைவிடுகிறது” என்றும் கூறப்பட்டு உள்ளது.
JTO இலாக்கா போட்டி தேர்வு - விண்ணப்பிக்கும் தேதி மாற்றம்...
அருமைத் தோழர்களே ! JTO
பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைப்பெறும் என முன்பு அறிவிக்கப் பட்டிருந்தது . இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிப் பதற்கு முன்பு உத்தரவு வெளியிடபட்டிருந்தது. நமது BSNLEU மத்திய சங்க முயற்ச்சியால் தற்போது, 15.03.2016 முதல் இணையம் மூலம் விண்ணபிக்க திருத்தப் பட்ட உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
JAO பதவி உயர்வு இலாக்கா போட்டி - தேர்வு தேதி மாற்றம்...
அருமைத் தோழர்களே ! JAO பதவி உயர்வு இலாக்கா போட்டி தேர்வு 22.05.2016 அன்று நடைபெறும் என் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.. இணைய தளம் மூலம் 10.03.2016 முதல் விண்ணபிக்க உத்தரவு வெளியிடபட்டிருந்தது.
JTO மற்றும் JAO தேர்வுகள் ஒரே தினத்தில், நடைப்பெற இருந்ததால், இரண்டு தேர்விலும் பங்கேற்க விரும்பிய ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்படும் என்பதை உணர்ந்து நமது BSNLEU மத்திய சங்கம் தேர்வு தேதியை மாற்ற கோரியிருந்தது. நமது கோரிக்கை எற்கப்பட்டு JAO தேர்வு தேதி, 17.07.16க்கு மாற்றப்பட்டுள்ளது. 15.03.16 முதல்இணையதளம் மூலம் விண்ணபிக்க திருத்தப்பட்ட உத்தரவு வெளியிடப் பட்டுள்ளது. இதன் முழு விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்.
Tuesday, 8 March 2016
மார்ச் -7 மதுரையில் நீதி கோரி ஆர்ப்பாட்டம் ...
அருமைத் தோழர்களே ! மதுரை BSNL மாவட்ட நிர்வாகம் மேல் அமைப்புகளான, கார்பரேட், மாநில நிர்வாகங்கள் வழிகாட்டுதலை கூட அமல்படுத்துவதில் அலட்சியம் செய்வதும், மாவட்ட அளவில் பலமுறை விவாதித்து ஏற்கட்டப்பிரச்சனையில் கூட அமல்படுத்த மறுப்பது போன்ற பொருத்தம்மில்லாத, ஏற்க முடியாத நடை முறைகளை கடைபிடிப்பதை ஒரு போதும் ஏற்கமுடியாது. ஏற்கனவே, போடப்பட்ட உத்தரவுகளை கீழ்மட்டத்தில் அமலாகவில்லை யெனில் முறைப்படுத்த வேண்டிய, மனித வள மேம்பாட்டு அதிகாரி (DGM-Hr) வேடிக்கை பார்ப்பதும், அதை சரி செய்ய வேண்டிய பொதுமேலாளர் தலையிடா கொள்கை கடைப்பிடிப்பதும், அனுமதிக்க முடியாது யென அறிவிப்பு கொடுத்துத்தான் நமது ஆர்பாட்டம் நடத்தினோம். மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இந்த முறையற்ற நிலைபாட்டை நமது BSNLEU தமிழ் மாநில சங்கத்திற்கு தெரிவித்துள்ளோம் . மாநில சங்கம் தலையிடுவதாக கூறியுள்ளது. அதன்பிறகு மாநில சங்கம் வழிகாட்டுதலின் அடிப்படையில் அடுத்த கட்ட போராட்டம் நடைபெறும்.
7-3-16 ஆர்பாட்டத்திற்கு BSNLEU + TNTCWU மாவட்ட த்தலைவர்கள் முறையே, தோழர்கள் சி. செல்வின் சத்யராஜ், கே.வீரபத்திரன் ஆகியோர் கூட்டுத்தலைமை பொறுப்பேற்றனர். ஆர்பாட்டத்தின் கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பட்டது. BSNLEU + TNTCWU மாவட்ட செயலர்கள் முறையே, தோழர்கள் எஸ். சூரியன், என். சோணைமுத்து ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை நிகழ்த்தினர். மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், எஸ். ஜான் போர்ஜியா, பி . சந்திர சேகர் இருவரும் மாவட்ட நிர்வாகத்தின் நிலைபாடு மட்டற்ற வேண்டிய ஒன்று என்பதை எடுத்துக் கூறினர். நிறைவாக மாவட்ட உதவிச் செயலர். தோழர்.எ. நெடுஞ்சழியன் மாற்று சங்கங்களின் மட்ட ரகமான பொய் பிரச்சாரத்தை சாடியதோடு ஆர்பாட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி உரை நிகழ்த்தினார். சிவன்ராத்திரி நாள் என்ற போதும் திரளாக கலந்து கொண்ட தோழர், தோழியர்களுக்கும், தங்களது பணி நிறைவிற்கு பின்னும் தொடர்ந்து அனைத்து நிகழ்விலும், தஙகளை முழுமையாக ஈடுபடுத்தி வழிகாட்டி வரும் தோழர்கள் ஜி.கே. வெங்கடேசன், எஸ். இராமலிங்கம் ஆகிய இருவருக்கும் நமது மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றோம்.
கலாபவன் மணியின் சாவில் மர்மம் - நடிகர் உள்ளிட்ட 5 பேரிடம் போலீஸ் விசாரணை
திரைப்பட நடிகர் கலாபவன் மணி மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் கொடுத்தபுகாரின் பேரில், நடிகர் உட்பட 5 பேரிடம் போலீசார் விசாரணையைத் துவக்கி உள்ளனர்.தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட உலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் கலாபவன்மணி. கடைசியாக தமிழில் பாபநாசம் படத்தில் கமல்ஹாசனுடன் நடித்திருந்தார். அண்மைக் காலமாக நுரையீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறுகள் காரணமாக கொச்சியில் உள்ள அமிர்தா மருத்துவ மனையில் மணி சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ஞாயிறன்று இரவு மணி இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. இது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மணிக்கு 45 வயதுதான் ஆகிறது.இதனிடையே மணியின் உடலை பிணக்கிடங்குக்கு எடுத்துச்செல்ல முயன்றபோது, அவரது சாவில் மர்மம் இருப்பதாக மணியின் சகோதரர் ராமகிருஷ்ணன் சந்தேகம் எழுப்பினார். இந்த மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சாலக்குடி போலீசாரிடம் புகாரும் அளித்தார். போலீசார் அதை ஏற்றுக்கொண்டு, பிரிவு 174-ன் கீழ் F.I.R. பதிவு செய்தனர். விசாரணைக்காக தனிப்படையும் அமைத்தனர்.டிஎஸ்பி கே. சுதர்சன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த தனிப்படை ஞாயிறன்று இரவே கலாபவன் மணியின் சாலக்குடி இல்லத்தில் தீவிர விசாரணை செய்தது. அந்த இல்லத்தில்தான் கலாபவன் மணி, சுயநினைவின்றிக் கிடந்துள்ளார். பின்னர் அங்கிருந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். எனவே, மணி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பாக அவருடன் தங்கியிருந்த நடிகர் ஒருவர் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் விசாரித்துள்ளனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மணியின் உடலில், கள்ளச் சாராயத்தில் உள்ள மெத்தனால் என்ற நச்சுத்தன்மையுள்ள அமிலம் இருந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால், திருச்சூர் அரசு மருத்துவமனையில் திங்களன்று காலை மணியின் உடலுக்கு உடற்கூராய்வு நடத்தப்பட்டது. அதில் கிடைக்கும் தகவல்களைப் பொறுத்து, மணியின் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)


















