Thursday, 9 April 2015

08.04.2015 மதுரை SSA-FORUM கூட்டம் . . .

அருமைத் தோழர்களே ! 08.04.2015 புதன்கிழமை அன்று BSNLEU சங்க அலுவலகத்தில் SNEA  மாவட்டசெயலர் தோழர்.கே.தெய்வேந்திரன் அவர்கள் தலைமையில்  மதுரை SSA-FORUM கூட்டம் நடைபெற்றது .
கூட்டத்தில் மதுரை SSA-FORUM தலைவரும், NFTE மாவட்டச் செயலருமான தோழர்.எஸ். சிவகுருநாதன், AIBSNLEA அகில இந்திய சங்கத்தின் அட்வைசர் தோழர்.V.K.பரமசிவம், மாவட்டச்செயலர் தோழர்.எஸ். சுப்பிரமணியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர் எம். சிவகுமார், BSNLEU மாவட்டசெயலரும், மதுரை SSA-FORUM கன்வீனருமான தோழர்.எஸ். சூரியன், மாவட்டத்தலைவர் தோழர்.சி . செல்வின் சத்தியராஜ், மாவட்ட பொருளர் தோழர். எஸ். மாயாண்டி, மாவட்ட உதவிச் செயலர் தோழர். எ. நெடுஞ்சழியன், மாவட்ட அமைப்பு செயலர் தோழர். என். செல்வம், N/S கிளைச்செயலர் தோழர்.எம். சிவராமன், முன்னாள் மாவட்ட உதவிச் செயலர், ஜி.கே. வெங்கடேசன், CSC கிலைஉதவித் தலைவர் தோழர். எஸ். சங்கர், SNEA மாவட்ட உதவிப் பொருளர்  தோழர் எஸ்.மலைச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மதுரை SSA-FORUM கன்வீனர்  தோழர்.எஸ். சூரியன், அகில இந்திய அளவில் BSNL-லில்   உள்ள அனைத்து ஊழியர்களும், அதிகாரிகளும் பங்கு பெற உள்ள  ஏப்ரல் 21 & 22 இரு நாட்கள் வேலை நிறுத்தத்தின் அவசியம், நோக்கம் குறித்தும், நமது மதுரை SSA-யில், வேலை நிறுத்தத்தை எவ்வாறு வெற்றிகரமாக்குவது என்பது குறித்தும் கருத்துக்களை முன் வைத்தார்.  மேலும் செழுமை படுத்தி அனைத்து தோழர்களும் நல்ல பல கருத்துக் களை தெரிவித்தனர். பல்வேறு ஆலோசனைகளுக்குப் பிறகு இறுதியாக கீழ்கண்ட முடிவுகளை அமலாக்குவது என முடிவு எடுக்கப்பட்டது.
1.  09.04.2015 அன்று  மதுரை SSA-FORUM சார்பாக  வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு கோரி அனைத்து மாவட்ட சங்க நிர்வாகிகளையும் சந்திப்பது. 
2.  போராட்டத்தை விளக்கி 3000 நோட்டிஸ் மற்றும் 300 போஸ்டர் வெளியிடுவது .
3.  13.04.15 அன்று தேனியிலும், 15.04.15 அன்று மதுரையிலும், 17.04.15 அன்று திண்டுக்கல் லிலும்  வேலைநிறுத்த விளக்க கூட்டங்களை நடத்துவது.
4.  15.04.15 அன்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்துவது.
5.  20.04.15 அன்று மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 3 ரெவன்யு மாவட்டங்களிலும் வேலைநிறுத்தத்தை விளக்கி "டூ வீலர்" பிரச்சாரத்தை நடத்துவது. போன்ற முடிவுகள் எட்டப்பட்டது. இறுதியாக தோழர் எஸ். மலைச்சாமி நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது. அனைத்து முடிவுகளையும் சிரமேற்கொண்டு அமல்படுத்தி வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கிட வேண்டுகிறோம்.---எஸ். சூரியன் .

No comments: