போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக போக்குவரத்துக்கழக சங்கங்களுடன் சென்னையில் நேற்று 6ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், 5.5 சதவீத ஊதிய உயர்வை வழங்க தமிழக அரசு முன்வந்தது. இதனை அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 32 சங்கங்கள் ஏற்று கொண்டதால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், இந்த ஊதிய உயர்வை ஏற்க, சிஐடியூ, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் மறுத்து விட்டன. இதனை அடுத்து, தொமுச, சிஐடியூ உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்கள் நேற்று மாலையில் கூடி ஆலோசனை நடத்தியது. அதில், தமிழக அரசு அறிவித்துள்ள 5.5 சதவீத ஊதிய உயர்வை ஏற்க மறுத்து, இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment