Monday 27 April 2015

தோழர்.சையது இமாமுக்கு BSNLEU-வின் இனிய பாராட்டு...

அருமைத் தோழர்களே ! பல ஆண்டுகளாக வத்தலக்குண்டு  கிளைச் செயலராக சிறப்பாக பணியாற்றி 30.04.15 இந்தஏப்ரல்மாதம்பணிநிறைவு செய்ய காத்திருக்கும்,  அன்பிற்கினிய தோழர்.சையது இமாம். கடந்த 21 & 22 தேதிகளில் இந்திய நாடு முழுவதும் நடைபெற்ற "SAVE BSNL" போராட்டத்தில் கலந்துகொண்டவருக்கு BSNLEU-வின் இனிய பாராட்டு...விழா 27.04.2015 அன்று வத்தலக்குண்டு "அஸ்மா மகாலில்" மிக மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தோழர். மகாராஜன் தலைமையில், தோழர். காசிராஜன் முன்னிலை வகுக்க, தோழர்.பிச்சை கண்ணு வரவேற்புரை  நல்க, நமது BSNLEU சங்க தோழர்களும், உற்றார் உறவினர்களுமாக நூற்று கணக்காணோர் புடைசூழ, நமது தோழர் சையது இம்மாம் அவர்களுக்கு, மண்டபமே நிறைந்த காட்சியாக  நல்ல தொரு பணி நிறைவு பாரட்டு விழா நடந்தேறியது...
மாவட்டச்  செயலர் தோழர்.எஸ். சூரியன் தனது பாராட்டுரையில், தோழர்.சையது இமாம்  தபால்-தந்தி துறையில் 7 ஆண்டு காலம் பகுதி நேர ஊழியராக, ரெகுலர் மஸ்தூராக, டெலிகாம் துறையில் லைன் மேனாக, BSNL பொதுத்துறையில்  டெலிகாம் மெக்கானிக்காக கிட்டத்தட்ட ஆக மொத்தம் 40 ஆண்டுகளாக அலுவல ரீதியாகவும், தொழிற் சங்க ரீதியாகவும் சிறந்த பணியை செய்து முடித்துள்ளார். ஒரு ஊழியர் அலுவல் = சங்கப்பணி  இரண்டிலும் ஒருசேர நல்ல பெயர் எடுப்பது என்பது மிக மிக அரிதாகும். ஆனால் அந் நல்ல பெயரை எடுத்துள்ள அருமைத் தோழர் சையது இமமம் அனைவரின் பாராட்டுக்குரியவர் ஆகும். 
 அதன்பின் மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள், பி. சந்திர சேகர், சி. செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான் போர்ஜியா மற்றும் தோழர். இருளாண்டி, ஆகியோர் கடந்தகால நினைவுகளையும், தோழர். சையது இமாம்   ஆற்றிய இலாக்கா பணிகள் குறித்தும், தொழிற்சங்க பணிகள் குறித்தும், இன்றுள்ள மத்திய அரசின் நிலைபாடு குறித்தும், போராட்டத்தின் அவசியம் குறித்தும்  விளக்கி உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர். சையது இமாம் ஏற்புரை நிகழ்த்த, தோழர்.சின்னையன் நன்றியுரையுடன், விழா இனிதே நிறைவுற்றது....வாழ்த்துக்களுடன்,எஸ். சூரியன்.

1 comment:

AYYANARSAMY.R said...

Dear Com.
My best wishes for a happy retired life.

Truly yours...
Ayyanarsamy.R
BSNLEU
Dindigul-624 001.