Saturday 18 April 2015

17.04.15 திருப்திகரமான திண்டுக்கல் சிறப்புக்கூட்டம்...

அருமைத் தோழர்களே ! 17.04.15 வெள்ளியன்று திண்டுக்கல் அவுட்டோர் அலுவலக வளாகத்தில் "SAVE BSNL" கோரிக்கைக்காக இந்திய நாடு முழுமைக்கும் BSNL ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் ஏப்ரல் 21 & 22  ஆகிய இரு நாட்கள் நடத்த உள்ள வேலை நிறுத்த விளக்க கூட்டம் மிக சிறப்பாக தோழர்.சி . விஜயரெங்கன்  தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று தோழர்.J. ஜோதிநாதன் உரையாற் றினார் கூட்டத்திற்கு திண்டுக்கல் ரெவன்யு மாவட்டம் முழுவதும் அதாவது , பழனி, ஒட்டன்சத்திரம், வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, வேடசெந்தூர், சின்னாளபட்டி இப்படி அனைத்து பகுதியிலிருந்தும்  தோழர்கள் திரளாக கலந்து கொண்டது நல்ல அம்சமாகும்.....
சிறப்புக்கூட்டத்தை துவக்கிவைத்து தோழர். S. சூரியன், மதுரை SSA-FORUMகன்வீனர் உரை நிகழ்த்தினார். அவர் தனது  உரையில் 20 அம்ச கோரிக்கைகளின் முக்கியத்துவத்தையும், போராட்டத்தின் அவசியத்தையும் விளக்கியதோடு, தமிழகத்தில் 1 லட்சம்  கையெழுத்து இயக்கத்தில்  மதுரை மாவட்டம் தமிழகத்திலேயே முதல் மாவட்ட மாக 80 ஆயிரம் கையெழுத்துக்கு மேல் பெற்று கொடுத்துள்ள அனைத்து தோழர்களையும், குறிப்பாக இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் AIIEA மற்றும் CITU தலைமையில் ஆன தொழிற்சங்க கூட்டமைப்பு, TNTCWU, குறிப்பாக தேனி ரெவன்யு மாவட்ட தோழர்கள் எடுத்த நல்ல முயற்சி மற்றும் பழனி , மதுரை ,திண்டுக்கல் உட்பட மதுரை SSAயில் உள்ள அனைத்து கிளைகளையும் பாராட்டி நன்றி கூறினார். அதேபோன்று ஏப்ரல் 21 & 22 வேலை நிறுத்தத்திலும் மதுரை SSA முதலிடம் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அனைவரும் எடுக்க வேண்டு மென கேட்டுக்கொண்டார்.






 



அதன்பின் போராட்டத்தின் நோக்கம் குறித்தும், மத்திய அரசு கடைபிடிக்கும் வஞ்சனை, தொழிலாளர் விரோத, மக்கள் விரோத கொள்கைகள் குறித்தும் தோழர்கள், S.சிவகுருநாதன்,D/S-NFTE, K.தெய்வேந்திரன்,D/S-SNEA, M.லட்சம்,C.P-NFTE, S.கருப்பையா, CWC-AIBSNLEA, M. சந்திரசேகர்,D.P-SNEA, C.செல்வின் சத்தியராஜ், ACS-BSNLEU, P.சந்திர சேகர், COS-BSNLEU ஆகியோர் உரை நிகழ்த்தினர். தோழர்கள்,S.A.T. வாஞ்சிநாதன்,AIIEA. N. சோனைமுத்து,D/S-TNTCWU, சண்முகம்,TNGEA ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தோழர். சந்திரகுமார்,SNEA நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவுற்றது.
--- போராட்ட வாழ்த்துக்களுடன், எஸ். சூரியன்,---D/S-BSNLEU.

No comments: