சமர்முகர்ஜி நகர், (விசாகப்பட்டினம்) ஏப்.14-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21வது அகில இந்திய மாநாடு துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் தோழர் சமர்முகர்ஜி நகரில் செவ்வாயன்று (ஏப்.14) பேரெழுச்சியுடன் துவங்கியது.மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கட்சியின் முதுபெரும் தலைவர் முகமது அமீன், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மற்றும் மாநாட்டுப் பிரதிநிதிகளின் புரட்சிர முழக்கங்களுக்கு இடையே செங்கொடியை ஏற்றிவைத்தார்.இதனைத்தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ்காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம்யெச்சூரி, எஸ்.ராமச்சந்திரபிள்ளை, மாணிக்சர்க்கார், பிருந்தாகாரத், கே.வரதராசன், முதுபெரும் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் உள்ளிட்டோரும் மாநாட்டுப் பிரதிநிதிகளும் தியாகிகளின் நினைவுச்சின்னத்திற்கு மலர்தூவி வீரவணக்கம் செலுத்தினர்.பொது மாநாடுதோழர் ஆர்.உமாநாத் நினைவரங்கில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பி.ராமச் சந்திரன்பிள்ளை தலைமையில் பொதுமாநாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.மாநாட்டு வரவேற்புக்குழுத்தலைவரும் கட்சியின் ஆந்திரமாநில செயலாளருமான பி. மது அனைவரையும் வரவேற்றுப்பேசினார்.
விசாகப்பட்டினத்தில் துவங்கிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில், வெளிநாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாழ்த்துச் செய்திகளை தெரிவித்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி பேசினார்.
No comments:
Post a Comment