தமிழகம் முழுவதும் ஏப்ரல் 15 முதல் சத்துணவு ஊழிóயர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளதால், மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு தடைபட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஊதிய உயர்வு, காலி பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பயின்று வரும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. சத்துணவு ஊழியர் போராட்டத்தில் ஈடுபடும் சத்துணவு ஊழியர்களின் மீது கடும் நடவடிக்கை, பணியிடை நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அறிவித்தது. மேலும், ஏப்ரல் 15 ல் பணிக்கு வராத சத்துணவு ஊழியர்களுக்கு பதிலாக, ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்களை பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும், இதற்கான உத்தரவை அந்தந்த அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை திரும்ப பெறுவதற்கான முயற்சிகள் ஏப்ரல் 13 இல் நடந்தது. பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கிடையே உடன்பாடு ஏற்படாததால் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர், ஏப்ரல் 13 மாலை முதலே போராட்டம் திட்டமிட்டபடி நடக்கும் என்றனர்.இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியது: சத்துணவு ஊழியர்கள் 34 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment