Monday 13 April 2015

ஜாலியன் வாலாபாக் தியாகிகள்- வீர வணக்கம் - . .

 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 13ம் நாள் இந்திய வரலாற்றில் விடுதலைப்போராட்ட வரலாற்றில் மறக்கமுடியாத மறக்கக் 
கூடாத நாள்.1600 ஆம்ஆண்டுபிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்யும் நோக்குடன் பிரிட்டிஷ் அரசின்
அனுமதி பெற்று இந்தியாவிற்கு வந்ததுபடிப்படியாக வேரூன்றி இந்தியாவில்அன்றைய நிலையில் இருந்த பல
வீனங்களைச்சாதகமாக்கிவேரூன்றிக்கொண்டேவந்தது.
1757 ஆம்ஆண்டு பிளாசிப்போரில் வென்று தனது அதிகாரத்தை உறுதிப்படுத்தியதுஇதற்கு ஆன காலம் 157 ஆண்டுகள்.அதன்
பின்பு 1857 ஆம் ஆண்டுசிப்பாய் களின் எழுச்சி ஏற்பட்டதுமாமேதை மார்க்ஸ் இதனை முதல் இந்தியசுதந்திரப் போர் என்று 
அழைத்தார்.1857ஆம்ஆண்டுடன்கம்பெனிஆட்சிமுடிந்தது.1858லிருந்து மகாராணியின் நேரடி ஆட்சிக்கு இந்தியா உட்பட்டதுபெயர் மாறியது.கொள்கை மாறவில்லை.இந்தியாவைக்கொள்ளைஅடிப்பதுநிற்கவில்லை.பொழுதெல்லாம்எங்கள்செல்வம்கொள்ளைகொண்டுபோகவோ?நாங்கள் சாகவோ என்ற  பாரதியின் வரிகள்வரலாற்றை வெளிப்படுத்தக் கூடிய  வரிகள்.  இந்தியக் கைவினைப் பொருட்கள் புறக்கணிக்கப்பட்டனஇந்தியஆடை களைப் பின் தள்ளி அந்நிய ஆடைகள் முன்னிறுத்தப்பட்டனதொழில்கள் அழிந்தனதொழிலாளர்கள்துயருற்றனர்.சுதேசிப் பொருட்களை வாங்குவோம் விதேசிப் பொருட்களைப் பகிஷ் கரிப்போம் என்ற குரல்கள்ஓங்கின.லோகமான்ய பாலகங்காதர திலகர் டாக்டர் அன்னிபெசன்ட் மகாத்மாகாந்தி 
ஆகியோர் முன்னின்றனர்.டாக்டர் பெசன்ட் அவர்கள் ஹோம்ரூல் என்ற (சுயஆட்சிமுழக்கத்தை வெளியிட்டார்.1914 ம் 
ஆண்டில் இருந்து 19ம்ஆண்டு முடிய உலகயுத்தம் நடைபெற்றதுஉலகம் குலுங்கியதுஎண்ணற்ற உயிர்கள் உதிர்ந்தன.
இதற்குஇடையில் 1917 ம்ஆண்டு சோவியத் யூனியனில் லெனின் தலைமையில் ஆன கம்யூனிஸ்ட் கட்சியின்தலைமையில் புரட்சி நடைபெற்றதுஜார் சக்கரவர்த்தியின் ஆட்சி தூக்கி எறியப்பட்டதுதொழிலாளர்விவசாயிகள் ஆட்சி அமைந்தது 
பாரதியின் பார்வையில் இது ஓர் யுகப்புரட்சி.இந்திய மக்களிடமும் விழிப்புணர்வுபெருகியதுபிரிட்டிஷ் ஆட்சி மருண்டது
ரௌலட் என்பவனின் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது.இந்தியர்களிடம் ருஷ்யப் புரட்சியின் தாக்கம் எப்படி உள்ளது என்பதை ஆய்வு செய்தனர்மக்கள் அதனைஆதரிப்பதும்உத்வேகம் பெற்றதும் ஆக்கம் பெற்று இருப்பதும் புலனாகியது.
ஆகவே அரசு ஒரு சட்டம் இயற்றியதுஅதற்கு ரௌலட் சட்டம் என்று பெயரிட்டது.புரட்சிகரமான பிரசுரங்களைஅச்சடித்தால் விநியோகித்தால் கையில் வைத்திருந்தால் அவர்களைக் காவலர்கள் கைது செய்யலாம்.விசாரணை வேண்டாம் நேரடியாக சிறையில் தள்ளலாம் என்று அச்சட்டம் இருந்ததுகாந்தியடிகள் இதனை ஆள்தூக்கிச் சட்டம் என்றார்தேசியத் தலைவர்கள் எதிர்த்தனர்சத்தியாகிரக இயக்கம் தொடங்கப்பட்டது.வலுப்பெற்றதுஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்றன.1919 ஏப்ரல் 6 அன்று கடையடைப்புக்கு அறைகூவல்விடப்பட்டதுவெற்றிகரமாக நடந்ததுஇந்து முஸ்லீம் ஒற்றுமை வலுப்பட்டது
அனைத்து மதத்தவரும்இணைந்தனர்தொழிலாளர் விவசாயிகள் படித்த வகுப்பினர் வணிகர்கள் கைவினைஞர்கள் 
திரண்டனர்டாக்டர்கைபுதீன் கிச்சலு டாக்டர் சத்யபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்மக்களின் கோபம் கூடுதல்
 ஆனது.1919ஆம்ஆண்டு ஏப்ரல் 13 அன்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள
 ஜாலியன் வாலாபாக் மைதானத்தில்பல்லாயிரம்பேர்கூடினர். 20 ஆயிரம் பேர் என்று மதிப்பிடப்படுகிறதுமூன்று பக்கமும்பெருஞ்சுவர்ஒரே ஒருசிறிய வழி தான் வாசல்வாசல் 
மறைக்கப்பட்டது.100ஆங்கிலசிப்பாய்கள், 50 இந்திய   சிப்பாய்கள்   பாதையைமறித்தனர்.  உள்ளிருந்த   மக்கள் மீது   கடும்  துப்பாக்கிக்சூடு 10 நிமிடங்கள் இடைவிடாமல் நீடித்தது1650 தடவைகள்சுடப்பட்டனஒரு சிப்பாய் 33 முறை சுட்டான் வெளியே வரமுடியாமல் மக்கள் உயிரிழந்தனர்.1000 பேருக்கு மேல்உயிரிழப்புபல்லாயிரக்கணக்கில் உடல் ஊனம்உலகமே 
அதிர்ந்ததுபிரிட்டன் அரசு 379 பேர் உயிரிழந்ததாகக்கூறியது.ஹண்டர் என்பவன் தலைமையில் விசாரணை குழு 
அமைக்கப்\பட்டதுஜெனரல் டயர் வாக்கு மூலம்தந்தான்.
குண்டுகள்   தீர்ந்து   விட்டன.  இருந்திருந்தால்   இன்னும்   சுட்டிருப்பேன்   என்றான்.  மக்களை அச்சுறுத்துவது மட்டும்அல்ல நம்மை நினைத்தாலே குலை நடுக்கம் ஏற்பட வேண்டும் அதற்காகவே இவ்வாறு செய்தேன்என்றான்.சொந்த நாட்டு நலனுக்காக சொந்தத் தொழிலைப் பாதுகாப்பதற்காக நமது முன்னோர் உயிரிழந்தனர்.அனைத்து மதத்தவரும் திரண்டனர்.இன்றைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் இராட்சதக் கழுகுகளாக வருகின்றன.நமது ஒற்றுமை முன்பை விடப் பன்மடங்கு தேவைஜாலியன் வாலாபாக் தியாகிகளுக்கு நமது வீர வணக்கம்உரித்தாகட்டும். .

No comments: