Sunday, 12 April 2015

20 தமிழர்கள் படுகொலை ஏப்.22- ஹைதராபாத்தில் பகிரங்க விசாரணை தேசிய மனித உரிமை ஆணையம் நடத்துகிறது.

திருப்பதி வனப் பகுதியில் ஆந்திர காவல்துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமிழக தொழிலாளர்கள் 20 பேர்.செம்மரம் கடத்தியதாகக் கூறி 20 தமிழர்களை ஆந்திர போலீசார் சித்ரவதை செய்து சுட்டுக் கொன்ற விவகாரத்தில், ஏப்ரல் 22-ம்தேதி ஹைதராபாத்தில் பகிரங்க விசாரணை நடத்தப்படும் என்று தேசிய மனிதஉரிமை ஆணையம் தெரிவித்துள்ளது  .ஆணையத்தின்  தலைவரும், உச்ச நீதிமன்ற முன்னாள்தலைமைநீதிபதியுமான கே.ஜி.பால   கிருஷ்ணன்,     திருவனந்தபுரத்தில் அளித்த பேட்டியில் இதனை தெரிவித்துள்ளார்.நாடு முழுவதும் நீதிக்குப் புறம்பாக, சட்ட விரோதமாக நடந்த பல்வேறு என்கவுண்ட்டர் சம்பவங்களில் தேசிய மனித உரிமை ஆணை யம் தானாகவே முன் வந்துவிசாரணை நடத்தி நீதியை நிலை நாட்டி உள்ளது; அந்த வகையில், ஆந்திர வனப்பகுதியில் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டினார்கள் என்று கூறி 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும், தெலுங்கானா மாநிலம் நளகொண்டாவில் 5 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் பற்றியும், தேசிய மனித உரிமை கமிஷன் விசாரணை நடத்துகிறது;இதற்காக ஆணையத்தின் அடுத்த கூட்டத்தைஆந்திராவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஎன்று அந்த பேட்டியில் கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.“நீதிக்கு புறம்பாக சம்பவங்கள் நடந்ததா? என்பது பற்றி, ஏப்ரல் 22-ம் தேதிநடைபெறும் பகிரங்க விசாரணையின் போது, விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்என்றும் குறிப்பிட்டுள்ள பாலகிருஷ்ணன், “விசாரணையின் போது, சம்பவம் தொடர்பான உண்மைகளை பொதுமக்களும், பாதிக்கப்பட்டவர்களும் நேரில் தெரிவிக்கலாம்;துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட காவல்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அனைவருமே ஆணையம் முன்பு ஆஜராகசம்மன் அனுப்பப்படும்என்றும் தெரிவித்துள்ளார்.“இந்த விசாரணையில் உண்மையைக் கண்டறியதேசிய மனித உரிமைஆணையம் தன்னிச்சையாக அனைத்து தகவல்களையும் சேகரிப்பதோடு, அதன் உண்மைத் தன்மை குறித்தும், அதிகாரிகளின் அறிக்கை பற்றியும் விசாரித்து முடிவு எடுக்கும்; என்கவுண்ட்டர் சம்பவம் பற்றிபுகார்கள் வரும் பட்சத்தில் மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை தேசிய மனித உரிமைஆணைம் அமைத்துள்ளதால், தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் பிரேதப் பரிசோதனை நடத்துவது பற்றியும் முடிவு செய்யப்படும்என்று பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.20 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், விளக்கம் கேட்டு ஏற்கெனவே ஆந்திர டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், தற்போது பகிரங்க விசாரணையையும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவித்திருக்கிறது.தெலுங்கானா மாநிலத்தில் தீவிரவாதிகள் எனக்கூறி 5 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் ஏப்ரல் 23-ம் தேதி பகிரங்க விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

No comments: