Thursday 9 April 2015

20 பேர் கொலையும் வெடிக்கும் கேள்விகளும் . . .

``கட்டையெல்லாம் லைனா வரிசையா கேப் விட்டு, கேப் விட்டுப்போடுங்கடா..
.``அங்கபாரு ஒரு கட்டை கோணலாக் கிடக்கு பாரு.. டேய் அத பன்னுடாங்...
 வேளச்சேரியில் வடநாட்டவர் என்று சுட்டுக்கொன்றது மனித உரிமை மீறல் இல்லையா ? தமிழகத்தில் இதுபோல் மனித உரிமை மீறப்படும்போது அதனை சட்டம் ஒழுங்கைப் பேணும் துணிச்சலான நடவடிக்கை என நெஞ்சிலே ஈரமற்றுப் பாராட்டியவர்கள் இப்போது என்ன சொல்லப் போகிறார்கள் ?-இந்த பெருங்கொள் ளையில் பெரும்பங்கைச் சாப்பிடும்     பெரியமனிதர்களை அவர்கள் வசதியாக வாழும் பண்ணைவீடுகளில் சென்று சுட்டுக்கொல்ல வேண்டாம். கைது செய்யவாவது அரசுகளுக்கு தைரியம் உண்டாகொல்லப்பட்டது கூலிக்கு வேலைசெய்யும் பழங்குடிகளல்லவா? வயிற்றுப்பாட்டுக்காக இத்தொழிலில் நிர்பந்திக்கப்பட்ட வர்களல்லவா இவர்கள் ? இவர்களுக்கு வாழ்வுரிமையை, வாய்ப்பை உறுதி செய்யத் தவறிய தமிழக அரசும் குற்றவாளி அல்லவாகடத்தப்பட்ட செம்மரங்கள் தமிழக துறைமுகம் வழியாகவே வெளிநாடு செல்கிறது என்பது ஊரறிந்த ரகசியமல்லவா? தமிழக காவல்துறைக்கு இதெல்லாம் தெரியாதாஇப்போது ஆளுங்கட்சியைச் சார்ந்தவரும் - ஆந்திர முதல்வரின் பூர்வீக மான சந்திரகிரியை வழியாகக் கொண்டு செயல்படும் ஒரு நாயுடுகாரின் கையை வலுப்படுத்த - காவல்துறையும் இவர்களும் சேர்ந்து திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட வெறியாட்டம் இது என்கிற தகவலில் உண்மை உண்டா? இல்லையாமுன்னாள் ஆளும் கட்சிப் பிரமுகரும் இப்போது சிறையிலிருந்தாலும் அங்கிருந்தபடியே கடத்தல் குழுவை இயக்கும் கெங்கிரெட்டி என்பவரின் கடத்தல் குழுவினரோடு சம்பந்தப்பட்டதாகக் கருதப்படுகிறவர்களே சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது சரியா? இந்தக்குழு கடப்பாவழி செயல்படுகிறது என்பது சரியாசெம்மரக் கடத்தலில் ஈடுபடும் இரு பெரும் புள்ளிகளுக்கு இடையில் உள்ள வியாபாரப் பகையால் வெடித்த சம்பவம் இது என்பது உண்மையா ?  கடந்த இரு வாரமாக ஆந்திர , தமிழக காவல்துறையினர் கூட்டாக வேலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள சில கிராமங்களில் தேடுதல் வேட்டை நடத்தியது உண்மையா? மேலும் அந்தக் கிராமமக்களை ஆந்திர எல்லையில் நுழைந்தால் சுட்டுக்கொல்வோம் என எச்சரித்ததும் மெய்யா? பொய்யாபத்து நாட்களுக்கு முன்பே `கண்டதும் சுட உத்தரவுஉயர் காவல்துறை அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு அரசால் வழங்கப்பட்டது உண்மையா? இந்தச் செய்தி தமிழக அரசுக்கும் தெரியுமாமே ! மெய்யா?`கேப் கரக்டா இருக்கா...“இப்ப... கட்டை கேப்ல ஒவ்வொரு பாடியா போடணும்பாத்தா நேச்சுரலா தெரியணும்... பாடிய கோணல் மாணலா போடணும்... “முகத்தத் திருப்புடா... முகம் தெரியணும்ல... கை, காலெல்லாம் அகலமா விரிச்சுக் கிடக்கணும்... அப்பதா நேச்சரா இருக்கும்... சப்பல் ஆங்காங்க சிதறிக்கிடக்கணும்.“ஓகேயா... பாடியெல்லாம் கவுண்ட் பண்ணியாச்சா...“இப்ப பிறஸூக்கு சொல்லீருங்கப்பா...“ஷ்... அப்பாட...மேலே உள்ளவை முகநூலில் அப்பணசாமியின் வர்ணனை . மிகைபோல் தோன்றினும் மிகையல்லவே! தமிழகத்தில் இதுபோல் எவ்வளவு பார்த்திருக்கோம்.அது கிடக்கட்டும் இதன் பின்னால் எழும் வேறு கேள்விகளையும் பார்ப்போம்; உண்மை விளங்கலாம். தீக்கதிர்.

No comments: