Wednesday, 1 April 2015

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, உமாபாரதிக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 20 பேருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதுகடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அயோத்தியில் கூடிய கரசேவகர்களால், பாபர் மசூதியின் ஒரு பகுதியை இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் பாபர் மசூதி இடிப்பில் குற்றம்சாட்டப்பட்ட எல்.கே.அத்வானி, கல்யாண் சிங், உமாபாரதி, வினாய் கட்டியார், முரளி மனோகர் ஜோஷி, சதீஷ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால் உள்ளிட்ட பலர் அந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என தீர்ப்பு அளித்தது.இந்நிலையில் அத்வானி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்களுக்கு எதிராக சதிதிட்டம் குற்றச்சாட்டு தொடர்பாக ஹாஜி மெஹ்பூப் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.அந்த மனுவில், அத்வானி உள்ளிட்டவர்கள் மீதான கிரிமினல் குற்றச்சாட்டை ரத்து செய்த அலகாபாத் நீதிமன்ற உத்தரவு செல்லாது என அறிவிக்குமாறு கோரியிருந்தார். மேலும், மத்தியில் ஆட்சி மாற்றத்தால் சிபிஐ இந்த வழக்கை திசை திருப்ப வாய்ப்பிருக்கிறது என்றும் குறிப்பிட்டிருந்தார்.இந்நிலையில், இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஹெச்.எல்.தத்து மற்றும் சி.கே.பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.மனுவை   விசாரித்த நீதிபதிகள் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங், சதீஸ் பிரதான், சி.ஆர்.பன்சால், அசோக் சிங்கால், கிரிராஜ் கிஷோர், சாத்வி ரிதாம்பரா, வி.எச். டால்மியா, மஹந்த் அவைத்தியநாத், ஆர்.வி.வேதாந்தி, பரம் ஹன்ஸ் ராம், ராம் சந்திர தாஸ், ஜகதீஷ் முனி மஹராஜ், பி.எல்.சர்மா, நிர்திய கோபால் தாஸ், தரம் தாஸ், சதீஸ் நகர், மோரேஷ்வர் சாவே ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 20 பேருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. நோட்டீஸ் மீது 4 வாரங்களுக்குள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதற்கிடையில், அலகாபாத் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து கடந்த 2010 மே மாதம் சிபிஐ ஒரு மனு தாக்கல் செய்தது. அதில், அத்வானி உள்ளிட்டவர்களுக்கு எதிரான கிரிமினல் குற்றச்சாட்டை நீக்கும் விவகாரத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் சரியான முடிவெடுக்கவில்லை என்றும், எனவே அவர்களுக்கு எதிரான கிரிமினல் சதி குற்றச்சாட்டை மீண்டும் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தது.ஆனால், அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான வாதங்களுடன் தயாராவதற்கு கூடுதல் காலஅவகாசம் வேண்டும் என சிபிஐ இன்று கோரியது. எனவே கூடுதல் அவகாசம் கேட்டுக் கொண்ட சி.பி..க்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

No comments: