அம்பேத்கர் தனது மக்களுக்காக மட்டுமின்றி, எல்லாத் தரப்பு மக்களுக்காகவும் சிந்தித்தார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே தன் வாழ்நாள் முழுவதையும் செலவழித்த அம்பேத்கர், அரசியல் நிர்ணய சபைக்கு எதிராகவே முதலில் இருந்தார். கிரிப்ஸ் தலைமையில் 1942-ல் வந்த குழுவிடம் “எங்கள் கைகள், கால்களைக் கட்டி சாதி இந்துக்களிடம் ஒப்படைத்துவிட்டீர்கள்” என்று முறையிட்ட அவர், இந்திய விடுதலை உறுதியானதும் தனது நாட்டுக்கும் தனது மக்களுக்கும் மிகச் சிறந்த அரசியல் அமைப்புச் சட்டம் தேவை என்பதை உடனடியாக உணர்ந்தார்.
எதிர்த்தரப்பில் இருப்பதாலேயே எல்லாவற்றையும் எதிர்க்கக் கூடாது என்ற கொள்கையில் திடமாக இருந்த அவர், நமது அரசியல் அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவராக இருந்தார் என்பது நாம் எல்லோரும் நன்கு அறிந்ததே. வரைவுக் குழுவில் பல புகழ் பெற்ற சட்ட வல்லுநர்கள் இருந்தாலும் அவர்கள் அனைவரும் அம்பேத்கரின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார்கள்....
மதுரையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக மதுரை ரேஸ் கோர்ஸ் அருகில் உள்ள டாக்டர்.அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க, மதுரை மாநகராட்சி முன்பிருந்து ஊர்வலமாக செல்லப்பட்டது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மதுரை மாவட்ட தலைவர் தோழர் ராஜகோபால் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு கன்வீனர் தோழர் செல்லக்கண்ணு முன்னிலைவகுக்க, தீண்டாமை ஒழிப்பு முன்னணியில் அங்கமாக உள்ள CITU, AIIEA, BSNLEU, SFI, DYFI மாதர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் விண்ணதிரும் கோஷங்களுடன் சென்று டாக்டர். அம்பேத்காருக்கு அஞ்சலி செலுத்தினர்....எஸ். சூரியன் D/S-BSNLEU.
No comments:
Post a Comment