Sunday 26 April 2015

சிறப்பாக நடைபெற்ற சின்னாளபட்டி கிளை மாநாடு.

அருமைத் தோழர்களே ! 25.04.2015  சனிக்கிழமை அன்று தோழர்.எஸ். ராஜன் தலமையில் மிகவும் சிறப்பாக  சின்னாளபட்டி கிளை மாநாடு நடைபெற்றது . மாநாட்டின் முதல் நிகழ்சியாக நமது BSNLEU சங்க கொடியை இந்த ஏப்ரல் மாதம் பணிநிறைவு பெறவிருக்கும் கிளைச் செயலர் தோழர்.எஸ் . மலையாண்டி ஏற்றிவைத்தார்.
மாநாட்டினை துவக்கிவைத்து  மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன் உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் நாடானது முடிந்த ஏப்ரல் 21 & 22 இரு நாட்கள் வேலை நிறுத்தம் குறித்தும், நாடுமுழுவதும், குறிப்பாக நமது மதுரை மாவட்டத்தில் போராட்ட பங்கேற்பு பற்றியும் விளக்கினார். கடந்த கால வேலைநிறுத்தத்தை காட்டிலும் அதிகமான பங்கேற்பு என்றாலும், மதுரை SSA சக்திக்கேற்ப வேலை நிறுத்த பங்கேற்பு இல்லையே  என்ற தனது வருத்தத்தை  பதிவு செய்தார்.இருப்பினும் நடந்து முடிந்த வேலைநிறுத்த வேள்வியில் தங்களை இணைத்துக் கொண்ட அனைத்து தோழர்களுக்கும் நன்றியையும், பாராட்டுக் களையும்  தெரிவித்தார். மேலும் எதிர் வரும் மே 1-ல் நமது அகில இந்திய தலைமையுடன் DOT செயலருடன் நடைபெற உள்ள பேச்சு வார்த்தையில் "SAVE BSNL" கோரிக்கையில் உரிய முன்னேற்றம்இல்லாதபட்சத்தில்உறுதியான்வலுவான போராட்டத்தை நடத்த இந்தியநாடு  முழுமையும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என தெரிவித்தார். ஏனெனில், தற்போது உள்ள மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மூர்க்கத்தனமாக மக்கள் விரோத கொள்கைகளை கடைப்பிடிக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார்.

 


 













அதன்பின் ஆண்டறிக்கை, வரவு - -செலவு  அறிக்கைகள் சமர்பிக்கப்பட்டு, ஏற்க்கப்பட்டபின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. வந்திருந்த மாநில, மாவட்ட சங்க நிர்வாகிகளுக்கும், கிளை செயலர்களுக்கும் கதராடை அனுவித்து கவிரவிக்கப்பட்டது. அதே போன்று இம் மாதம் பணிநிறைவு செய்ய உள்ள தோழர்.எஸ். மலையாண்டிக்கு, மாவட்ட செயலர் தோழர்.எஸ். சூரியன், மற்றும் தோழர்கள் குருசாமி, ஜோதிநாதன், ராஜன் ஆகியோர் சால்வை,துண்டு அணிவித்து பாராட்டினர். அதன்பின் மணியால் சங்க நிர்வாகிகள் தோழர்கள், பி .சந்திரசேகர்,  சி. செல்வின் சத்தியராஜ், எஸ். ஜான்போர்ஜியா ஆகியோர் சிறப்புரை நிகழ்தினர். இறுதியாக புதிய செயலர் தோழர். தண்டபாணி நன்றி கூற இனிதே கிளை மாநாடு நிறைவுற்றது. புதிய நிர்வாகிகள் பனி சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் மனதார வாழ்த்துகிறது....என்றும் தோழமையுடன்,எஸ். சூரியன் ---D/S-BSNLEU.

No comments: