Monday, 6 April 2015

குறைந்தபட்சம் ரூ.15000 -ஊரக வளர்ச்சி தொழிலாளர் மாநாடு.

உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர் களுக்கு குறைந்த பட்ச ஊதியம் மாதம் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டுமென ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்க தேனி மாவட்ட மாநாடு வலியுறுத்தி யுள்ளது.சங்கத்தின் தேனி மாவட்ட மாநாடு மாவட்டத் தலைவர் எம்.குருசாமி தலைமையில் தேனியில் நடைபெற்றது. ஜி.சுப்ரமணி பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார்.அஞ்சலி தீர்மானத்தை பி.காளியம்மாள் வாசித்தார் .மாநாட்டை விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் .லாசர் எம்எல்ஏ துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.முருகன் வேலை அறிக்கையையும் , மாவட்டப் பொருளாளர் டி.ஜெயபாண்டி வரவு- செலவு அறிக்கை யையும் சமர்பித்தனர். சிஐடியு மாவட்டத் தலைவர் பி.முருகேசன், மாவட்டப் பொருளாளர் என்.ராமநாதன், கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் ஜி.சண்முகம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் கே.ஆர்.கணேசன் நிறைவுரை யாற்றினார்.புதிய நிர்வாகிகள்மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்டத் தலைவராக சி.முருகன், ,துணைத்தலைவர்களாக பி.காளியம்மாள், எஸ்.பொம்மையன், கே.என்.ஜீவா, பி.சந்திரசேகர், பி.யேசுதாஸ், பி.ஈஸ்வரன், மாவட்டச் செயலாளராக டி.ஜெயபாண்டி, ரமணி துணைச் செயலாளர்களாக .பாண்டி, .ஜெயராமன், ஆர்.முருகன், வைரமுத்து, எஸ்.கனகராஜ், எம்.பாண்டியம்மாள், என்.மதுரை முத்து, பொருளாளராக ஜி.சுப்ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.தீர்மானங்கள்இம் மாநாட்டில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள் ஆகியோரை பணிநிரந்தரம் செய்து பணிக்கொடை, பென்சன் உள்ளிட்ட சலுகைகளை வழங்கவேண்டும். எஸ்.ஆர் புத்தகத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு உடனடியாக பதிவு செய்ய வேண்டும்.நிலுவைத் தொகை கிடைக்காத தொழிலாளர்களுக்கு உடனடியாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் துப்பரவுத் தொழிலாளர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரவேண்டும். ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரம் செய்யவேண்டும். பண்டிகை விடுமுறை காலங்களில் முழு விடுமுறை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 தோழர்களே ! தேனியில் நடைபெற்ற இம் மாநாட்டில் நமது தோழர்கள் "SAVE BSNL" கையெழுத்து இயக்கத்தை வெற்றிகரமாக நடத்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தேனி ரெவன்யு மாவட்டத் தோழர்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட பல முயற்ச்சிகளை எடுத்து கிட்டத் தட்ட அவர்கள் ஏற்றுக்கொண்ட 10,000 கையெழுத்தை பெற்றுள்ளார்கள் என்பதை நமது BSNLEU மதுரை  மாவட்ட சங்கம்  மனதார பாராட்டுகிறது.---என்றும் தோழமையுடன், எஸ். சூரியன்...D/S-BSNLEU.

No comments: