Thursday 2 April 2015

விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்.

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் -  யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்
என்ற பாரதியின் கூற்றிற்கேற்ப மேலைநாட்டு இலக்கியச் செல்வங் களைத் தமிழுக்குக் கொணர்ந்து வளம் சேர்த்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் . வேசு. ஐயர்என்று அழைக்கப்பட்ட வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் ஆவார். இவர் இந்திய விடுதலைக்காக தீவிரமாகப் போராடினார். சிறந்த தேசபக்தராகவும் திகழ்ந்தார். அதுமட்டுமல்லாது .வே.சு.ஐயர் சிறந்த இலக்கிய வாதிகவும், மொழி பெயர்ப்பாளராகவும் விளங்கினார். வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர் (. வே. சு. ஐயர்ஏப்ரல் 2 (1881 — ஜூன் 4- 1925) இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். இவர்   தமிழகத்திலுள்ள  திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்தவர்."

No comments: