ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. மேலும் இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி யுள்ளது.ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் அவரது சகோதரரும், சன்குழும நிறுவனங்களின் தலைவருமான கலாநிதி மாறன் உள்ளிட்ட 4 பேர் மற்றும் 4 நிறுவனங்கள் மீது தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி
முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாறன் சகோதரர்களின் ரூ.742 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment