Friday 17 April 2015

நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் நியமனம்...

நியூயார்க் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த இந்திய வம்சாவளிப் பெண் ராஜ ராஜேஸ்வரி.அமெரிக்காவின் நியூயார்க் நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி (43) நியமிக்கப்பட்டுள்ளார்சென்னையில் பிறந்த இவர், தனது 16 வயதில் அமெரிக்காவுக்குச் சென்றார். நியூயார்க் நகர நீதிமன்ற நீதிபதியாக இந்திய பெண் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. ராஜ ராஜேஸ்வரி இதற்கு முன்பு ரிச்மோண்ட் கவுண்டி மாவட்டத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணி புரிந்தார். அவரை நியூயார்க் நகர் மேயர் பில் டி பால்சியோ, நியூயார்க் நகர குற்றவியல்நீதிமன்றநீதிபதியாகநியமித்துள்ளார்.இது தொடர்பாக ராஜராஜேஸ்வரி கூறியது: எனக்கு இப்பதவி அளிக்கப்பட்டுள்ளதை கனவு போன்று உணர்கிறேன். இது நான் கற்பனை செய்ததற்கும் மேலானது. எனெனில் நான் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த பெண். எனக்கு இங்கு உயரிய பதவி கிடைத்துள்ளது. எனக்கு அளிக்கப்பட்டுள்ள பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு நீதித்துறையின் மேம்பாட்டுக்குஉதவுவேன்என்றார்.தெற்காசியா மற்றும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கர்களின் குழந்தைகள் உரிமை, குடும்ப வன்முறை வழக்குகளை ராஜ ராஜேஸ்வரி திறமையாக செயல்பட்டு பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதிபெற்றுத்தந்துள்ளார்.அமெரிக்காவில் நடைபெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் மற்றும் கோயில் விழாக்களில் பங்கேற்றுள்ள ராஜ ராஜேஸ்வரி தனது குழுவினருடன் பரத நாட்டியம் மற்றம் குச்சிப்புடி நடனங்களை அரங்கேற்றம் செய்துள்ளார். அவரது தாய் பத்மா ராமநாதனின் பெயரில் பத்மாலயா நாட்டிய அகாடமியை நடத்தி வருகிறார்.